நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஆஸ்பத்திரிக்குப் போவதைத் தடுக்கும் ஆரோக்கிய உணவுகள்!

நம்மாழ்வாருடன்
பிரீமியம் ஸ்டோரி
News
நம்மாழ்வாருடன்

பாரம்பர்யம்

லவகை நோய் காக்கும் மூலிகைகள், அருந்தானியங்களான சிறு தானியங்கள்... ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதன் விளைவுதான் பெருகிவரும் இயற்கை உணவகங்கள்.

தமிழகத்தில் முதன்முதலில் இயற்கை உணவகத்தைத் தொடங்கி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின்படி முழுமையான பாரம்பர்ய இயற்கை உணவகமாக அதை மாற்றியதுடன், அதுபோன்ற உணவகம் திறப்பவர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கிவருகிறார் சிவகாசி மாறன்.

மூலிகைச் சாறுகளுடன் மாறன்
மூலிகைச் சாறுகளுடன் மாறன்

‘நம்மாழ்வார் சிறப்பிதழு’க்காக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தாய்வழி இயற்கை உணவகம் நடத்திவரும் மாறனைச் சந்தித்தோம்.

‘`எங்க அம்மாவுக்குத் தீராத மூட்டுவலி இருந்தது. `முளைகட்டிய உளுந்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தா சரியாப் போகும்’னு யாரோ சொன்னாங்க. அதே மாதிரி தொடர்ந்து சாப்பிட மூட்டுவலியும் குறைஞ்சு சரியாகிடுச்சு. அதேபோல ஒவ்வொரு வியாதிக்குமான இயற்கைத் தீர்வுகளைத் தேடினப்போதான் `இயற்கை வாழ்வியலை அடிப்படையாகவெச்சு கடை நடத்தலாம்’னு ஒரு யோசனை தோணிச்சு. 1999-ம் வருஷம் இந்த இயற்கை உணவகத்தைத் தொடங்கினோம்.

சர்க்கரை வியாதிக்கு வெந்தயம், தாது புஷ்டிக்கு கம்பு, தேறாத உடம்பைத் தேறவெக்க நிலக்கடலை, கொழுப்பைக் குறைக்கக் கொள்ளு, உடல் இளைக்க எள்ளுனு அஞ்சு பயறு வகைகளை முளைகட்டி, அதோட சேர்த்து அறுகம்புல் சாறு, முடக்கத்தான் கீரை சூப் சேர்த்து 12 வருஷமா விற்பனை செஞ்சுட்டு வந்தேன். `இதெல்லாம் இயற்கையில விளைஞ்சதா?’னு என் வாடிக்கையாளர்கள் கேட்டாங்க. அப்போதான் அதைப் பற்றிய சிந்தனையே வந்துச்சு.

‘நீ தயாரிக்கறதெல்லாம் இயற்கை உரத்துல விளைய வெச்சதுதானா?’னு தாடியைத் தடவிக்கிட்டே கேட்டார். `நெல் அரிசியை மட்டுமே சாப்பிட்டு வந்தால், சர்க்கரைநோயின் தலைநகரமாகக்கூடத் தமிழ்நாடு மாறிவிடும்’னு ஐயா சொல்லுவார்.

இயற்கை விளைபொருள்களைத் தேடும்போதுதான் நம்மாழ்வார் ஐயாவைப் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். அவரை நேரில் சந்திச்சேன். என்னைப் பத்தி விசாரிச்சாரு. என்னைப் பத்தி சொல்லிட்டு, பாரம்பர்ய இயற்கை உணவகம் நடத்திட்டு வர்றதையும் சொன்னேன்.

