Published:Updated:

வெங்காய விலை உயர்வுக்குக் காரணம் என்ன? எப்போது விலை குறையும்?

உலகிற்கே வெங்காயம் ஏற்றுமதி செய்த இந்தியா, தற்போது இறக்குமதியை நம்பியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், விலையைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் நிற்கிறது, மத்திய அரசு.

Onion Price Hike
Onion Price Hike

எப்போதாவது விலை எகிறும் வெங்காயம், இந்த ஆண்டு இரண்டு முறை உச்சம் தொட்டு, தேசத்தையே கலங்க வைத்துவிட்டது. குறிப்பாக, மத்திய அரசை மிரளச் செய்துவிட்டது வெங்காயம். 'ஏற்றுமதிக்குத் தடை' என்ற உச்சபட்ச ஆயுதத்தைப் பயன்படுத்தியும், விலை உயர்வுக்கு எதிரான போரில் தோல்வியடைந்துவிட்டது மத்திய அரசு.

விண்ணைத் தொடும் வெங்காய விலை!
விண்ணைத் தொடும் வெங்காய விலை!

வழக்கமாக வரத்துக் குறையும்போது விலை உயரும். பதுக்கல் காரணமாக விலை உயரும். ஆனால், இந்த முறை விலையேற்றத்துக்கு சூழல் மாற்றம் பெரும் காரணமாக இருக்கிறது. மழை காரணமாக பல மாநிலங்கள், விளைச்சலை எடுக்க முடியாமல் தவித்துக்கிடக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழக்கமான விளைச்சலில் 70 சதவிகிதத்தை இழந்துவிட்டன. கடந்த ஆண்டு ஏற்பட்ட விலை வீழ்ச்சி காரணமாக 40 சதவிகித விவசாயிகள் சாகுபடியைக் கைவிட்டனர். அதையும் மீறி சாகுபடி செய்த விவசாயிகள், வயல்களில் தேங்கிநின்ற மழைநீர், மகசூலை அழுகவைத்து, விவசாயிகளையும் அழவைத்துவிட்டது.

செப்டம்பர் மாதம் எகிறியது வெங்காய விலை. மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை, மத்திய சேமிப்புக் கிடங்கிலிருந்த வெங்காயத்தை சந்தைக்குக் கொண்டுவந்தது போன்ற செயல்களால் சற்று விலை குறைந்தது. ஆனால், மழை குறையவில்லை. மீண்டும் புரட்டி எடுத்த மழை, மகாராஷ்டிர விவசாயிகளின் வருமானத்தையும் புரட்டிப்போட்டுவிட்டது.

வெங்காயம்
வெங்காயம்
வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது? - மக்களவையில் கனிமொழி கேள்வி
இறக்குமதி செய்யும் நிலை!
உலகம் முழுக்க வெங்காயத்தை ஏற்றுமதி செய்த மகாராஷ்டிரா, தற்போது வெங்காயத்தை இறக்குமதிசெய்யும் நிலையில் இருக்கிறது. எகிப்து, ஈரான், ஹாலந்து நாடுகளிலிருந்து வாரம் 2,000 டன் வெங்காயம் மும்பைக்கு இறக்குமதியாகிறது.

30.11.2019 அன்றைய நிலவரப்படி வெங்காயவிலை!

தற்போது, ராஜஸ்தானில் புது அறுவடை நடந்துவருகிறது. அந்த வெங்காயம் டெல்லிக்கு அதிகம் செல்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து சாலை மார்க்கமாக, தினமும் இரண்டு டிரக்குகளில் வெங்காயம் இறக்குமதியாகிறது. அதனால் தலைநகரில் சராசரி விலையில் வெங்காயம் கிடைக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுக்க வெங்காயத்தை ஏற்றுமதி செய்த மகாராஷ்டிரா, தற்போது வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறது. எகிப்து, ஈரான், ஹாலந்து நாடுகளிலிருந்து வாரம் 2,000 டன் வெங்காயம் மும்பைக்கு இறக்குமதியாகிறது.

வெங்காய விலை
வெங்காய விலை

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ள நிலையில், வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள். அதனால் கிலோ 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதற்கு மாற்றாக ஆந்திராவிலிருந்து நமது சின்ன வெங்காயம் போலவே இருக்கும் 'சிட்டு வெங்காயம்' என்ற ஒருவகை வெங்காயத்தை இறக்குமதி செய்கிறார்கள். அதன் விலை கிலோ 40 முதல் 60 ரூபாய். ஆனால், அது நமது சின்னவெங்காயத்தைப் போல சுவையாக இருக்காது. எனவே, அதை அதிகமானோர் வாங்குவதில்லை.

பெரிய வெங்காய விலை எப்போது குறையும்?
குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து டிசம்பர் மூன்றாவது வாரம் முதல் புது வெங்காய வரத்து தொடங்கும். அதன்பிறகுதான் பெரிய வெங்காய விலை படிப்படியாகக் குறையும்.
வெங்காயம்
வெங்காயம்
`வெங்காய ஏற்றுமதிக்குத் தடை; இறக்குமதிக்கு ஆதரவு!’- மத்திய அரசு அதிரடி

வெங்காய விளைச்சல் குறைவு காரணமாக, தென் இந்தியாவில் கிலோ 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. வட இந்தியாவில் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலையைக் கட்டுப்படுத்தும் லகான் அரசு கையில் இல்லை. அது, தற்போது பருவநிலையின் கையில் இருக்கிறது. விலை கட்டுப்பாட்டுக்குள் வருவது அடுத்த அறுவடை முடிவைப் பொறுத்துதான். மழையில் தப்பித்து, விளைந்துவரும் வெங்காயம், டிசம்பர் மத்தியில் அறுவடைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து டிசம்பர் மூன்றாவது வாரம் முதல் புது வெங்காய வரத்து தொடங்கும். அதன்பிறகுதான் வெங்காய விலை படிப்படியாகக் குறையும் என்கிறார்கள் வியாபாரிகள்.