Published:Updated:

"கரூரில் விளையும் நெல்லை, அரிசியாக்கி இந்த மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும்!" மாவட்ட ஆட்சியர் தகவல்!

கண்காட்சி அரங்கில் ஆட்சியர்
News
கண்காட்சி அரங்கில் ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் தரமாக விளையும் நெல்லை, ஆலைகளின் மூலம் அரிசியாக உற்பத்தி செய்து கரூர் மாவட்ட நியாய விலை கடைகள் மூலம் உள்ளூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. - ஆட்சியர் பிரபு

"கரூரில் விளையும் நெல்லை, அரிசியாக்கி இந்த மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும்!" மாவட்ட ஆட்சியர் தகவல்!

கரூர் மாவட்டத்தில் தரமாக விளையும் நெல்லை, ஆலைகளின் மூலம் அரிசியாக உற்பத்தி செய்து கரூர் மாவட்ட நியாய விலை கடைகள் மூலம் உள்ளூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. - ஆட்சியர் பிரபு

Published:Updated:
கண்காட்சி அரங்கில் ஆட்சியர்
News
கண்காட்சி அரங்கில் ஆட்சியர்

"நடப்பு ஆண்டில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை, அதிக அளவில் நெல் மகசூல் செய்யும் பகுதிகளின் அருகாமையில் அமைக்கப்பட உள்ளன. மேலும், கரூர் மாவட்டத்தில் விளையும் தரமான நெல் மூலம் ஆலைகளில் உற்பத்தி செய்யும் அரிசியை கரூர் மாவட்ட நியாய விலை கடைகளில் விநியோகம் செய்வதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் அரிசி நமது மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட உள்ளது" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபு சங்கர் தலைமையில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 25 ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார். அதோடு, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக்கொண்டார்.

கண்காட்சி அரங்கில் ஆட்சியர்
கண்காட்சி அரங்கில் ஆட்சியர்

பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் பட்டு வளர்ச்சித் துறை காலிங் சார்பாக வேளாண் இடுபொருள்கள், விதைகள், கன்றுகள், ரோட்டாவேட்டர், பவர் டில்லர், மல்பெரி நடவு மற்றும் பட்டு வளர்ப்புமனை என ரூ. 19,91,590 மதிப்பிலான பொருட்களை 16 விவசாயிகளுக்கு வழங்கினார்.

அதேபோல், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல்த்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

கண்காட்சி அரங்கில் ஆட்சியர்
கண்காட்சி அரங்கில் ஆட்சியர்

தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பதில் அளித்து பேசுகையில்,

"நடப்பாண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யும் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் தரமாக விளையும் நெல்லை ஆலைகளின் மூலம் அரிசியாக உற்பத்தி செய்து கரூர் மாவட்ட நியாய விலை கடைகள் மூலம் உள்ளூர் மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முதல் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், நம் மாவட்டத்தில் விளையும் நெல் மூலம் உற்பத்தியாகும் அரிசிகளை நமது மாவட்ட மக்களே பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் உற்பத்தியாகும் நெல்லை வணிகர்களுக்கு விற்காமல், அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க வேண்டும்.

நெல்
நெல்

கடந்த ஆண்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுடன் வேளாண்மை துறை, நுகர்ப்பொருள் வாணிப கழகம், வருவாய்த்துறை குறு வட்டார அளவில் விவசாயிகளுடன் நெல் கொள்முதல் செய்வது தொடர்பான கூட்டம் நடத்தி, அதன்படி அட்டவணையின்படி அறுவடை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் பொருள்களை முழுமையாக விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வியாபாரிகள் விற்பனை செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாயனூர் கதவனை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கணக்கெடுக்கும் பணி முடிந்தவுடன், அவர்களுக்கான உரிய நஷ்டஈடு தொகையினை விரைவில் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.