Published:Updated:

மானாவாரிக்கு `மழைத்தூவான்'... நிலக்கடலைக்கு உகந்த நீர் மேலாண்மை!

மழை கிடைக்கலைன்னா, மானாவாரி விவசாயிகள் பலரும் கவலையோடதான் இருப்பாங்க. ஆனா, நாங்க கவலைப்படுறதில்லை. இயற்கை மழை கிடைக்காத நேரத்துல, ரெயின் கன் மூலமா செயற்கை மழையை உருவாக்கி, பயிர்களுக்கு உயிர் கொடுக்கிறோம்.

நிலக்கடலை
நிலக்கடலை

நீலகிரி தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிர் நிலக்கடலை. இறவை மற்றும் மானாவாரியில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, மானாவாரி விவசாயிகளின் விருப்பப் பயிர். அந்த வகையில், 4 ஏக்கர் நிலத்தில் மானாவாரிப் பயிராக நிலக்கடலையைச் சாகுபடியைச் செய்துவருகிறார் பரமேஸ்வரி. நாமக்கல் மாவட்டம், கொல்லபட்டி கிராமத்தில் இருக்கிறது இவரது தோட்டம். இறவைப் பாசனத்தில் கரும்பும், அதன் அருகிலுள்ள மானாவாரி நிலத்தில் நிலக்கடலையும் சாகுபடி செய்து வருகிறார்.

"ஒரு ஏக்கருக்கான நிலக்கடலை வருமானம் 46,000 ரூபாய். 120 நாள்கள்ல மானாவாரியில இந்த வருமானம் கிடைக்குது. செலவுனு பார்த்தா, உழவுக்கு 3,000 ரூபாய், விதைக்கு 3,600 ரூபாய், விதைப்புக்கு 1,000 ரூபாய், களை எடுக்க 8,000 ரூபாய், இடுபொருள் 3,000 ரூபாய், அறுவடை 10,000 ரூபாய். ஆக ஒரு ஏக்கருக்கு 28,600 ரூபாய் செலவாகுது. இதைக் கழிச்சிட்டா ஒரு ஏக்கருக்கு 18,400 ரூபாய் லாபம் கிடைக்குது. பருவமழை ஏமாத்திடுச்சு. ரெயின் கன்(மழைத்தூவான்) மூலம் பாசனம் செஞ்சதால வறட்சியில இருந்து பயிர்களைக் காப்பாத்த முடிஞ்சது. அதனாலதான் இந்த லாபத்தைப் பார்க்க முடியுது" என்றவர் மழைத்தூவான் பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

- பாரம்பர்ய நிலக்கடலை சாகுபடி குறித்து பரமேஸ்வரி பகிர்ந்தவற்றை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க > பாரம்பர்ய நிலக்கடலை... செயற்கை மழையில் இயற்கை விவசாயம்!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

"100 சதவிகித மானியத்துல, வேளாண்துறையிலதான் இந்த ரெயின் கன்னைக் கொடுத்தாங்க. அதைவெச்சு, மானாவாரிப் பயிரான நிலக்கடலைக்கும், இறவைப்பயிரான கரும்புக்கும் பாசனம் நடக்குது. இறவையும், மானாவாரியும் ஒரே இடத்துல செய்யறவங்க, இதைப் பயன்படுத்திக்கலாம்" என மழைத்தூவான் மூலமாக மானாவாரிப் பயிருக்குப் பாசனம் செய்துவருவது குறித்து விவரித்தார்.

"மானாவாரிப் பயிருக்கு மழைத்தண்ணிதான் உயிர் மாதிரி. ஆனா, வைகாசி, ஆனியில கிடைக்க வேண்டிய பருவமழை, இப்பல்லாம் சரியான நேரத்துல கிடைக்குறதில்லை. அதனால பல நேரங்கள்ல பயிர் கருகிடுது. இதனால வானத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கு. மழை கிடைக்கலைன்னா, மானாவாரி விவசாயிகள் பலரும் கவலையோடதான் இருப்பாங்க. ஆனா, நாங்க கவலைப்படுறதில்லை.

அறுவடை செய்த நிலக்கடலையுடன் பரமேஸ்வரி
அறுவடை செய்த நிலக்கடலையுடன் பரமேஸ்வரி

இயற்கை மழை கிடைக்காத நேரத்துல, ரெயின் கன் மூலமா செயற்கை மழையை உருவாக்கி, பயிர்களுக்கு உயிர் கொடுக்கிறோம். பக்கத்துலேயே எங்க வயல்ல இறவைப் பாசனம் நடக்குது. அங்கே இருக்குற மோட்டார் மூலமா, ரெயின் கன் வழியா தண்ணியைத் தெளிச்சுவிடுறோம். ஒரு ரெயின் கன் கருவி 60 அடி சுற்றளவுக்குத் தண்ணியைத் தெளிக்கும். இடம் மாத்தி மாத்தி வைக்குற வசதியோடதான் அந்தக் கருவி இருக்குது. ஒரு இடத்துல தெளிச்சதும் அடுத்த இடத்துக்குக் கொண்டு போய்வெச்சு தெளிக்கலாம்.

15 நாளைக்கு ஒரு தடவை 10 லிட்டர் தண்ணியில 300 மி.லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து, இலைவழி உரமாக ரெயின் கன் மூலம் கொடுக்குறோம். இதனால இலை சம்பந்தமான நோய்களைக் கொடுக்குற பூச்சிகளோட தாக்கம் ரொம்பக் குறைவா இருக்குது" என்றார் மகிழ்ச்சியுடன்.

- பாரம்பர்ய நிலக்கடலை சாகுபடி குறித்து பரமேஸ்வரி பகிர்ந்தவற்றை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க > பாரம்பர்ய நிலக்கடலை... செயற்கை மழையில் இயற்கை விவசாயம்!

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |