Published:Updated:

``தக்காளியை யாரும் பறிப்பதில்லை...”- விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

தேனியில் தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தக்காளி
தக்காளி

தேனி மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தக்காளி
தக்காளி

வெங்காயம், தாக்காளி, அவரை, வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் பெரும்பாலும், தேனியைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் விளைவிக்கப்பட்டு, அருகே இருக்கும் சந்தைகளுக்கும் மதுரை, திண்டுக்கல் போன்ற அண்டை மாவட்டங்களுக்கும், கேரளாவில் உள்ள சந்தைகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

தேனி மாவட்டத்தின் அல்லிநகரம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில், இறவைப் பாசன முறையில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக, மழைக்காலங்களில் தக்காளி விளைச்சல் பாதிப்படைவதால் வரத்து குறையும். இதனால் விலையும் அதிகரிக்கும். ஆனால், தற்போது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்பட்டதன் காரணமாக வரத்து அதிகரித்து உரிய விலை கிடைக்காமல் போயுள்ளது.

தக்காளி
தக்காளி

ஒரு கிலோ தக்காளி வெறும் 6 ரூபாய் முதல் 8 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது. போதிய விலை கிடைக்காததன் காரணமாகச் செடியில் உள்ள தக்காளிகளை சில விவசாயிகள் பறிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்! இதனால், பழங்கள் தக்காளிச் செடியிலேயே அழுகிய நிலையில் காணப்படுகின்றன.

நம்மிடம் பேசிய தக்காளி வியாபாரி ஒருவர், ``தக்காளி வரத்து அதிகரித்திருப்பதால், சந்தைக்கு வரும் தக்காளிகளைக் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை சரியாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம்” என்றார். விலை வீழ்ச்சி காரணமாகத் தக்காளி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.