Published:Updated:

100 ஆண்டுகள் போராட்டம்... சாலை அமைத்துச் சாதித்த விவசாயிகள்..!

புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் விவசாயிகள்

முயற்சி

நிலத்திற்குச் சென்று வரச் சாலைவசதி இல்லாமல் 100 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்ட விவசாயிகளின் கனவு நனவாகியிருக்கிறது. விவசாயிகள் ஒன்றிணைந்து, சொந்த நிலம், பணம் கொடுத்துத் தங்கள் நிலங்களுக்குச் சாலை வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது கே.பேட்டை ஊராட்சி. இந்த ஊராட்சியையொட்டி இருக்கிறது, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வரும் கருப்பத்தூர். கே.பேட்டை ஊராட்சியில் உள்ள திம்மாச்சிபுரத்துக்கும், கருப்பத்தூருக்கும் இடையில், 333 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் அனைத்தும், திம்மாச்சிபுரம், கள்ளப்பள்ளி, கருப்பத்தூர், பிள்ளாபாளையம், லாலாபேட்டை, கொடிக்கால் தெரு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, 400 விவசாயிகளுக்குச் சொந்தமானவை. இந்த விவசாய நிலங்களுக்குச் சென்று வரச் சாலை வசதி இல்லை.

100 ஆண்டுகள் போராட்டம்... சாலை அமைத்துச் சாதித்த விவசாயிகள்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திம்மாச்சிபுரத்துக்கும், கருப்பத்தூருக்கும் இடையில் ஓடும் பள்ளவாய்க்காலில் இரண்டு பக்கமும், தலா இரண்டடி அகலத்தில் கரைகள் உள்ளன. அந்தக் கரைகளில் ஒரு ஆள் நடந்து செல்ல முடியும். அதுவும், புல் பூண்டுகள் புதர்கள்போல மண்டி, ஒரு ஆள்கூடப் போகமுடியாத நிலை. தற்போது வாய்க்காலின் வடக்குக்கரையின் இறக்கத்தில் உள்ள விவசாயிகள் சிலர், சாலைக்காகக் கொஞ்சம் நிலங்களை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் மண் சாலை அமைக்கப்பட்டு எளிதாகச் சென்றுவர முடிகிறது.

இதைச் சாத்தியமாக்கியவர் கே.பேட்டை ஊராட்சிமன்றத் தலைவரான தாமரைச்செல்வி கதிர்வேல். அவரிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“அந்த 333 ஏக்கர் நிலங்களுக்கும் போய்வர பாதை இல்லை. அதனால 400 விவசாயிகளும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அந்த நிலங்கள்ல பெரும்பாலும் வாழை வெள்ளாமைதான் நடக்கும். ஆனா, வெள்ளாமை செய்ய ஒவ்வொரு பொருளையும் வயலுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கறதுக்குள்ள நாக்கு தள்ளிடும். சுமை கூலிக்குப் பயந்தே நிறைய பேர் விவசாயத்தை விட்டுட்டாங்க.

புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் விவசாயிகள்
புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் விவசாயிகள்

எல்லாத்தையும் 2 கிலோ மீட்டர் தலையில தூக்கிட்டுப் போகணும். 50 கிலோ உர மூட்டையைத் தூக்கிட்டுப்போக 25 ரூபாய். வாழைக்குப் போடுற சாக்குக் குப்பையைத்(தொழுவுரம்) தூக்கிட்டுப் போக, சாக்கு ஒன்னுக்கு 20 ரூபாய். அந்த ஒரு சாக்கு குப்பையோட விலை 5 ரூபாய்தான். ஆனா, சுமைகூலி 20 ரூபாய். அதேபோல, வாழைக்கன்னு ஒன்னை வயல்ல சேர்க்க 7 ரூபாய். இப்படி 400 விவசாயிகளும், வரவுக்கு மீறிச் செலவு செஞ்சுதான் இத்தனை வருஷங்களா வெள்ளாமை செஞ்சாங்க. முதலுக்கே மோசமாயிடுதுனு பலபேர் நிலத்தைத் தரிசாப் போட்டுட்டாங்க.

இந்தப் பிரச்னை தீரணும்னா, பள்ளவாய்க்காலோட வடக்குக் கரையில, அகலமான சாலை அமைக்கணும். ஆனா, அதுக்கு பலபேர் அவங்க சொந்த நிலத்தைக் கொடுக்கணும். பல வருஷமா அந்த முயற்சி தடைப்பட்டுகிட்டே இருந்துச்சு. என் கணவர் கதிர்வேல் விவசாயி. ஊர் நலன்ல முன்னாடி நிப்பார். எங்களுக்கு அந்த 333 ஏக்கர்ல நிலம் ஏதும் கிடையாது. இருந்தாலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க நினைச்சோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளவாய்க்கால் வடக்குக்கரையையொட்டி நிலம் வெச்சிருக்க, 67 விவசாயிககிட்ட பலகட்டமாகப் பேசினோம். விவசாயிகளோட நன்மைக்காக அவங்களும் நிலம் கொடுக்க ஒத்துகிட்டாங்க. 5 சென்ட் முதல் அதிகபட்சமா 15 சென்ட் வரைக்கும் பட்டா நிலத்தை இலவசமாக் கொடுத்தாங்க. நாங்க 2 லட்சம் வரைக்கும் சொந்த பணத்தைப் போட்டோம். 400 விவசாயிகளும் அவங்களுக்குள்ள பணம் வசூல் பண்ணி, 2 லட்சம் கொடுத்தாங்க. பல விவசாயிகள் அவங்க பட்டா நிலத்திலயே மண்ணை எடுத்துக்க அனுமதி தந்தாங்க. அதையெல்லாம் வெச்சி, 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, 20 அடி அகலத்துல மண்ணை நிரவி, மண்சாலை அமைச்சோம். இந்தச் சாலை மூலமா 400 விவசாயிகளோட, 100 வருஷ ‘போக்குவரத்து’ப் பிரச்னை முடிவுக்கு வந்திருச்சு. மழைபெய்யும்போது இந்த மண்சாலை குண்டும்குழியுமா ஆகிடும். அதேபோல, பூண்டுக முளைச்சிடும். அதனால, ‘இந்த மண்சாலையைத் தார்சாலையாக மாற்றித்தாங்கனு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வெச்சிருக்கோம். தார்சாலையும் கிடைச்சுட்டா, எங்க பகுதி விவசாயிகள் பல வருஷமா அனுபவிச்சுட்டு வர்ற வேதனை முடிவுக்கு வந்திடும்” என்றார்.

சாலை அமைக்கும் பணி
சாலை அமைக்கும் பணி

அங்கிருந்த விவசாயிகளும் அதை ஒருமித்த குரலில் ஆமோதித்தார்கள். இதுகுறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் பேசினோம்.

“தங்கள் பிரச்னையை ஒற்றுமையாக இருந்து, தாங்களே தீர்த்துக்கொண்ட அந்த 400 விவசாயிகளும் பாராட்டுக்குரியவர்கள். உடனே, அதுபற்றி ஆய்வுசெய்து, மாவட்ட நிர்வாகத்தால் என்ன செய்யமுடியுமோ அதைக் கட்டாயம் செய்ய ஆவன செய்கிறேன்” என்றார் உறுதியான வார்த்தைகளில்.