Published:Updated:

`தனிமனித இடைவெளி; மாஸ்க் அணிந்து நடவுப்பணி!' - தேனியில் இரண்டாம்போக நெல் சாகுபடி

மாஸ்க் அணிந்து நெல் நடவு செய்யும் பெண்கள்
மாஸ்க் அணிந்து நெல் நடவு செய்யும் பெண்கள்

பெரியகுளம் அருகே இரண்டாம்போக நெல் சாகுபடிப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஒருபுறம் ஊரடங்கு காரணமாக, விவசாயப் பொருள்கள் தேக்கம், போதிய விலை இல்லை என்ற நிலை இருந்தாலும் மறுபுறம் விவசாயப் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், பெரியகுளம் அருகே இரண்டாம்போக நெல் சாகுபடிப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாஸ்க் அணிந்து நெல் நடவு செய்யும் பெண்கள்
மாஸ்க் அணிந்து நெல் நடவு செய்யும் பெண்கள்
`வெளி ஆட்களா... நோ என்ட்ரி; டிரம்களில் சோப்புத்தண்ணீர்!’ -தேனி கிராமங்களில் கடும் கட்டுப்பாடுகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிணற்றுப் பாசனத்தில் இரண்டாம் போக, நெல் நடவுப்பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம் பேசிய போது, ``கொரோனா பயம் காரணமாக, வேலைக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில் பெரிய சிரமமாக உள்ளது. கிடைக்கும் ஆட்களும் தொடர்ச்சியாக வேலைக்கு வருவதில்லை. முன்னயெல்லாம் ஒரு நாளில் 3 ஏக்கருக்கு நாத்து நடுவோம். ஆனால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, ஒரு ஏக்கருக்குதான் நடவு செய்ய முடிகிறது. இதனால் செலவு இரட்டிப்பாகிறது.

மாஸ்க் அணியும் பெண்
மாஸ்க் அணியும் பெண்
`பார்த்துப் பார்த்து வளர்த்தோம்; என்ன செய்யுறதுன்னே தெரியல..!’- கலங்கும் தேனி வாழை விவசாயிகள்

கிணற்றுப்பாசனத்தில்தான் நடவு செய்கிறோம். இருந்தபோதும் கோடை மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அறுவடை நேரம், இந்தக் கொரோனா பிரச்னைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். பார்க்கலாம் காலம்தான் கை கொடுக்க வேண்டும். கொரோனா காரணமாகத்தான் ஆட்கள் வேலைக்கு வர பயப்படுகிறார்கள். அதனால், இப்போது வேலைக்கு வருபவர்களுக்கு மாஸ்க் கொடுத்திருக்கிறோம். மேலும், சமூக இடைவெளியில், நடவுப்பணிகள் நடைபெறுகின்றன. எங்க பிழைப்பே இந்த விவசாயம்தான். அதைக் கொரோனாவுக்காக விடுக்கொடுக்க முடியுமா?” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு