Published:Updated:

`வைகை பற்றி பேசும் சு.வெங்கடேசன், முல்லை பெரியாறு பற்றியும் பேச வேண்டும்!' - விவசாயிகள் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு

``நாடாளுமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர்களெல்லாம் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடுகின்றனர். எதற்கெல்லாமோ குரல் கொடுக்கும் சு.வெங்கடேசனுக்கு முல்லை பெரியாறு தண்ணீருக்காகக் காத்திருக்கும் 10 லட்சம் விவசாயிகளைப் பற்றிக் கவலையில்லாமல் அமைதியாக இருக்கிறார்."

`வைகை பற்றி பேசும் சு.வெங்கடேசன், முல்லை பெரியாறு பற்றியும் பேச வேண்டும்!' - விவசாயிகள் வலியுறுத்தல்

``நாடாளுமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர்களெல்லாம் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடுகின்றனர். எதற்கெல்லாமோ குரல் கொடுக்கும் சு.வெங்கடேசனுக்கு முல்லை பெரியாறு தண்ணீருக்காகக் காத்திருக்கும் 10 லட்சம் விவசாயிகளைப் பற்றிக் கவலையில்லாமல் அமைதியாக இருக்கிறார்."

Published:Updated:
முல்லைப் பெரியாறு

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கண்காணிப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு தமிழக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் இருந்து அணையின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யும் அவசியம் இல்லை என மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் அதில், `அணை பலமாக உள்ளது. கடந்த 2021 நவம்பர் 30-ம் தேதி முதல் தொடர்ந்து 18 நாள்களுக்கு அணையின் நீர்மட்டம் 142 அடியாக நிலைநிறுத்தப்பட்டது. எனவே, மீண்டும் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்.பி சு.வெங்கடேசன்
எம்.பி சு.வெங்கடேசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையே அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அணை பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு செய்யக்கோருவதை தமிழக அரசு ஏற்கக் கூடாது எனக் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தபால் துறை, ரயில்வே துறை, தொல்லியல் துறை தொடர்பான விவகாரங்களில் தமிழர்களை வஞ்சித்து வரும் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ஐந்து மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஆதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணை குறித்து பேசாதது ஏன் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வைகை நதி குறித்தும், கீழடி குறித்தும் எழுதி பிரபலமடைந்த சு.வெங்கடேசனுக்கு வைகையில் ஓடுவது வைகைத் தண்ணீரல்ல முல்லை பெரியாற்று தண்ணீர் என்பது தெரியுமா, முல்லை பெரியாறு தண்ணீரை குடித்து வளர்ந்த அவர், ஒரு நாள்கூட அணையின் பக்கமிருந்து நியாயமான குரலை எழுப்பவில்லை.

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகாவில் உள்ள மஞ்ச மலையில் புதிய அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த இடதுசாரிகளான தேவிகுளம் ராஜேந்திரன், பீர்மேடு பிஜுமோள், உடும்பஞ்சோலை ஜெயசந்திரன், ஜோயிஸ் ஜார்ஜ், ஒன் டூ த்ரீ எம்.எம்.மணி, வாழூர் சோமன் உள்ளிட்டோர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

மேலும், முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாகப் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, கேரள மாநில இடதுசாரி அரசு மத்திய வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டது. கேரள இடதுசாரிகளான அச்சுத மேனன் காலத்திலிருந்து, ஈ.கே.நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன், பினராயி விஜயன் வரை முல்லை பெரியாறு அணைக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முல்லை பெரியாறு அணையில் தமிழர் நிலத்தின் உரிமைகளை எல்லாம் கேரள அரசு பறித்துவிட்டார்கள். 2006 மற்றும் 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு அணை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இன்று வரை தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

நாடாளுமன்ற மக்களவையிலும், மேலவையிலும் கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர்களெல்லாம் முல்லை பெரியாறு அணைக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடுகின்றனர். ஆனால், எதற்கெல்லாமோ குரல் கொடுக்கும் சு.வெங்கடேசனுக்கு முல்லை பெரியாறு தண்ணீருக்காகக் காத்திருக்கும் 10 லட்சம் விவசாயிகளைப் பற்றிக் கவலையில்லாமல் அமைதியாக இருக்கிறார்.

வைகை
வைகை

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் லிங்கம், 5000 அடி உயரத்திலுள்ள, தடைசெய்யப்பட்ட பகுதி எனக் கேரள மாநில அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு நடந்தே சென்று கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் அணையைப் பார்வையிட்டு, தான் ஓர் உண்மையான மக்கள் தொண்டன் என்பதை நிரூபித்தார். ஆனால், கேரளத்தை இடதுசாரிகள் ஆளும் இந்தக் காலத்தில், ஓர் இடதுசாரியாக, நாடாளுமன்ற உறுப்பினராகக்கூட வெங்கடேசனால் முல்லை பெரியாறு அணைக்குள் செல்ல முடியவில்லை.

இந்த சூழலால் தமிழகத்தின் நீராதாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணமாக இருப்பது அவர் ஏற்றுக்கொண்ட தத்துவத்தை ஏற்றுக்கொண்ட இன்னொரு இடதுசாரி. எனவே, அவர் முல்லை பெரியாறு குறித்து பேச மறுக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism