Published:Updated:

பாலைவன நாட்டில் உலகின் மிகப்பெரிய செங்குத்து தோட்டம்!

கீரைகள்

வழக்கமான விவசாயத்தைவிட 95 சதவிகிதம் குறைவான நீர் இந்த செங்குத்து பண்ணைக்குச் செலவாகிறது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளை இதில் பயன்படுத்துவதில்லை. சமைக்கும் முன்பு கீரைகளைக் கழுவ வேண்டியதில்லை, அந்த அளவு தூய்மையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

பாலைவன நாட்டில் உலகின் மிகப்பெரிய செங்குத்து தோட்டம்!

வழக்கமான விவசாயத்தைவிட 95 சதவிகிதம் குறைவான நீர் இந்த செங்குத்து பண்ணைக்குச் செலவாகிறது. பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளை இதில் பயன்படுத்துவதில்லை. சமைக்கும் முன்பு கீரைகளைக் கழுவ வேண்டியதில்லை, அந்த அளவு தூய்மையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

Published:Updated:
கீரைகள்

எரிபொருள் எண்ணை வளமிக்க ஐக்கிய அரபு நாடுகள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைப் பிற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கின்றன. அதிலும் குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளிடம் இருந்து கீரைகள், பழங்கள் உட்பட அதிகமான உணவுப்பொருள்களை வாங்குகிறது.

அரபு நாடுகளில் விளை நிலமும் தண்ணீரும் குறைவாக இருப்பதால், 90% உணவை இறக்குமதி செய்கிறது. இந்த நிலையை மாற்ற நினைத்த அவர்கள் தங்கள் நாட்டின் சூழலுக்கு ஏற்ப விவசாயம் செய்யும் தொழிலை நவீன தொழில்நுட்ப முறையில் அமைத்து வருகின்றனர். பாலைவனத்திலும் உணவை உற்பத்தி செய்ய முடியும் என்பதை அவர்கள் அமைத்த செங்குத்து தோட்டம் மூலம் உணர்தியுள்ளனர். உலகின் மிகப்பெரிய ஹைட்ரோபோனிக் பண்ணையை துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமைத்தனர்.

செங்குத்து பண்ணை
செங்குத்து பண்ணை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தப் பண்ணையை 40 மில்லியன் டாலர் முதலீட்டில் செங்குத்தாக அமைத்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 3,30,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பண்ணையில் ஆண்டுதோறும் 1 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான கீரைகளை உயர்தரத்துடன் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறுகின்றனர். நவீன தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்தப் பண்ணையை, எமிரேட்ஸ் ஃப்ளைட் கேட்டரிங் மற்றும் க்ராப் ஒன் நிறுவனமும் இணைந்து கூட்டு முயற்சியால் உருவாக்கியுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், வழக்கமான பயிரைவிட 95 சதவிகிதம் குறைவான தண்ணீரை மட்டுமே இந்தப் பண்ணை எடுத்துக்கொள்கிறது. நீர் ஆவியாகும்போது, அது மீண்டும் தண்ணீராக மாறி பயன்தரும் வகையில் கணினி மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. பண்ணையின் மூடிய - லூப் அமைப்பு நீர் பயன்பாட்டைக் குறைப்பதோடு, கீரைகள் வளரும் வேகத்தையும் அதிகரிக்கிறது.

இந்த சாகுபடியில் 1 மில்லியனுக்கும் அதிகமான தாவரங்களை வளர்க்க்கலாம் என்று சொல்கின்றனர். தற்போது ஒரு நாளைக்கு 3,000 கிலோ கீரை உற்பத்தியைக் கொடுக்கிறது இந்த செங்குத்து பண்ணை.

செங்குத்து பண்ணை | உள்ளரங்கம்
செங்குத்து பண்ணை | உள்ளரங்கம்

பண்ணையின் மூடிய-லூப் அமைப்பு நீர் பயன்பாடு மற்றும் செயல்திறனை அதிகரிக்க ஆலைகள் மூலம் தண்ணீரை சுழற்றுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. நீர் ஆவியாகும்போது, அது மீட்டெடுக்கப்பட்டு தொழில்நுட்பத்தால் மறுசுழற்சி செய்யப்படுகிறது. பாரம்பர்ய வெளிப்புற விவசாயத்துடன் ஒப்பிடும்போது ஒவ்வோர் ஆண்டும் 250 மில்லியன் லிட்டர் தண்ணீர் இதன் மூலம் சேமிக்கப்படுகிறது.

எண்ணெய், எரிவாயு வளங்களைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரக நாடு, பொருளாதார வளர்ச்சியில், நீண்ட கால உணவுப் பாதுகாப்பு முக்கியம் என நினைத்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

ECO 1 என அழைக்கப்படும் இந்தப் பண்ணை, இப்போது உலகின் மிகப்பெரிய செங்குத்து பண்ணை என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. 330,000 சதுர அடிக்கும் அதிகமான வசதியுடன், பலவகை கலவை கீரைகள் வளரும் விதமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி ஒரு வயலில் கீரைகளை வளர்ப்பதற்குத் தேவையானதைவிட 95 சதவிகிதம் குறைவான நீரைப் பயன்படுத்துகிறது. மேலும், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை இங்கு சுத்தமாகப் பயன்படுத்துவதில்லை. இது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டு உடனடியாக கடைகளுக்கும், விமான நிறுவனத்துக்கும் அனுப்பப்படுகிறது. கீரைகளைச் சாப்பிடுவதற்கு முன்பு கழுவ வேண்டியதில்லை. அந்த அளவு தூய்மையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

கீரைகள்
கீரைகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மக்களுக்குத் தேவைப்படும் கீரைகளை ஓரளவு இப்போது பூர்த்தி செய்ய முடிகிறது. எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை இந்தப் பண்ணைகள் பூர்த்தி செய்யும் என அதற்கான பண்ணைகளை அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

அபுதாபியில், ஐக்கிய அரபு அரசாங்கம் சமீபத்தில் 100 மில்லியன் டாலர் செலவு செய்து உள்ளரங்கு விவசாயத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன் செங்குத்து விவசாய முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான புதிய ஆராய்ச்சி வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பண்ணை மரபுவழி ஆற்றலில் இயங்குகிறது. எதிர்காலத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உணவைத் தரும் விவசாயம் மிக முக்கியமானது என்பதை உணர்ந்ததால், விளை நிலமும் தண்ணீரும் குறைவாகவே உள்ள போதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கது. எல்லா வளமும் உள்ள நம் நாட்டில் விவசாயத்துக்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் ஏராளம் உள்ளன.