Published:Updated:

`திடீர் நோய்த் தாக்குதல்.. 200 ஏக்கர் சோகம்!' -சின்ன வெங்காயத்தால் கலங்கும் தேனி விவசாயிகள்

கருகும் சின்ன வெங்காயம்
கருகும் சின்ன வெங்காயம்

தேனி மாவட்டத்தில், திடீர் கருகல் நோய் காரணமாக, சின்னவெங்காய விவசாயிகள் தவித்துவருகிறார்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகை புதூர் ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயப் பயிர்
சின்ன வெங்காயப் பயிர்

மதுரை, தேனி, திண்டுக்கல் சந்தைகளுக்கு அனுப்பப்படும் சின்ன வெங்காயம், அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், கருகல் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், விவசாயிகளுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது மட்டுமல்லாமல், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

`தண்ணீர்த் திருட்டுக்காக நடந்த கொலை!' -வீடியோ கான்ஃபரன்ஸில் ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிபதி

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய சங்கரமூர்த்திப்பட்டி விவசாயி ஐயப்பன், ``பொதுவாக சின்னவெங்காயத்தை 60 நாளிலிருந்து 65 நாள்களில் அறுவடை செய்வோம். இந்தமுறை 40 வயது நாளில் திடீரென கருகல் நோய் தாக்கியது. உடனே, மருந்துகள் வாங்கி வந்து அடித்தோம். ஆனால், கட்டுப்படவில்லை. நோய்த் தாக்குதல் வீரியமடைந்து தற்போது மொத்தப் பயிரும் நாசமடைந்துள்ளது.

கருகும் சின்ன வெங்காயம்
கருகும் சின்ன வெங்காயம்

விதை வெங்காயம் கிலோ 67 ரூபாய்க்கு வாங்குகிறோம். நான் 22 மூட்டை வாங்கிப் பயிர் செய்தேன். அனைத்தும் வீணாகிவிட்டது. ஏக்கருக்குக் குறைந்தது 85 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்கிறார்கள் வெங்காய விவசாயிகள். அனைவருக்கும் பெரிய நஷ்டம்தான். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார்

`கடைசியில் அவன காப்பாத்த முடியலையே..!' - கிணற்றில் விழுந்த சிறுவனால் கலங்கிய தேனி கிராமம்

தொடர்ந்து பேசிய விவசாயி கணேசன், ``திடீர் நோய்த் தாக்குதலால் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. இப்பகுதி வெங்காய விவசாயிகள் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். சிலர், வீட்டில் பிரச்னை உருவாகி தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைக்கிறார்கள். அரசு நிவாரண உதவி ஏதும் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார் அவர்.

இதுதொடர்பாக வேளாண் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்ட போது, ``பிரச்னை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. விரைவில் நோய்த் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு