Published:Updated:

`இனியும் போராட முடியாது; வாழையை அழிக்கும் தேனி விவசாயிகள்!’ - மாற்றுப் பயிருக்கு மாறுவதில் தீவிரம்

வெட்டி அழிக்கப்படும் வாழை மரங்கள்
News
வெட்டி அழிக்கப்படும் வாழை மரங்கள்

வாழை விவசாயிகள் பலர், தனது நிலத்தில் பயிர் செய்துள்ள வாழை மரங்களை அழித்துவிட்டு, மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய நிலத்நிலத்தைத் தயார் படுத்தி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, விளை பொருள்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமம், வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் உள்ள பிரச்னை என வாழை விவசாயிகள் பலர் பெரும் நஷ்டத்தை சந்தித்துவருகிறார்கள். இந்நிலையில், வாழை விவசாயிகள் பலர், தனது நிலத்தில் பயிர் செய்துள்ள வாழை மரங்களை அழித்துவிட்டு, மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய நிலத்தைத் தயார் படுத்திவருகின்றனர்.

வாழை விவசாயி
வாழை விவசாயி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, வைகை ஆற்றங்கரையில் டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, பெருமாள்பட்டி, முதலக்கம்பட்டி, மூனாண்டிபட்டி, டி.புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இவற்றில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளையும் வாழைக்காய் மற்றும் வாழை இலை, ஆண்டிபட்டி மற்றும் வத்தலக்குண்டு சந்தைகளுக்கு கொண்டுசெல்லப்படும். ஆனால், ஊரடங்கு காரணமாகப் போக்குவரத்து சிரமம் காரணமாக, வாழை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவருகிறார்கள்.

வாழை மரங்கள்
வாழை மரங்கள்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய வாழை விவசாயி ஒருவர், ``வாகனப் பற்றாக்குறை, வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை போன்ற காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், போதிய விலை இல்லாததுதான் எங்களை பெரிய அளவில் பாதிக்கிறது. மேலும், எங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும் வாழை இலை விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாக்கள், திருமணம், ஹோட்டல்கள் என அனைத்தும் தடைபட்டுள்ளதால், வாழை இலைப் பயன்பாடு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. இதனால், எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் அதிகம். இனியும் வாழையை வைத்து போராட முடியாமல், அதனை வெட்டி அழித்து வருகிறோம். அடுத்ததாக, காய்கறி போட்டு பிழைத்துக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார் வருத்ததோடு.