Published:Updated:

ரூ.1,60,000... மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா மதிப்புக்கூட்டினால் லாபம் நிச்சயம்!

அறுவடையான நெல்லுடன் பரமசிவம்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான நெல்லுடன் பரமசிவம்

மகசூல்

ரூ.1,60,000... மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா மதிப்புக்கூட்டினால் லாபம் நிச்சயம்!

மகசூல்

Published:Updated:
அறுவடையான நெல்லுடன் பரமசிவம்
பிரீமியம் ஸ்டோரி
அறுவடையான நெல்லுடன் பரமசிவம்

பாரம்பர்ய நெல் ரகங்களில் மருத்துவக்குணங்கள் நிறைந்திருப்பதை அனுபவபூர்வமாக உணர்வதால், இதன் மீதான ஈர்ப்பு மக்களிடம் கூடிக்கொண்டே இருக்கிறது. உண்பவர்களுக்கு மட்டுமல்ல, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் களை கட்டுப்பாடு, பூச்சி-நோய் எதிர்ப்புத்திறன் எனப் பல வகைகளிலும் இவை உறுதுணையாக இருக்கின்றன.

உழவுப் பணியில்....
உழவுப் பணியில்....

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள ஓவர்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவம், இயற்கை விவசாயத்தின் மீதும் பாரம்பர்ய நெல் ரகங்களின்மீதும் ஆர்வம்கொண்டவர்.

இவரைச் சந்திக்க ஓவர்குடி கிராமத்திற்குச் சென்றோம். மதிப்புக்கூட்டப்பட்ட பாரம்பர்ய அரிசி, அவல் ஆகியவற்றை விற்பனைக்குத் தயார் செய்துகொண்டிருந்த பரமசிவம், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘இயற்கை விவசாயத்தை ஒரு தொழிலா பார்க்கக்கூடாது. இதுல மனிதநேயம் உள்ளடங்கியிருக்கு. விஷமில்லாத உணவை உற்பத்தி செய்றதுனால, சமூகத்துக்கு நல்லது செய்ற மனத்திருப்தி கிடைக்குது. இதுல லாபம் மட்டுமே நோக்கமில்ல. மண்ணை வளமாக்கி, எதிர்காலச் சந்ததியினருக்கு, நல்ல உயிர்ப்பான நிலத்தை விட்டுட்டுப் போகணும்ங்கறதுதான் என்னோட நோக்கம். இதுக்கெல்லாம் நான் பசுமை விகடனுக்குத்தான் முதல்ல நன்றி சொல்லணும். நாகை மாவட்டம் பாலையூர்ல 2008-ம் வருஷம் பசுமை விகடன் நடத்திய, நம்மாழ்வாரின் இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புதான் என் வாழ்க்கையில புதிய திருப்பத்தை ஏற்படுத்திச்சு. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாரம்பர்ய நெல் ரகங்கள் மேல பெரிய மரியாதை உண்டாச்சு’’ என்றவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ரூ.1,60,000... மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா மதிப்புக்கூட்டினால் லாபம் நிச்சயம்!

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எஸ்.எஸ்.எல்.சி படிச்சிட்டு, முழுநேரமாக விவசாயத்துக்கு வந்துட்டேன். இது களிப்பாங்கான நிலம். எங்கக் குடும்பத்துக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. ஆற்று நீரையும் மழைநீரையும் நம்பி, சம்பா பட்டத்துல ஒரு போகம் மட்டும் நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கேன். 5 ஏக்கர்லயுமே பாரம்பர்ய நெல் ரகங்களைத்தான் பயிர் பண்ணிக்கிட்டுயிருக்கேன். 3 ஏக்கர்ல மாப்பிள்ளைச்சம்பா, தலா ஒரு ஏக்கர்ல காட்டுயானம், கிச்சலிச்சம்பாச் சாகுபடி செய்றேன். இந்த வருஷம் விதைப்பு வேலையை இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி ரசாயன முறையில, நவீன நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்ப, பூச்சி நோய்த் தாக்குதல் பெரிய பிரச்னையா இருக்கும். இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி பாதிப்புகள் அதிகமா இருக்கும். வறட்சியில மாவுப்பூச்சித் தாக்குதலையும் சமாளிச்சாகணும். வீரியமான பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிச்சாதான் ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும். அதுக்கே 3,000 ரூபாய்க்கு மேல செலவாகும்.

