Published:Updated:

`அது ரகசியம்.. யார்கிட்டேயும் சொல்ல மாட்டோம்!’- மவுசு குறையாத அல்லிநகரம் காட்டுக் காளான்

`எப்போதும் காட்டுக் காளானுக்கு என ஒரு மவுசு உண்டு' என்கின்றனர் காளானை விற்பனை செய்பவர்கள்.

காட்டுக் காளான்
காட்டுக் காளான்

மலையடிவாரப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் முளைக்கும் காட்டுக் காளான்களைச் சேகரித்து, தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். `மழைக்காலங்களில் காட்டுக் காளான்களின் வரத்து அதிகமாக இருக்கும்' என்கின்றனர் இதனை விற்பனை செய்பவர்கள்.

காட்டுக் காளான்
காட்டுக் காளான்

காட்டுக் காளான் விற்பனை செய்யப்படுகிறது என்றாலே சுற்றுவட்டாரத்தில் இருந்து மக்கள் திரள்வதும் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால், காட்டுக் காளானைப் பறித்துக் கொண்டு வருபவர்களுக்கு மவுசு கூடிக் கொண்டே போகிறது.

லட்சங்களில் விலைபோகும் `காட்டுக் காளான்...' காரணம் இதுதான்!

காட்டுக் காளானை விற்பனை செய்பவர்களிடம் பேசினோம். ``மழைக்காலம், பனிக்காலத்தில் மட்டும் காளான்களை விற்பனை செய்வோம். மற்ற நாள்களில் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுவோம். எங்கு சென்றால் காளான் கிடைக்கும் என எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அதை ரகசியமாக வைத்துக்கொள்வோம். வேறு யாரிடமும் சொல்ல மாட்டோம்.

காட்டுக் காளான்
காட்டுக் காளான்

முன்னரெல்லாம் பெரும்பாலானோரின் தோட்டங்களில் காட்டுக்காளான் கிடைக்கும். அவர்களே காளானைப் பிடுங்கி வீட்டுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். காலப்போக்கில் ரசாயன மருந்து தெளித்ததால், காளான் முளைக்காமல் போய்விட்டது. அதனால்தான் இதை வியாபாரமாக மாற்றிக்கொண்டோம்.

36,499 பேர்... 13 ஆண்டுகள் ஆய்வு..!- புராஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் காளான்

இப்போதெல்லாம், கோழிக்கறியை யாரும் விரும்புவதில்லை. மீன் சாப்பிடலாம் என்றாலும்கூட பலநாள்கள் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட மீன்கள்தான் பெரும்பாலும் கடைக்கு வருகின்றன. ஆட்டுக்கறி, காளான் ஆகியவற்றைத்தான் மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதிலும், இந்தக் காட்டுக் காளானைச் சாப்பிடுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது.

காட்டுக் காளான்
காட்டுக் காளான்

ரோட்டோரத்தில் காட்டுக் காளானை வைத்தால் போதும், எத்தனை கிலோ கொண்டுவந்தாலும் ஒரு மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்துவிடும். கிலோ 500 ரூபாயிலிருந்து 750 ரூபாய் வரை விற்பனை செய்வோம். எவ்வளவு சொன்னாலும் வாங்குறதுக்கு ஆள் இருக்கு. ஏனென்றால், அவ்வளவு சத்து இதில் இருக்கிறது” என்றனர் உற்சாகத்துடன்.

ருசியான, சத்தான காட்டுக் காளானை நீங்கள் சுவைத்திருக்கிறீர்களா? கமென்ட் ப்ளீஸ்..!