Published:Updated:

ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

செங்கரும்பு
செங்கரும்பு

முழுக்க முழுக்க இயற்கை முறையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரடியாக அங்கு சென்றோம்.

விவசாய பரப்பு அதிகம் கொண்ட தேனி மாவட்டத்தில் சின்னமனூர் மற்றும் தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் சில நூறு ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. சின்னமனூர் அருகே உள்ள புகழ்பெற்ற சுயம்பு சனீஸ்வர பெருமான் கோயில் அருகே முழுக்க முழுக்க இயற்கை முறையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரடியாக அங்கு சென்றோம்.

செங்கரும்பு
செங்கரும்பு
ஏக்கருக்கு ரூ.5 லட்சம்: இயற்கை முறையில் கொடித் தக்காளி சாகுபடி செய்வது எப்படி?

தேனியில் இருந்து உப்புக்கோட்டை வழியாக சென்றால் குச்சனூர் விநாயகர் கோயில் பின்புறம்தான் செங்கரும்பு தோட்டம் உள்ளது. விவசாயி செல்லத்துரையைச் சந்தித்துப் பேசினோம்.

செங்கரும்பு
செங்கரும்பு
தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லை பெரியாறு... `ஜில்'லென்ற படங்கள்!

"என்னுடைய சொந்த ஊர் குச்சனூர்தான். மதுரையில் வழக்கறிஞராக உள்ளேன். ஒருபுறம் வழக்கறிஞர் தொழில் என்றால், மறுபுறம் விவசாயம். முல்லைப்பெரியாறு தண்ணீர் தாராளமாக இருப்பதால், இப்பகுதியில் நெல்தான் பிரதானமாக இருக்கும். சிலர் கரும்பு பயிர் செய்வார்கள். அதிலும், ஆலைக்கரும்புதான் அதிகம். நானும் ஆலைக்கரும்பு சாகுபடி செய்திருக்கிறேன். ஒரு புதிய முயற்சியாக முழுக்க இயற்கை முறையில் செங்கரும்பு பயிர் செய்யலாம் எனத் தோன்றியது. அதற்குக் காரணம் பசுமை விகடன்தான். ஒரு இதழ் விடாமல், நானும், என் மனைவியும் பசுமை விகடன் படித்துவிடுவோம். இயற்கை முறையில் கரும்பு என்பது சவாலான விஷயம் என அனைவரும் கூறினார்கள். ஆனால், நாங்கள் முயற்சி செய்தோம். இப்போ வளர்ந்து அறுவடை நிலையில் உள்ளது” என்றவரிடம்,

இயற்கை முறையில் கரும்பு சாகுபடி என்பது எப்படி சாத்தியமானது? என்னவெல்லாம் செய்தீர்கள்? என்றோம்.

செல்லதுரை
செல்லதுரை
``88 மரங்கள்ல மாச வருமானமா ரூ.88,000 கிடைக்குது!"- அத்திச் சாகுபடியில் அசத்தும் விவசாயி

"மொத்தம் 30 சென்ட் நிலத்தில் செங்கரும்பு சாகுபடி செய்திருக்கிறேன். கடந்த வருடம் பொங்கல் தினத்தன்று, சின்னமனூரில் செங்கரும்பு விற்பவர்களிடம், `கரும்பு சாகுபடி செய்ய இருக்கிறேன். எனக்கு கரும்புக் கரணைகள் வேண்டும்’ எனக் கேட்டேன். அவர்களும், நன்கு பருத்த கருணைகளாகக் கொடுத்தனர். 2,000 கரணைகளை 4,000 ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கரணையில் இருந்து குறைந்தது 3 முதல் 9 வரை கரும்பு வளர்ந்துள்ளது. மொத்தம் தோராயமாக 9,000 கரும்புகள் தோட்டத்தில் உள்ளன.

வாங்கிவந்த கரணைகளை நட்டு, காலை மாலை என இரண்டு வேளை தண்ணீர் விட வேண்டும். மெல்ல வேர் பிடித்து வளரும் கரணைகள், மூன்று மாதத்தில் பெரிதாகிவிடும். பின்னர் தோகையை உரித்துவிடுவதுதான் வேலை. அதைத் தவிர பராமரிப்பு என ஏதும் இல்லை. செங்கரும்பு சாகுபடி செய்யும் பலரும், பலவிதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் எனப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. தேனியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து கிரீன் பிளஸ் என்கிற இயற்கை கம்போஸ்ட் உரம் வாங்கிவந்தேன். இது கரும்பு சக்கையை நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் மொலாசஸ் என்ற பொருளில் இருந்து செய்தது. கரணைகளை மண்ணில் நட்ட பின்னர், இந்த உரத்தைப் போட வேண்டும். இது கரணைகள் வேர் பிடித்து வளர உதவும்.

செங்கரும்பு
செங்கரும்பு

30 சென்டில் 3 மூட்டை கிரீன் பிளஸ் உரம். ஒரு மூட்டையில் 50 கிலோ உரம் இருக்கும். மூட்டை ஒன்று 100 ரூபாய். அதைத்தொடர்ந்து, 20 நாள்களுக்கு ஒரு முறை, அஜோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ், விரிடி, பஞ்சகவ்யம் ஆகியவற்றைப் போட வேண்டும். இவை, பயிர் ஆரோக்கியமாக வளரத் தேவையான சத்துகளைக் கொடுக்கும். குறிப்பாக வேர் அழுகள் ஏற்படாது. இவை போட்ட 10 நாள்கள் கழித்து, 10 லிட்டர் தண்ணீரில், 100 மில்லி மீன் அமிலத்தைக் கலந்து தெளித்துவிட வேண்டும். தொடர்ச்சியாக இதைச் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம், களைகளை எடுப்பது, தோகைகளை உரித்துவிடுவது என இருந்தால்போதும். பத்து மாதங்களில் சுவையான இயற்கை செங்கரும்பு அறுவடைக்கு தயாராகிவிடும்” என்றார் புன்னகையோடு.

30 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்சாமரச் சோளம்... இளம் விவசாயி மீட்டெடுத்தது எப்படி?

ஏதேனும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டதா? எனக் கேட்டோம்.

"அப்படி ஏதும் இல்லை. பொதுவாக ஆலைக்கரும்பு, தென்னை, நெல் என்று விவசாயம் செய்துவிட்டு, அனுபவமே இல்லாத செங்கரும்பை பயிர் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். செலவும் பெரிதாக இல்லை. பராமரிப்பும் குறைவு. முதல் முயற்சியே வெற்றி. இதுபோக, தென்னையில் ஐந்தடுக்கு முறையில் மரக்கன்றுகள் நட்டிருக்கிறேன். மகோகனி, பலா, கிராம்பு, ஈட்டி, எலுமிச்சை போன்றவை. ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என ஆர்வம்தான். வேற ஒண்ணும் இல்லை” என்றார் எளிமையாக.

அடுத்த கட்டுரைக்கு