Published:Updated:

``காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு பொம்மை ஆணையம்; அதை கலைக்க வேண்டும்!" - பொங்கிய மணியரசன்

பெ.மணியரசன்

ஆளும் கட்சி என்ற முறையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அணை உரிமை பறிப்பு சட்டத்தை ரத்து செய்ய மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். காவிரி உரிமைக்காக போராடியோர் மீது போட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

``காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு பொம்மை ஆணையம்; அதை கலைக்க வேண்டும்!" - பொங்கிய மணியரசன்

ஆளும் கட்சி என்ற முறையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அணை உரிமை பறிப்பு சட்டத்தை ரத்து செய்ய மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். காவிரி உரிமைக்காக போராடியோர் மீது போட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

Published:Updated:
பெ.மணியரசன்

‘’மேகதாது அணையை தடுப்போம், மேட்டூர்-முல்லைப்பெரியாறு அணைகளை காப்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க தலைவர் வீரப்பன், இச்சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பொறியாளர் பரந்தாமன், பொறியாளர் செந்தில்வேலன், தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் மருத்துவர் பாரதிசெல்வன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.

மூத்த பொறியாளர் வீரப்பன்
மூத்த பொறியாளர் வீரப்பன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பேசியபோது, ‘’தமிழ்நாட்டு மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, 2018-ம் ஆண்டு மத்திய அரசால் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆணையம் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை. கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட உத்தரவிடும் அதிகாரம் இல்லாத பொம்மை அமைப்பாகவே இது உள்ளது. எனவே இந்த பொம்மை ஆணையத்தை கலைத்து விட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். மழைக்காலங்களில் உபரி நீரை சேமிக்கவும், மின்சாரம் தயாரிப்பதற்காக மட்டுமே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதாக கர்நாடக அரசு சொல்கிறது. ஆனால் இது உண்மையல்ல. மேக்கேதாட்டூ அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தின் உயிர் நீரோட்டமாக உள்ள காவிரி நீர் உரிமையை மீட்க அனைத்து பகுதி மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். என்ன விலை கொடுத்தாவது மேக்கேதாட்டூ அணை கட்டுவதை தடுக்க வேண்டும். மேக்கேதாட்டூ அணை கட்டப்படாமல் தடுக்க அனைத்து கட்சிகள், உழவர் அமைப்புகள் கூட்டம் நடத்தி காவிரி காப்பு எழுச்சி நாள் என ஒரு நாளை அறிவித்து தமிழகம் தழுவிய போராட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேக்கேதாட்டூ அணைக்கு தடை கோரி உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்தி தடை ஆணை பெற சிறப்பு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

அணை பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்யக்கோரி மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு தொடுத்துள்ளது. அது மட்டும் போதாது. ஆளும் கட்சி என்ற முறையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அணை உரிமை பறிப்பு சட்டத்தை ரத்து செய்ய மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். காவிரி உரிமைக்காக போராடியோர் மீது போட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" என பொங்கியெழுந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க தலைவர் வீரப்பன் பேசியபோது ’’தெலங்கானாவில் 44,000 ஏரிகள், 93 ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டது. 195 கோடி ரூபாய் செலவில் காளிஸ்வரம் நீர் மேலேற்று திட்டத்தையும் அம்மாநில அரசு செயல்படுத்தியது. ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, அமராவதியை தலைநகராக அறிவிக்க முடிவு செய்த உடனேயே பட்டிச்சீமா நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்தினார். மற்ற மாநிலங்கள் எல்லாம் நீர்நிலை மேம்பாட்டில் மிகுந்த அக்கறையுடன் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

நிகழ்வில்
நிகழ்வில்

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அவ்வாறு இல்லை. இது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் ஏரிகளில், 20 ஆயிரம் ஏரிகளில் உள்ளூர் மக்கள் வண்டல் மண் எடுக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை தொழில் ஈடுபடக்கூடியவர்கள் இதனை எடுத்துக் கொள்வார்கள். இதனால் ஊராட்சி பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். தமிழக அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, நேர்மையான பொறியாளர்கள் அடங்கிய குழுவை கொண்டு இதனை கண்காணிக்கலாம்’’ என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, ‘காவிரியில் அதிகளவில் கழிவுநீரை கர்நாடகம் கலந்துவிடுகிறது. இதனால் காவிரிநீர் மாசடைகிறது. இதனை தடுக்க சட்ட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு முறையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள், இதனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். நெல் உற்பத்திக்கான செலவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு, நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என பல கோரிக்கைகள் தீர்மானத்தில் இடம்பெற்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism