Published:Updated:

99 கிலோமீட்டரில் பாரம்பர்ய உணவகம்!

99 கி.மீ காபி மேஜிக் உணவகம்
பிரீமியம் ஸ்டோரி
99 கி.மீ காபி மேஜிக் உணவகம்

பாரம்பர்யம்

99 கிலோமீட்டரில் பாரம்பர்ய உணவகம்!

பாரம்பர்யம்

Published:Updated:
99 கி.மீ காபி மேஜிக் உணவகம்
பிரீமியம் ஸ்டோரி
99 கி.மீ காபி மேஜிக் உணவகம்

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, உணவுதான் பெரிய பிரச்னை. பயணிகளுக்கான பெரும்பாலான உணவகங்களில் தரமான அதே நேரம் சுவையான உணவு கிடைக்காது. நாமே உணவு கொண்டு சென்றாலும், அமர்ந்து சாப்பிட இடமிருக்காது. இந்த இரண்டுக்கும் ஒரு தீர்வே கிடைக்காதா என்று யோசிப்பவர்களுக்குத் தீர்வாக நிமிர்ந்து நிற்கிறது, ‘99 கி.மீ காபி மேஜிக்’ உணவகம்.

உணவகத்தில் மனோ சாலமன்
உணவகத்தில் மனோ சாலமன்

10.07.2016 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் ‘99 கிலோ மீட்டர் காபி ஸ்டாப்... பயணிகளுக்காக ஒரு பாரம்பர்ய உணவகம்!’ என்ற தலைப்பில் இந்த பாரம்பர்ய மூலிகை உணவகத்தைப் பற்றி எழுதியிருந்தோம். அந்த வகையில் அதன் உரிமையாளரான மனோ சாலமன் பசுமை விகடன் வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். தற்போது, உணவகத்தைக் கொஞ்சம் பெரிதாகவும், பாரம்பர்யப் பொருள்கள் மற்றும் உணவுக்காகப் புதிதாகச் சில வசதிகளையும் செய்திருக்கிறார்.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 99 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது ‘99 கிலோமீட்டர் காபி மேஜிக்.’ வாகனங்களை நிறுத்த விசாலமான இடம், முகப்பில் குழந்தைகளுக்கான பாரம்பர்ய விளையாட்டுப் பொருள்கள், இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்கள் விற்பனை மையம், கைத்தறி உடைகள் விற்பனை மையம். இவற்றுக்கு நடுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிடும் வகையில் விசாலமான இடம், உணவகத்துக்கு எதிரில் பசுமைப் போர்த்திய மலை என ரம்மியமாக இருக்கிறது அந்தச் சூழல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். வெளிமாநிலப் பயணிகளுக்கு அவர்களின் பாரம்பர்ய வகைகளும் கிடைக்கின்றன. காஷ்மீர் தேன், துளசித் தேன், கொம்புத் தேன் என விதவிதமான தேன் வகைகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். எல்லா வகைகளிலும் ஒவ்வொரு பாட்டில் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. சுவை பார்த்துவிட்டு விரும்பினால் வாங்கலாம். செப்புக்குடங்கள், பானைகளில் விதவிதமான வடிவங்களில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது. சீரகக் குடிநீர், ஓமக் குடிநீர், நன்னாரித் தண்ணீர், வெட்டிவேர் தண்ணீர், தாகமுத்திக் குடிநீர் எனக் கொண்டு வந்து ஊற்றிக்கொண்டேயிருக்கிறார்கள். குடிக்கலாம்; பாட்டிலில் ஊற்றி எடுத்துக்கொண்டும் போகலாம். உணவகத்துக்கு வருபவர்களுக்கு மூலிகைக் குடிநீரும் வழங்கப்படுகிறது. எந்த வகையான உணவின் தயாரிப்பு முறை பற்றிக் கேட்டாலும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

அடுக்கி வைக்கப்பட்ட தேன், எண்ணெய், பாரம்பர்ய அரிசி வகைகள் உள்ளிட்ட பொருள்கள்
அடுக்கி வைக்கப்பட்ட தேன், எண்ணெய், பாரம்பர்ய அரிசி வகைகள் உள்ளிட்ட பொருள்கள்

உணவகத்தின் உரிமையாளர் மனோ சாலமனிடம் பேசினோம். “இந்திய ராணுவத்தில் விமானப்படையில் 12 வருடங்கள் வேலை பார்த்தேன். ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்தேன். `கையிலிருக்கும் தொகையை நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும்’ என நினைத்தேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில் ஒரு இட்லிக் கடை வைத்தேன். கடைக்கு வரும் வழியில் பயணிகள், குடும்பம் குடும்பமாகச் சாலையோர மர நிழலில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருக்கும் உணவைச் சாப்பிடுவதைப் பார்ப்பேன். சாலையோரங்களில், பாதுகாப்பில்லாத நிலையில் உண்பது மனதுக்கு வருத்தமாக இருந்தது. அதனால், `இங்கு அமர்ந்து உங்கள் உணவை உண்ணலாம். அதற்குப் பணம் செலுத்த தேவையில்லை’ என்ற அறிவிப்புப் பலகையை வைத்தேன். அத்துடன் கடையிலிருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்தேன். மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் இட்லிக் கடை, பாரம்பர்ய உணவகமாக மாறியது.

99 கி.மீ காபி மேஜிக் உணவகம்.
99 கி.மீ காபி மேஜிக் உணவகம்.

காலையில் சிவப்பரிசி இட்லி, வாழைப்பூ வடை, குதிரைவாலி பொங்கல், கைக்குத்தல் அவல் உப்புமா, முடக்கற்றான் அடை, தூதுவளை தோசை, களி, நாட்டுச்சர்க்கரை காபி என அசத்தலான உணவு கொடுக்கிறோம். இன்றைக்கு இந்த வழியாகப் போகும் இசையமைப்பாளர் இளையராஜா முதல் பல முக்கிய பிரபலங்கள் வரை உணவருந்திப் போகும் அளவுக்குக் கடை முன்னேறியிருக்கிறது. காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கடை செயல்படும். இங்கு பாரம்பர்யமான உணவுகள் மட்டும்தான். வரகரிசிச் சாப்பாடு, வெந்தயக்களி, சிறுதானிய சப்பாத்தி, வாழைப்பூ வடை, குதிரைவாலி பொங்கல், தினை பாயசம் என நிறைய உணவுகள் இருக்கின்றன. சீரகக் குடிநீர், ஓமம், வெட்டிவேர், நன்னாரி, தாகசாந்தி ஆகிய குடிநீர் வகைகள் மக்களுக்கு அருந்தக் கொடுக்கிறோம். மூலிகைத் தேநீர், சுக்குமல்லி தேநீர், பனங்கற்கண்டு மூலிகைப் பால் என மருத்துவ குணங்களைக்கொண்ட தேநீரை விற்பனை செய்கிறோம். இவை தவிர, பாரம்பர்ய தானியங்களும் புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பழக்கடை மற்றும் பழங்காலப் பித்தளைச் செம்பு பொருள்கள் விற்பனையும் இருக்கிறது” என்று அனைத்தையும் சுற்றிக்காண்பித்தபடி மனோகரன் தொடர்ந்தார். “இங்கே 25 பெண்கள் வேலை செய்கிறார்கள். எல்லோரும் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள்; ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். பொதுவாகவே பயணத்தின்போது, 100 கி.மீ தூரம் பயணம் செய்தவுடன் நமக்கு களைப்பு ஏற்படும். களைப்பு தீர தேநீர் அருந்துவோம், அதை மனதில் வைத்துத்தான் இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். `சென்னையைவிட்டு வெளியே வரும்போதும், சென்னைக்குப் போகும்போதும் நல்ல சூழ்நிலையில் நம் பாரம்பர்ய உணவை மக்கள் குடும்பத்தோடும் குதூகலத்தோடும் சாப்பிட்டுப் போக வேண்டும்’ என்பதுதான் என் விருப்பம்.

மூலிகைக் குடிநீர்
மூலிகைக் குடிநீர்

இங்கே தானிய வகைகளை விற்பனைக்கு வைத்திருக்கிறேன். அவற்றை வாங்கிச் செல்பவர்கள் சமைக்கத் தெரியாதவர்களாக இருந்தால், அவர்களுக்கு சமையல் குறிப்பு புத்தகத்தை இலவசமாகக் கொடுக்கிறேன். என்னால் முடிந்த அளவு பாரம்பர்ய ரகங்களையும், சிறுதானிய ரகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன். இங்கு மறுசுழற்சி செய்யப்படும் பைகளே வழங்கப்படுகின்றன.

‘‘நமது பண்பாடு விசாலமானது. இன்றைய குழந்தைகளுக்கு அதை நாம் சொல்லிக் கொடுப்பதில்லை. உணவு, விளையாட்டு, பதார்த்தங்கள் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு இங்கு அறிமுகம் செய்கிறோம்.’’

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் காய்கறிகள் பெரும்பாலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவைதான். நமது பண்பாடு விசாலமானது. இன்றைய குழந்தைகளுக்கு அதை நாம் சொல்லிக் கொடுப்பதில்லை. உணவு, விளையாட்டு, பதார்த்தங்கள் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு இங்கு அறிமுகம் செய்கிறோம். பாத்திரங்கள், பாரம்பர்ய சமையல் பொருள்கள், நொறுக்குத்தீனிகளை நியாயமான விலைக்கு விற்பனை செய்கிறோம். செக்கில் ஆட்டப்பட்ட நல்ல எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் மக்கள் முன்னிலையிலேயே எல்லா உணவுகளையும் சமைக்கிறோம். மூலிகைகள், விளையாட்டுப் பொருள்கள் என ஒரு மரபுக்கூடம் மாதிரி திட்டமிட்டிருக்கிறோம். `இது ஒரு கற்றல்கூடமாக மாற வேண்டும்’ என்பது என் கனவு. ஏழு வருடங்களில் அந்தக் கனவு நிறைவேறியிருக்கிறது. கடைக்கு எதிரிலிருக்கும் மலைப்பகுதி வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும்’’ என்றார். அந்த இயற்கைச் சூழல் நமக்கு அத்தனை இதமாக இருந்தது.

ஒவ்வோர் உணவிலும் ஒரு மூலிகை!

ணவகத்தில் சாப்பிட்டு விட்டு மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்த நித்யா என்பவரிடம் உணவகத்தைப் பற்றிய கருத்துகளைக் கேட்டோம். “இங்கிருக்கும் உணவுகளெல்லாமே நம் முன்னோர் சாப்பிட்ட உணவு வகைகள். ஆனால் இடையில் காணாமல் போய்விட்டன. ஒவ்வோர் உணவிலும் ஏதோ ஒரு மூலிகை இருக்கிறது. இங்கே தனியாக ஐந்து பானைகளில் மூலிகைக் குடிநீர் வைக்கப்பட்டிருக்கிறது.

நித்யா
நித்யா

நானும் ஒரு பாட்டிலில் பிடித்து வைத்திருக்கிறேன். இதைச் செய்ய நமக்கு நேரம் கிடைக்காது; வழிமுறைகளும் தெரியாது. ஆனால் இவர்கள் மூலிகைக் குடிநீரைத் தயாரிப்பது பற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நம் உணவுகளையும் வைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். வெளி உணவுகளை வைத்துச் சாப்பிட எந்த உணவகமும் அனுமதிப்பதில்லை. இவர்கள் அனுமதிக்கிறார்கள். இந்த முறை புதிதாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் இப்படியோர் உணவகம் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இனி இந்த வழியில் போகும்போது, இந்த உணவகத்தில்தான் சாப்பிடுவேன்” என்றார் மகிழ்ச்சியோடு.