அறுவடையான நெல்லுடன் பரமசிவம்
அறுவடையான நெல்லுடன் பரமசிவம்

பாரம்பர்ய நெல் ரகங்கள்ல இயல்பாகவே பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். குறிப்பா இலை, தண்டுப்பகுதிகள்ல சுணை அதிகமாக இருக்கும். இதனால, பெருசா பூச்சித்தாக்குதல் இருக்காது. எங்க பகுதியைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலான விவசாயிகள் அதிக அளவு களைக்கொல்லியைப் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. நவீன ரகங்கள்ல அதிகமா களை மண்டுறதால, களையெடுக்க அதிக வேலையாள் தேவைப்படும். அதைத் தவிர்க்க, களைக்கொல்லி அதிகமாகப் போடுறாங்க. அதனால, அடுத்த சில நாள்கள்ல பயிர் மஞ்சள் நிறத்துக்கு மாறிடுது. அதைச் சரி செய்ய, யூரியா அதிகமாகப் போடுறதுனால, பயிர்ல அளவுக்கு அதிகமா பச்சை புடிச்சி, பூச்சித்தாக்குதல் அதிமாகிடுது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம் கொடுத்தேன். ஏக்கருக்கு 21 மூட்டை மகசூலாச்சு. ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் 2,880 ரூபாய் வருமானம் கிடைச்சது.

ஆனா, பாரம்பர்ய நெல் ரகங்கள்ல களை ஒரு பிரச்னையே இல்லை. ‘நெல்வேர் பரவ பரவ... புல்வேர் அத்துப் போயிடும்’னு நம் முன்னோர்கள் சொன்ன பழமொழியை இதுல கண்கூடாகப் பார்க்க முடியுது. விதைச்ச 20-30 நாள்கள்ல, குறைவான களைகள்தான் இருக்கும். அதைக் கையால பிடுங்கிடுவேன். நெருக்கமா இருக்கிற இளம்பயிர்களைப் பிடுங்கி, அதிக இடைவெளி இருக்கிறப் பயிர்களுக்கு இடையில நடவு செஞ்சிடுவேன். பாரம்பர்ய நெல் ரகங்கள்ல வளர்ச்சி அதிகமாக இருக்குறதுனால, 50-60 நாள்லயே பயிர், ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நிழல் விழுந்து களையைக் கட்டுப்படுத்திடுது” என்று சொன்னவர், தனது சாகுபடி முறைகுறித்துப் பேசத் தொடங்கினார்.

கிச்சிலிச் சம்பா, காட்டுயானம், அவல்
கிச்சிலிச் சம்பா, காட்டுயானம், அவல்

‘‘இயற்கை விவசாயத்துக்கு மாறின முதல் வருஷம், அடியுரமா மாட்டு எரு மட்டும் போட்டு, பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செஞ்சேன். வேற எந்தவொரு இயற்கை இடுபொருளும் கொடுக்கலை. ஏக்கருக்கு 9 மூட்டைதான் மகசூல் கிடைச்சது. ரெண்டாம் வருஷம் ஆட்டுக்கிடை கட்டி, அடியுரமா மாட்டு எருவும் போட்டேன். ஏக்கருக்கு 12 மூட்டை மகசூல் கிடைச்சது. படிபடியா மண் வளமாகி, அடுத்தடுத்து மகசூல் கூடிக்கிட்டே இருந்ததுனால, வேற எந்த இடுபொருளும் கொடுக்காம, ஆட்டுக்கிடையையும், மாட்டு எருவையும் மட்டுமே நம்பி சாகுபடி செஞ்சேன். 15-17 மூட்டை மகசூல் கிடைச்சிக்கிட்டு இருந்துச்சு. போன வருஷம் சோதனை முயற்சியா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம் கொடுத்தேன்.

ரூ.1,60,000... மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா மதிப்புக்கூட்டினால் லாபம் நிச்சயம்!

ஏக்கருக்கு 21 மூட்டை மகசூலாச்சு. கண்கூடான பலன் தெரிஞ்சதுனால, இனிமே இதையும் சேர்த்து செய்யலாம்னு இருக்கேன். என்கிட்ட ஒரு மாடும், ரெண்டு கன்னுக்குட்டியும் இருக்கு. இயற்கை இடுபொருள்களுக்கு இதோட கழிவுகளைப் பயன்படுத்திக்குவேன். கூடுதலாகத் தேவைப்பட்டா சாணமும், மாட்டு மூத்திரமும் வாங்கிக்குவேன். இந்தப் பக்கத்துல தண்ணி தட்டுப்பாடு அதிகம். இதைச் சமாளிக்க, பஞ்சாயத்து யூனியன் மூலமாக நூறு நாள் வேலைத்திட்டத்துல, என்னோட நிலத்துல ஒரு சின்ன குட்டை வெட்டியிருக்கேன். ஆற்று நீரையும் மழைநீரையும் இதுல சேமிச்சி வெச்சிக்கிட்டு, வறட்சியான நாள்கள்ல பாசனத்துக்குப் பயன்படுத்திக்குவேன்” என்றவர், மதிப்புக்கூட்டுதல் மூலம் கிடைக்கும் வருமானம்குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

‘‘நான் விளைவிச்ச பாரம்பர்ய நெல்லை, அரிசியாகவும், அவலாகவும் மதிப்புக்கூட்டி நேரடியா விற்பனை செய்யறேன். பலர் இங்கயே தேடி வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க. போன வருஷம் ஏக்கருக்கு 21 மூட்டை நெல் மகசூல் கிடைச்சது.

அதைக் காயவெச்சு, சுத்தப்படுத்துனதுல, தரமான நெல் 20 மூட்டைத் தேறிச்சு. அதுல இருந்து 10 மூட்டை நெல்லை அவலா மாத்தினேன். 300 கிலோ அவல் கிடைச்சது. ஒரு கிலோ அவல் 100 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். 30,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. 150 கிலோ தவிடு கிடைச்சது. அதோட மதிப்பு 1,500 ரூபாய். 9 மூட்டை நெல்லை ஹல்லர் மிஷின்ல கொடுத்து, உமியை மட்டும் நீக்கி அரிசியா மாத்தினேன். 315 கிலோ அரிசி கிடைச்சது. ஒரு கிலோவுக்கு 80 ரூபாய் வீதம், 25,200 ரூபாய் வருமானம் கிடைச்சது. மீதமிருந்த ஒரு மூட்டை நெல்லை, நல்லா காயவெச்சு, தேர்ச்சியான நெல்மணிகளை மட்டும் தனியாகப் பிரிச்செடுத்தேன்.

‘‘பாரம்பர்ய நெல் ரகங்கள்ல இயல்பாகவே பூச்சி, நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். குறிப்பா, இலை, தண்டுப் பகுதிகள்ல சுணை அதிகமாக இருக்கும். இதனால, பெருசா பூச்சித்தாக்குதல் இருக்காது.’’

தரமான விதைநெல் 48 கிலோ கிடைச்சது. ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் 2,880 ரூபாய் வருமானம் கிடைச்சது. வைக்கோல் விற்பனை முலமாக, 1,200 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஆக மொத்தம் ஒரு ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலமாக, 60,780 ரூபாய் வருமானம் கிடைச்சது. எல்லாச் செலவும் போக 32,480 ரூபாய் நிகரலாபமாகக் கையில மிஞ்சும். 5 ஏக்கர் நெல் சாகுபடி மூலமாக 1,62,400 ரூபாய் வருமானம் கிடைக்கும். பாரம்பர்ய நெல் சாகுபடி செஞ்சு, மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதுல உழைப்பு, பொறுமை, காத்திருப்பு இருந்தால் நிச்சயமாக இந்தளவுக்கு லாபம் எடுக்கலாம்” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு, பரமசிவம், செல்போன்: 99433 84204

பாரம்பர்ய நெல் சாகுபடிக்குப் பரமசிவம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் சம்பாப் பருவம் தொடங்குவதற்கு முன்பாக, ஏக்கருக்கு 300 ஆடுகள் வீதம், நிலம் முழுக்க 6 நாள்கள் ஆட்டுக்கிடை அமைக்க வேண்டும். சம்பாப் பருவம் தொடங்கியதும், அடியுரமாக ஏக்கருக்கு 2 டன் மாட்டு எரு போட்டு, நன்கு உழவு ஓட்ட வேண்டும். மழை அல்லது ஆற்று நீரை எதிர்பார்த்து ஏக்கருக்கு 30 கிலோ வீதம் விதை தெளிக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்பத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

20-30 நாள்களில் களையெடுக்க வேண்டும். மிகவும் நெருக்கமாக உள்ள இளம் பயிர்களை வேரோடு பறித்து, அதிக இடைவெளியுள்ள நெற்பயிர்களுக்கு இடையில் நடவுசெய்ய வேண்டும். இது ‘கலப்பித்தல்’ என அழைக்கப்படுகிறது. 40-ம் நாள் 90 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும். 55-ம் நாள் 90 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 60-ம் நாள் இரண்டாம் களை எடுக்க வேண்டும். 75-ம் நாள் 90 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். கிச்சிலிச்சம்பா 135-140 நாள்களிலும், மாப்பிள்ளைச்சம்பா 160-165 நாள்களிலும், காட்டுயானம் 180-185 நாள்களிலும் அறுவடைக்கு வரும்.