Published:Updated:

மாட்டு வண்டியில் மூன்றாவது சக்கரம்... மாடுகளின் சிரமத்தைக் குறைக்க மகாராஷ்டிராவில் புதிய முயற்சி!

மாட்டு வண்டியில் மூன்றாவது சக்கரம்...
பிரீமியம் ஸ்டோரி
மாட்டு வண்டியில் மூன்றாவது சக்கரம்...

கண்டுபிடிப்பு

மாட்டு வண்டியில் மூன்றாவது சக்கரம்... மாடுகளின் சிரமத்தைக் குறைக்க மகாராஷ்டிராவில் புதிய முயற்சி!

கண்டுபிடிப்பு

Published:Updated:
மாட்டு வண்டியில் மூன்றாவது சக்கரம்...
பிரீமியம் ஸ்டோரி
மாட்டு வண்டியில் மூன்றாவது சக்கரம்...

ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு மாட்டு வண்டி உற்ற நண்பனாக இருந்து வந்தது. இடுபொருள்களை வயலுக்குக் கொண்டு செல்லவும், விளைபொருள்களை வயலிலிருந்து வீடு மற்றும் சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும் மாட்டுவண்டியைத்தான் கடந்த காலத் தலைமுறை விவசாயிகள் பயன் படுத்தினர். இதற்காக வளர்க்கப்படும் காளை மாடுகளால் வயல்களுக்கு வளமான உரம் கிடைத்தது.

ஆனால், காலப்போக்கில் டிராக்டர்களின் வருகையால் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மாட்டுவண்டிகளை விவசாயிகள் படிப்படி யாகக் கைவிடத் தொடங்கி, தற்போது இவற்றைப் பார்ப்பதென்பதே அரிதாகி விட்டது. ஆனால், ஓர் ஆச்சர்யம்... மகாராஷ்டிரா கிராமங்களில் தற்போதும் கூட மாட்டு வண்டிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மகா ராஷ்டிராவில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய தோட்டங் களிலிருந்து கரும்பை சர்க்கரை ஆலைகளுக்குக் கொண்டு செல்ல மாட்டு வண்டிகளைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். நாசிக், புனே உள்ளிட்ட மாவட்டங்களில் வெங்காயம் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது. இதைச் சந்தைக்குக் கொண்டு செல்லவும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப் படுகின்றன.

மாட்டுவண்டியில் பொருத்தப்பட்ட மூன்றாவது சக்கரம்
மாட்டுவண்டியில் பொருத்தப்பட்ட மூன்றாவது சக்கரம்

மாட்டு வண்டிகளில் அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்வதால், மாடுகள் படும் துயரத்தையும் இவற்றை ஓட்டிச் செல்லும் விவசாயிகள் படும் சிரமத்தையும் பெருமளவு குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து, மாட்டுவண்டிக்கான மூன்றாவது சக்கரத்தை உருவாக்கி விவசாயிகள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

சாங்கிலி மாவட்டம், இஸ்லாம்பூரில் ராஜாராம் பாபு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெருமளவில் கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு அறுவடைக் காலங்களில் நாள்தோறும் இக்கல்லூரி வழியாகத்தான் மாட்டுவண்டிகளில் டன் கணக்கில் கரும்பு கொண்டு செல்லப்படும். அதிக பாரத்தால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டு வண்டியை இழுத்துச் செல்லும்.

அதைக் கண்டு மிகவும் கவலை அடைந்த, அக்கல்லூரி மாணவரான சௌரப் போஸ்லே மற்றும் அவரின் நண்பர்கள், இதற்கு ஏதேனும் தீர்வு காண வேண்டும் என நினைத்தனர். மாட்டுவண்டி பயன்பாட்டை நிறுத்த முடியாது. அதேசமயம் அதை எப்படி எளிமையாக்குவது என்று ஆலோசித்தனர். அதில் உருவானதுதான் சாரதி என்ற மூன்றாவது சக்கரம்.

கரும்பு வயலில் மாட்டு வண்டி
கரும்பு வயலில் மாட்டு வண்டி

விபத்தில் சிக்கும் வண்டிகள்... படுகாயம் அடையும் மாடுகள்

இதுகுறித்துப் பேசிய சௌரப் போஸ்லே, “கரும்புகளைக் கொண்டு செல்லக்கூடிய மாட்டு வண்டிகள், சாலைகளில் ஆங்காங்கே இருக்கக்கூடிய வேகத்தடை மற்றும் குண்டு குழிகளால் அடிக்கடி விபத்தில் சிக்குவதைப் பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக இருந்தது. மாடுகள் படுகாயம் அடைவதோடு, வண்டியை ஓட்டிச் செல்லும் விவசாயியுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். வண்டியும் சேதம் அடையும். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தபோது தான், நான்காம் ஆண்டு மாணவர்களான நாங்கள் பொறியியல் துறை சார்ந்து ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டிய தருணம் வந்தது.

விவசாயிகளிடம் ஆலோசித்தோம்

நானும் சக மாணவர்களான ஆகாஷ் கதம், ஆகாஷ் கெய்க்வாட், நிகில், ஓம்கார் ஆகியோர் சேர்ந்து இது குறித்து ஆலோசித் தோம். எங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடமும் ஆலோசனைகள் கேட்டோம். இதன் பிறகு தான், அதிக பாரம் ஏற்றப்பட்ட வண்டியை மாடுகள் மிகவும் எளிதாக இழுத்துச் செல்லும் வகையில், வண்டியின் முன்பக்கத்தில் இரு மாடுகளுக்கும் நடுவில் மூன்றாவது சக்கரத்தை உருவாக்க முடிவு செய்தோம்.

இது தொடர்பாக எங்கள் பேராசிரியர் களிடம் கூறியபோது அவர்கள் இத்திட்டத் துக்கு ஒப்புதல் கொடுத்ததோடு, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தனர். கோலாப்பூர் பல்கலைக் கழகம், எங்களுடைய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததோடு, நிதியுதவி செய்யவும் ஒப்புக் கொண்டது.

கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்
கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

மனமுவந்து பாராட்டும் விவசாயிகள்

எங்களுடைய கண்டுபிடிப்புத் திட்டத் துக்குச் சாரதி என்று பெயரிட்டு பணிகளைத் தொடங்கினோம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இப்பணியைத் தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரிக்குள் செய்து முடித்தோம். மூன்றாவது சக்கரத்தை நேரடியாக விவசாயிகளிடம் கொண்டு சென்று மாட்டு வண்டியில் மாட்டி சோதனை செய்து பார்த்தோம். வெற்றிகரமாக அமைந்தது. விவசாயிகள் மனமுவந்து எங்களைப் பாராட்டினார்கள்.

காப்புரிமை

நாங்கள் உருவாக்கிய மூன்றாவது சக்கரம், வண்டியில் இருக்கும் பாரத்தில் 85 சதவிகிதத் தைத் தாங்கும் தன்மை கொண்டது. இதனால் மாடுகள் வண்டியை எளிதில் இழுத்துச் செல்ல முடியும். அதிக எடை காரணமாக வண்டிகள் விபத்திலும் சிக்காது. சோதனை முயற்சியாக இப்போது நாங்கள் உருவாக்கி யுள்ள மூன்றாவது சக்கரத்தை, அதிக அளவில் உற்பத்தி செய்து. விவசாயி களுக்குக் குறைந்த விலையில் கொடுக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்.

இதற்காகச் சில நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுடைய இந்தப் புதிய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறோம்’’ என உற்சாகமாகத் தெரிவித்தார்.

வண்டியின் பாரத்தைச் சக்கரம் தாங்கும்!

மூன்றாவது சக்கரத்தை தனது மாட்டு வண்டியில் பொருத்தி ஓட்டிப்பார்த்த இஸ்லாம்பூர் விவசாயி ஏக்நாத் முண்டே பேசும்போது, ‘‘மாணவர்கள் கண்டுபிடித் துள்ள மூன்றாவது சக்கரம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேடு பள்ளங்களில் மாட்டு வண்டி எளிதாக ஏறி இறங்கும் வகையில் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றா வது சக்கரம் முன்புறம் இரு பக்கங்களில் திரும்பக்கூடிய வகையில் வடிவகைப் பட்டுள்ளது.

முன்புறத்தில் பொருத்தப்படும் இந்த மூன்றாவது சக்கரம் சுழல்வதால், வண்டியை மிக எளிதாக மாடுகள் இழுத்துச் செல்கிறது. வண்டியின் பாரத்தை இந்தச் சக்கரம் தாங்கிக்கொள்கிறது. பாரம் ஏற்றப்பட்ட வண்டி மிக வேகமாகச் செல்லவும் இந்த மூன்றாவது சக்கரம் பேருதவியதாகப் பங்களிப்புச் செய்கிறது. இது வரவேற்கத்தக்கது. என்னைப் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயன் அளிக்கக் கூடியது’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்
கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

டிராக்டருக்குச் சிறந்த மாற்று, மாட்டுவண்டிதான்...

இந்த மூன்றாவது சக்கரம் மிகவும் பயனுள்ள புதிய தொழில்நுட்பமாக இருந்தும்கூட, ஆரம்பத்தில் பிரபலமடையாமல் இருந்தது. ஆனால், இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியான பிறகுதான் பிரபலமடைந்தது. இதைத் தாங்களே உற்பத்தி செய்து கொடுக்கச் சில நிறுவனங்களும் முன் வந்துள்ளன. இத்திட்டத்தை மாணவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடிக்க டாக்டர் சுப்ரியா சாவந்த், டாக்டர் கும்பாகர், டாக்டர் சுஷ்மா குல்கர்னி, பேராசிரியர் எஸ்.காட்டேஜ் ஆகியோர் பேருதவியாக இருந்து வழிகாட்டியிருக்கிறார்கள். மூன்றாவது சக்கரம் இந்தியா முழுவதும் வலம் வந்து பரவலடைந்தால், மீண்டும் மாட்டுவண்டிகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும். காளை மாடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்குவார்கள். டிராக்டர்களை இயக்குவதற்கான எரிபொருளின் விலை ராக்கெட் வேகத்துக்கு எகிறிக் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் மாட்டுவண்டிகள் மறு பிரவேசம் செய்தால், விவசாயிகளுக்கு பணச் செலவு பெருமளவில் மிச்சமாகும்.