Published:Updated:

அடடா... 15 லட்சம் ரூபாய் செலவில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு கூரை அமைத்த கிராமம்!

நெல் மூட்டைகள் பாதுகாப்பதற்கான ஷெட்

வெளிநாடு வாழ் இளைஞர்கள் பெரிய அளவில் நிதி உதவி செய்ததுடன் அங்கிருந்தபடியே நெல் மூட்டைகள் பாதுகாப்பதற்கான ஷெட் எப்படி அமைக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினர்.

அடடா... 15 லட்சம் ரூபாய் செலவில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு கூரை அமைத்த கிராமம்!

வெளிநாடு வாழ் இளைஞர்கள் பெரிய அளவில் நிதி உதவி செய்ததுடன் அங்கிருந்தபடியே நெல் மூட்டைகள் பாதுகாப்பதற்கான ஷெட் எப்படி அமைக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினர்.

Published:Updated:
நெல் மூட்டைகள் பாதுகாப்பதற்கான ஷெட்

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய சொந்த செலவில்,நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் பாதுகாப்பதற்காக அரசு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான ஷெட் கட்டியுள்ளனர். ரூ 15 லட்சம் செலவில் கான்கிரீட் தூண் மற்றும் ஆஷ்பெட்டாஷ் சீட் மூலம் மேற்கூரை அமைத்துள்ளனர். அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் விவசாயத்தை காப்பதற்காக அந்த கிராமத்தினர் செய்துள்ள செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

நெல் கொள்முதல் நிலையத்திற்காக அமைக்கப்பட்ட ஷெட்
நெல் கொள்முதல் நிலையத்திற்காக அமைக்கப்பட்ட ஷெட்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகின்ற செய்தி அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கும். பல போராட்டங்களுக்கிடையே பாடுப்பட்டு விளைவிக்கப்பட்ட நெல் மழையில் நனைவது விவசாயிகளை மட்டுமின்றி பலரையும் மன வேதனைக்கு உள்ளாக்கும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுப்பதற்காக அந்த கிராமத்தினர் தங்கள் சொந்த செலவில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான ஷெட் அமைத்துள்ளனர்.

வெட்டவெளியில் மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகள்
வெட்டவெளியில் மழையில் நனைந்து வரும் நெல் மூட்டைகள்

அரசு செய்து தரும் என காத்திருக்காமல் அரசுக்கு உறு துணையாக இருக்கக்கூடிய அவர்களின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு வழிக்காட்டக்கூடிய முன்மாதிரி கிராமம் என்ற அடையாளத்தையும் பெற வைத்துள்ளது. ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளிசம் பேசினோம். ''விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்ட எங்க ஊர்ல ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல் மூட்டைகளை தெக்குத் தெருவில் உள்ள நாடக மேடைக்கு அருகே அமைந்துள்ள திறந்தவெளி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் போடுவது வழக்கம். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஏற்றி செல்லப்படும் வரை நெல் காய வைக்கும் தளத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருப்பர். நெல் மழையில் நனையாமல் இருக்க பெரிய தார்ப்பாய் மூலம் மூடி விடுவார்கள் அதன் ஊழியர்கள்.

ஆழிவாய்க்கால் கிராமத்தினர் அமைத்திருக்கும் ஷெட்
ஆழிவாய்க்கால் கிராமத்தினர் அமைத்திருக்கும் ஷெட்

இந்த நிலையில் பெரு மழை பெய்கின்ற சமயத்தில் நெல் மூட்டைகள் நனைந்த சம்பவங்களும் உண்டு. சுமார் இருபது வருடங்களாக செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு என நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான ஷெட் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்க ஊரை சேர்ந்த இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் வந்தது.

ஒரு முறை செய்கிறோம் அதனை தரமாக அமைத்து விட வேண்டும் என அனைவரும் களத்தில் இறங்கினர். ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யக்கூடிய வெளிநாடு வாழ் இளைஞர்கள் முதுகெலும்பாக இருந்து அதனை சாத்தியமாக்கியிருக்கின்றனர். விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரிடம் நிதி திரட்டப்பட்டது. யாரும் மறுக்காமல் அவரவர் வசதிகேற்ப நிதி கொடுத்தனர். வெளிநாடு வாழ் இளைஞர்கள் பெரிய அளவில் நிதி உதவி செய்ததுடன் அங்கிருந்தபடியே நெல் மூட்டைகள் பாதுகாப்பதற்கான ஷெட் எப்படி அமைக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினர்.

மழையில் நனைந்த நிலையில்
மழையில் நனைந்த நிலையில்

ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜிடம் விஷயத்தை கூறி அனுமதி பெற்று ஊர் பொது இடமான செங்குருணி கரையில் பணிகள் தொடங்கப்பட்டது.4,200 சதுர அடி இடத்தில் நான்கு புறமும் கான்கிரீட் தூண் அமைக்கப்பட்டது. அதன் மேல் இரும்பு கம்பி மற்றும் ஆஸ்பெட்டாஸ் பயன்படுத்தி மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. சுமார்15 லட்சம் செலவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பாக அடுக்கி வைக்க கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஷெட்டுக்குள் கான்கீரிட் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் பாக்கி இருக்கிறது. முழுமையான பணிகள் முடிவடைந்த பிறகு விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்படும். ஷெட் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முறையான சாலை வசதியில்லை. அரசின் உதவியோடு அதனை செய்து தருவதாக ஊராட்சி மன்றத் தலைவர் கூறியிருக்கிறார்.

விவசாயிகள்,
இளைஞர்கள் அமைத்துள்ள ஷெட்
விவசாயிகள், இளைஞர்கள் அமைத்துள்ள ஷெட்

ஒவ்வொன்றையும் அரசு செய்து தர வேண்டும் என காத்திருக்காமல் நம்மால் முடிந்தவற்றை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதன் மூலம் அரசுக்கு உறுதுணையாக இருக்க கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுக்காப்பதற்காக நெல் கொள்முதல் நிலையத்துகான ஷெட் அமைக்கப்பட்டு வருவதை அறிந்த பலரும் எங்க கிராமத்தை பாராட்டுவது மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது'' என்றனர்.