மூலிகை சூப் வகைகள்
மூலிகை சூப் வகைகள்

‘நீ தயாரிக்கிறதெல்லாம் இயற்கை உரத்துல விளையவெச்சதுதானா?’னு தாடியைத் தடவிக்கிட்டே கேட்டார். ‘அதைப் பத்தி தெரிஞ்சுக்கத்தான்யா உங்களைத் தேடி வந்திருக்கேன்’னு சொன்னேன். ‘பயிற்சி வகுப்புல கலந்துக்கோ’னு சொன்னார். கலந்துகிட்டேன். பயிற்சியில ஒவ்வொரு விளக்கத்தையும் பழமொழிகளோடு ஒப்பிட்டு, அவருக்கே உரிய பாணியில சொல்லிப் புரிய வெச்சார்.

2013-ம் வருஷம் சிவகாசியில இயற்கை விவசாய விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துறதுக்கு ஐயாவை அழைச்சுட்டு வந்தோம். அப்போ கடைக்கு வந்தவர், உணவுத் தயாரிப்புகளை உற்றுப் பார்த்தார். ஒவ்வொண்ணுக்கும் மருத்துவப் பயன்களைக் கேட்டார். பிறகு அவரும் கூடுதல் பலன்களைச் சொன்னார்.

‘இந்தக் கந்தக பூமியில விவசாயமே அழிஞ்சு போச்சு. ஆனா, இயற்கை விவசாயத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுக்கு இத்தனை பேரு வந்திருக்கிறது சந்தோஷமா இருக்கு. விவசாயம் செய்ய முடியாதவங்க, வீட்டுக்குள்ளயாவது இயற்கை உரம் போட்டு, காய்கறிகளை விளையவெச்சு உணவுல பயன்படுத்திப் பார்க்கணும். துளசியிலகூட ஒட்டுரகம் வந்துடுச்சு. ஆனா, மாறன் கடையில காட்டுத்துளசியில போட்ட டீ சுவையாயிருக்கு’னு சொல்லி, என்னோட சொந்த ஊருல எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தினார்.

‘நீ கத்துகிட்டதை உன்னோட வெச்சுக்காதே. மத்தவங்களுக்கும் சொல்லு’னு ஐயா சொன்னதுனால நான் மத்தவங்களுக்கும் சொல்லித் தர்றேன். ‘வெந்நீரில் உப்பு, மஞ்சள்தூள் கலந்து காய்கறிகளைக் கழுவினால் அதன்மீது தெளிக்கப்பட்ட பூச்சிமருந்து நீங்கிவிடும்’னு ஒருமுறை பயிற்சி வகுப்புல சொன்னேன்.

‘‘உணவுப் பழக்கத்துல ஆரம்பிச்சு ஒவ்வொரு அசைவுலயும் நம்ம வாழ்வியல், இயற்கையைவிட்டு தூரமா நிக்குது. இதன் விளைவாகத்தான் சொத்து சேர்க்குற மாதிரி உடம்புக்குள்ள பல நோய்களைச் சேர்த்துகிட்டு இருக்கோம்.’’

‘நீ இப்படிச் சொல்லிக்கொடுத்தா வீட்டுல எப்படி இயற்கையில காய்கறிகளை விளைய வெப்பாங்க?’னு கேட்டார். பெரியவங்க, சின்னவங்கனு பார்க்காம மற்றவர்களை முன்னிறுத்தி அங்கீகரிச்சு அவர்களின் வளர்ச்சியை கவனிச்சுகிட்டே இருப்பார். ரசாயன உரங்கள் ஏற்படுத்தின தாக்கத்தால நம்ம மண்ணு உயிர்த்தன்மையில்லாம மலடாகிடுச்சு. அதுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கான பணியைத்தான் நம்மாழ்வார் ஐயா செய்தார்” என்றவர் தொடர்ந்தார்.

நம்மாழ்வாருடன்
நம்மாழ்வாருடன்

‘‘உணவுப்பழக்கத்துல ஆரம்பிச்சு ஒவ்வொரு அசைவுலயும் நம்ம வாழ்வியல் இயற்கையை விட்டு தூரமா நிக்குது. இதன் விளைவாகத்தான் சொத்து சேர்க்குற மாதிரி உடம்புக்குள்ள பல நோய்களைச் சேர்த்துகிட்டு இருக்கோம். ‘தொடர்ந்து நெல் அரிசியை மட்டுமே சாப்பிட்டு வந்தால் சர்க்கரைநோயின் தலைநகரமாகக்கூடத் தமிழ்நாடு மாறிவிடும்’னு ஐயா சொல்லுவார். போன தலைமுறையில ‘ஏழைகளின் உணவு’னு சொல்லப்பட்ட கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, குதிரைவாலி இன்னிக்கு வசதியானவங்களோட உணவா மாறிடுச்சு.

ஆரோக்கியத்துக்குதான் இன்னிக்கு முன்னுரிமை. ஊட்டச்சத்து நிறைஞ்ச சிறுதானியங்களை நாம ஒதுக்கினதுனால மூளையும் உடம்பும் பலமிழந்து போயிடுச்சு. சத்துக்குறைபாடு உள்ளவங்களுக்கு, சத்து மாத்திரைகளுக்கு பதிலாகச் சிறுதானியங்களைத்தான் கண்கண்ட மருந்தாகச் சொல்றாங்க. ‘சிறுதானியங்களைச் சத்துமிகு அருந்தானியங்கள்’னு சொல்வார் நம்மாழ்வார்.

நோய் வந்த பிறகுதான் உடம்பைப் பற்றிய ஞாபகமே நமக்கு வருது. ஆஸ்பத்திரிக்குப் போய் பணத்தைக் கொட்டுறோம். ஆனா, நோய் வர்றதுக்கு முன்னே உடம்பை கவனிக்கிறதில்லை. நம்ம குழந்தைகளுக்கு வீடு, கார், காப்பீடுனு வசதிகளை உண்டாக்குவதோடு அவர்களுக்கு நல்ல உணவைத் தரணும்னு நினைக்கிறோம். ஆனா, அது ஆரோக்கியமான உணவான்னு யோசிக்கிறதில்லை” என்றார்.

நிறைவாக, ‘‘இப்போ பலரும் இயற்கை அங்காடி தொடங்குறதுல ஆர்வம் காட்டுறாங்க. இது நல்ல விஷயம்தான். ஆனா, லாபத்தை மட்டும் குறிக்கோளாகவெச்சு அங்காடிகளை ஆரம்பிக்கக் கூடாது. சேவை எண்ணமும் இருந்தாத்தான் நீண்ட நாள் நடத்த முடியும்’’ என்றார்.

தொடர்புக்கு, மாறன், செல்போன்: 93674 21787.

25 வகை இயற்கை உணவுகள்

சிவகாசி, தாய்வழி இயற்கை உணவகத்தில், பாரம்பர்ய உணவு பட்டியல்குறித்துப் பேசிய மாறன், “அறுகம்புல் சாறு, வில்வச்சாறு, கறிவேப்பிலைச்சாறு, ஆனை நெருஞ்சில்சாறு, முள்ளங்கிச்சாறு, சிறுகண்பீளை கஷாயம், தூதுவேளை கஷாயம், கண்டங்கத்திரி கஷாயம், நிலவேம்பு கஷாயம், வெண்பூசணி-தேங்காய்ப்பால், ஆவாரைக்கஷாயம், நெல்லி-கறிவேப்பிலை-பாகல் சாறு, தாமரைப்பூ கஷாயம், எலுமிச்சைப் புதினா இஞ்சிச்சாறு, துளசி கஷாயம், முருங்கைப்பூ கஷாயம், பீட்ரூட் கீர், கறிவேப்பிலை கீர், பொன்னாங்கண்ணி கீர், கேரட் கீர், நுணாப்பழச்சாறு, தினைப்பாயசம், சாமை அரிசி உளுந்து சாதம், முளைக்கட்டிய உளுந்து, வெந்தயம், பாசிப்பயறு, கொள்ளு, எள்ளு, நிலக்கடலை, கம்பு உள்ளிட்ட 25 வகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன’’ என்றார்.