வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பயோ டெக்னாலஜி துறைத் தலைவர் பாபு ஜனார்த்தனம் மற்றும் அந்தத் துறையின் ஆராய்ச்சி மாணவர்கள் சத்தியராஜ், சூரியகலா, தனேஷ்காந்தி ஆகியோர் இணைந்து, `பஞ்சகவ்யா’ குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் பயனாக, ``பஞ்சகவ்யத்தை அடிப்படையாகக் கொண்டு கொசுக்களை ஒழிக்க முடியும். அதுவும், லார்வா நிலைத் தொடங்கி முழுமைபெற்ற கொசுக்களைக்கூட ஒழிக்கலாம் அல்லது விரட்டலாம். அதுமட்டுமின்றி, பஞ்சகவ்யாவின் நேனோ துகள்களைத் தங்கம் மற்றும் செம்புடன் கலந்த கலவையைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயையும் குணப்படுத்த முடியும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி அடுத்த தலைமுறை வரிசை முறையில் 5,036 நுண்ணுயிர்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தியும் பல நோய்களைக் குணப்படுத்த முடியும். விவசாயத் துறையில் பல்வேறு முறைகளிலும் பஞ்சகவ்யாவை பயன்படுத்தலாம்’’ என்றும் கண்டறிந்திருக்கிறார்கள் அந்தக் குழுவினர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய பயோ டெக்னாலஜி துறைத் தலைவர் பாபு ஜனார்த்தனம், ``ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ரசாயனக் கழிவுகளால் மலடாகிப்போன மண்ணைக் கொண்டுவந்து, அப்படியே விதைகள் விதைத்தோம். எதுவுமே முளைக்கவில்லை. அந்த மண்ணுடன் பஞ்சகவ்யாவைக் கலந்து விதைத்தோம். விதைகள் முளைத்து செடிகளும் நல்ல முறையில் வளர்கின்றன.

சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, தாய்லாந்து, தைவான் மற்றும் ஹாங்காங்கில் உள்ள 6 பல்கலைக்கழகங்களில், இந்த ஆராய்ச்சிக் குறித்த கட்டுரைகளை சமர்பித்து, அங்கீகாரமும் பெற்றிருக்கிறோம். பசுஞ்சாணம், பசுமாட்டுச் சிறுநீர், பால், பசுமாட்டுத் தயிர், பசு நெய் போன்றவற்றின் கலவையைத்தான் நமது மூதாதையர்கள் பஞ்சகவ்யம் என்று சொல்லி பழக்கப்படுத்திவிட்டு சென்றனர். இவை அனைத்தும் மனித குலத்துக்கு மிகவும் தேவையானது என்பதை நாங்கள் படிப்படியாக விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்திவருகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பசுமாட்டின் சாணத்தை எடுத்து நெய் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பிசைந்து வைத்தோம். மூன்று நாள்கள் இப்படி செய்தோம். அதன்பிறகு ஈஸ்ட், நன்கு பழுத்த வாழைப்பழங்கள், வெல்லம், இளநீர், தயிர், பால், பசுமாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை அந்த கலவையுடன் சேர்த்து, நாளொன்றுக்கு இரண்டு முறை கலக்கி விட்டோம். 20 நாள்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட கலவையே பஞ்சகவ்யா. விவசாயிகள் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்துகிறார்கள். அதன் பயன்களை அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம்’’ என்றார்.

இந்த முறையில் பஞ்சகவ்யாவை பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற தொழில்நுட்பத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தவர் ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த டாக்டர் கே. நடராஜன் எம்.பி.பி.எஸ் ஆவார். இந்தியா முழுக்க இயற்கை விவசாயிகள் பஞ்சகவ்யாவைப் பயிர் வளர்ச்சியூக்கியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் பல நாடுகளிலும் கூட பஞ்சகவ்யா பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு பல்கலைக்கழங்களில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் உருவான தொழில்நுட்பம் தரணி எங்கும் பரவி பயன்கொடுத்துக் கொண்டுள்ளது.