Published:Updated:

`இந்த ஆண்டு தண்ணீர் பிரச்னை இருக்காது!' கல்லணை திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட கல்லணை

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும்.3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவு என்பதே கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது. விவசாயிகள் பாதிக்காத வகையில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படும்

`இந்த ஆண்டு தண்ணீர் பிரச்னை இருக்காது!' கல்லணை திறப்பு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும்.3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவு என்பதே கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது. விவசாயிகள் பாதிக்காத வகையில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படும்

Published:Updated:
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட கல்லணை

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு, இதன் மூலம் 3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள இருப்பதாகவும், முதல் கட்டமாக 924 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்லணை
கல்லணை

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்போல் ஜூன் 12ம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து கடந்த 24-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வந்தடைந்த நிலையில் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி, கல்லணை கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்காக கல்லணையில் உள்ள கரிகால சோழன், அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் நவதானியங்கள் மற்றும் மலர் தூவி கல்லணையை திறந்து வைத்தனர். இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கல்லணையை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு
கல்லணையை திறந்து வைத்த அமைச்சர் கே.என். நேரு

கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே கல்லணையில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டன. ஆறு மற்றும் வாய்க்கால்களில் தூர் வாரும் பணிகளும் நடைப்பெற்றன.

முன் கூட்டியே கல்லணை திறக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியிருந்தாலும் கல்லணை கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் பல இடங்களில் புதிய பாலம் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் கல்லணை, வடவாறு உள்ளிட்ட ஆறுகளில் முழு கொள்ளவில் தண்ணீர் திறக்காமல் குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் கடைமடை பகுதிகளுக்கும் குறித்த நேரத்தில் தண்ணீர் சென்று சேருமா? என்ற சந்தேகமும் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது. கல்லணையை திறந்து வைத்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ``கல்லணையின் கீழ் பகுதியில் 3.38 லட்சம் ஏக்கரில் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. மொத்தத்தில் மேட்டூர் அணைக்கு கீழ் 5.21 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட உள்ளது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் 924 ஏரிகள் நிரப்பப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் மேலும் 400 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

கல்லணை
கல்லணை

கடைமடைக்கு காவிரியில் தண்ணீர் சென்ற பிறகு, 36 ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்படும். சம்பிரதாயமாக கல்லணை கால்வாயில் 100 கன அடி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. கல்லணை கால்வாய், வடவாறு ஆறுகளில், கட்டுமானப் பணிகள் பத்து நாள்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதன் பிறகு, அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் முழுமையாக திறக்கப்படும். குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்கும். 3.38 லட்சம் ஏக்கர் பரப்பளவு என்பதே கடந்த ஆண்டை விட கூடுதலாக உள்ளது. விவசாயிகள் பாதிக்காத வகையில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படும். தென்மேற்கு பருவ மழை குறையாது என்ற பெரிய நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு சாகுபடிக்கு தேவையான தண்ணீர் பிரச்சனை இருக்காது. கடந்த காலங்களில் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்காமல் காலம் தாழ்த்தி தண்ணீர் திறக்கப்பட்டதால் வீணாக கடலில் கலந்தது. அப்படியில்லாமல் தண்ணீரை கொண்டு சேர்த்து படிப்படியாக அனைத்து ஏரிகளும் நிரப்பப்படும் “ என்றார்.

கல்லணை திறப்பு விழா
கல்லணை திறப்பு விழா

டெல்டா மாவட்ட பாசனத்திற்காக முன்கூட்டியே கல்லணை திறக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி தொடங்கி நாகை வரை சென்று தூர் வாரப்பட்ட பணிகளை ஆய்வு செய்யவிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism