Published:Updated:

பறவைகளின் பசியைப் போக்கும் இளைஞர்கள்!

மரங்களில் பாட்டில்கள் கட்டும் பணியில்
பிரீமியம் ஸ்டோரி
மரங்களில் பாட்டில்கள் கட்டும் பணியில்

சூழல்

பறவைகளின் பசியைப் போக்கும் இளைஞர்கள்!

சூழல்

Published:Updated:
மரங்களில் பாட்டில்கள் கட்டும் பணியில்
பிரீமியம் ஸ்டோரி
மரங்களில் பாட்டில்கள் கட்டும் பணியில்
ந்த கொரோனா ஊரடங்கால் அனைவருமே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறோம்.

சுட்டெரிக்கும் கோடைக்காலம் தொடங்கியிருப்பதால், பெரும்பாலான குளங்கள், கிணறுகள் தண்ணீரின்றி வற்றிக் காணப்படுகின்றன. அதனால், உணவு, தண்ணீரைத் தேடி பறவைகளும் பல மைல்கள் தூரம் இடம்பெயர்ந்து செல்கின்றன.

பாட்டில்களுடன் இளைஞர்கள்
பாட்டில்களுடன் இளைஞர்கள்

எனவே, பறவைகளுக்குத் தேவையான தண்ணீர், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காந்திபுரத்தைச் சேர்ந்த 15 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பறவைகள் கூடும் பெரிய மரங்கள் மற்றும் பறவைகள் கூடு கட்டும் மரங்களின் கிளைகளில் பசியைப் போக்கவும், தாகத்தைத் தீர்க்கவும் காலி பாட்டில்களில் தண்ணீர் மற்றும் தானியங்களை நிரப்பிக் கட்டிவருகின்றனர். ``இதனால், தானியம், தண்ணீரைத் தேடி மரங்களில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் கூடுகின்றன’’ என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

இது குறித்து அந்த இளைஞர்களிடம் பேசினோம், ``கொரோனா வைரஸ் பரவலால், நாடு முழுக்க ஊரடங்கு ஆரம்பிச்ச முதல் நாலு நாள்கள் டி.வி பார்க்குறது, சீட்டு விளையாடுறது, அரட்டை அடிக்கறதுனு நேரத்தைப் போக்கினோம். அப்புறம்தான் `இந்த ஊரடங்கு நாள்களைப் பயனுள்ளதா கழிக்கணும்’னு முடிவெடுத்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வயதான முதியவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொடுக்கறது, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வுக்காக டியூஷன் சொல்லிக் கொடுக்கறது, ஊர்ப் பொது இடங்கள்ல வளர்ந்து நிக்கிற சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, மரக்கன்றுகள் நடுவது, தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள்தூளைக் கலந்து தெருக்களில் தெளிப்பது மாதிரியான வேலைகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தோம். எங்க ஊர் வாய்க்கால், குளத்துல தண்ணி இருக்கிற நாள்கள்ல பறவைகள் மரங்கள்ல கிடந்து கூச்சல் போட்டுக்கிட்டு இருக்கும்.

பறவைகளின் பசியைப் போக்கும் இளைஞர்கள்!

பார்க்கறதுக்கே அவ்வளவு அழகா இருக்கும். குயில், கிளி, மைனா, சிட்டுக்குருவி, கரிச்சான்குருவி, காக்கா, கொக்குனு பல வகை பறவைகளின் சத்தங்களும் கேட்கறதுக்கு இதமா இருக்கும். ஆனா, இப்போ கொஞ்ச நாளா பறவைகளைப் பார்க்க முடியலை. ஏன்னா, எங்க ஊரு குளம், வாய்க்கால்ல தண்ணியெல்லாம் வத்திப்போச்சு. ‘பறவைகள் தண்ணியைத் தேடி மட்டுமில்ல; இரை தேடியும்தான் இடம்பெயர்ந்து போச்சு’னு ஊர்ல இருக்குற ஒரு தாத்தா சொன்னார். குளத்துப் பக்கத்துல இருக்குற பெரிய அரசமரம், வாய்க்கால் பக்கத்துல இருக்குற மரங்கள்லதான் நிறைய பறவைகளைப் பார்க்க முடியும்.

மரங்களில் பாட்டில்கள் கட்டும் பணியில்
மரங்களில் பாட்டில்கள் கட்டும் பணியில்

அங்கேதான் பறவைகள் கூடு கட்டியிருக்கும். முதல்கட்டமா, பெரிய மரங்கள் மற்றும் பறவைகள் கூடு கட்டி இருக்கும் 25 மரங்களைத் தேர்வு செஞ்சோம். ஒவ்வொருத்தரும் அவரவர் வீட்ல கிடந்த ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர் காலி தண்ணீர் பாட்டில்களை எடுத்துட்டு வந்தோம். மொத்தம் 50 தண்ணீர் பாட்டில்கள் சேர்ந்துச்சு. அந்த பாட்டில் `லேபிள்’களையெல்லாம் அகற்றிட்டு, தண்ணீர்விட்டு நல்லாக் கழுவி சுத்தப்படுத்தி ஒருநாள் முழுக்க வெயில்ல காயவெச்சோம்.

ஆளுக்குக் கொஞ்சம் கைக்காசு போட்டு அஞ்சு கிலோ அரிசி, அஞ்சு கிலோ கம்பு, ஒரு ரோல் இரும்புக் கட்டுக்கம்பியைக் கடையில வாங்கினோம். அஞ்சு பேரு வாட்டர் பாட்டில்களில் செவ்வக வடிவத்துல வெட்டி துளை போட்டாங்க; இன்னொரு டீம் பாட்டில்களின் ரெண்டு பக்கமும் கட்டுக்கம்பியைவெச்சு கட்டினாங்க. தேர்வு செய்த மரங்களில் ஒருவர் ஏற, கீழே இருந்து மற்றொருவர் பாட்டில்கள், தானியங்கள், தண்ணியை எடுத்துக் கொடுக்க கிளைகளில் கட்டித் தொங்கவிட்டோம். எங்களை மூணு குழுக்களாகப் பிரிச்சிருக்கோம்.

தினமும் ஒவ்வொரு குழுவும் அந்தந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட மரங்களில் கட்டப்பட்டிருக்கும் பாட்டில்கள்ல தண்ணீர், தானியத்தின் அளவைக் கண்காணிச்சு நிரப்பிக்கிட்டே இருப்போம். முதல் ரெண்டு நாள்கள் பறவைகளைக் காணோம். அடுத்தடுத்த நாள்களில் பறவைகளின் வரத்து கூடிச்சு. பழைய மாதிரி பறவைகளின் சத்தங்களைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ அணில்களும் படையெடுக்க ஆரம்பிச்சிருக்கு. அடுத்தகட்டமாக பறவைகளை வரவைக்கறதுக்காக கூடுதலா 25 மரங்கள்ல இதே மாதிரி தொங்கவிடலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்” என்கிறார்கள் மகிழ்ச்சி பொங்க.