Published:Updated:

நாற்றுகளை நாசம் செய்த காட்டுப் பன்றிகள், கண்ணீரில் விவசாயிகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

நாற்றுகள் (சித்திரிப்பு படம்)

’’நான் ரெண்டு ஏக்கர்ல நெல் பயிர் பண்ணியிருந்தேன். அருமையா விளைஞ்சிருந்துச்சு. காட்டுப்பன்றிகள் பாதிப்பு இல்லாம இருந்திருந்தா, இந்த ரெண்டு ஏக்கர்ல 66 மூட்டைக்கு மேல மகசூல் கிடைச்சிருக்கும். ஆனால் இப்ப எனக்கு 30 மூட்டை கூட மகசூல் கிடைக்கல. எனக்கு மிகப்பெரிய இழப்பு.’’

நாற்றுகளை நாசம் செய்த காட்டுப் பன்றிகள், கண்ணீரில் விவசாயிகள்; நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

’’நான் ரெண்டு ஏக்கர்ல நெல் பயிர் பண்ணியிருந்தேன். அருமையா விளைஞ்சிருந்துச்சு. காட்டுப்பன்றிகள் பாதிப்பு இல்லாம இருந்திருந்தா, இந்த ரெண்டு ஏக்கர்ல 66 மூட்டைக்கு மேல மகசூல் கிடைச்சிருக்கும். ஆனால் இப்ப எனக்கு 30 மூட்டை கூட மகசூல் கிடைக்கல. எனக்கு மிகப்பெரிய இழப்பு.’’

Published:Updated:
நாற்றுகள் (சித்திரிப்பு படம்)

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் இப்பகுதி விவசாயிகள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். குறுவை சாகுபடிக்காக இப்பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டிருந்த நூற்றுணக்கான ஏக்கர் நாற்றுகளை காட்டுப் பன்றிகள் நாசம் செய்து பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

விவசாயி சந்திரமோகன்
விவசாயி சந்திரமோகன்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள வேலங்குடி, மணக்கால், வீரமங்கலம், ஊத்துக்காடு, கிளியூர், ஆவூர், மணலூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால், இப்பகுதி விவசாயிகள் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த வேதனையுடன் பேசிய வீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரமோகன், ‘’கடந்த நாலஞ்சு வருசமாவே, இந்த பகுதிகள்ல காட்டுப் பன்றிகளோட நடமாட்டம் இருந்துக்கிட்டு இருந்துச்சு. ஆனா, பெருசா சொல்ற அளவுக்கு சேதம் ஏற்பட்டதில்லை, வரப்பை உடைச்சிட்டு போகும் அவ்வளவுதான். ஆனாலும் கூட இதை இப்படியே விட்டுட்டா, பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புருக்குனு ஒரு எச்சரிக்கை உணர்வோடு, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு புகார் அனுப்பிக்கிட்டே தான் இருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை விரைவாக எடுக்கணும்னு வலியுறுதிக்கிட்டே தான் இருந்தோம். ஆனா அவங்க கண்டுக்கவே இல்லை. கடந்த இரண்டே வருசத்துல இனப்பெருக்கம் அதிகமாகி கூட்டம் கூட்டமா இந்த பகுதிகள்ல, காட்டுப்பன்றிகள் அலைஞ்சிக்கிட்டு இருக்கு. இப்ப மிகப்பெரிய பெரிய பாதிப்பை ஏற்படுத்திடுச்சி. குறுவை சாகுபடிக்காக, இந்தப் பகுதி விவசாயிகள் நாற்று உற்பத்தி பண்ணியிருந்தோம். ராத்திரி நேரத்துல வயலுக்குள்ள புகுந்த காட்டுப் பன்றிகள் நாத்துகளை சேதப்படுத்திடுச்சி, நடவுக்குக் கொஞ்சம் கூட தேறாத அளவுக்கு மிகப் பெரிய சேதம்.

சேதமான நாற்றுகள்
சேதமான நாற்றுகள்

நான் அஞ்சு ஏக்கர் நெல் சாகுபடிக்காக, பாய் நாற்றாங்கால் முறையில நாற்றுகள் உற்பத்தி செஞ்சிருந்தேன். காட்டுப்பன்றிகள் மூக்காலயும் கொம்புகளாலயும் நாற்றுகளை வேறோடு கிளறி எல்லாத்தையும் அழிச்சிடுச்சி. நாற்றாங்கால் வீசக்கூடிய விதைநெல் வாசனையால ஈர்க்கப்பட்டு காட்டுப் பன்றிகள் வருது. ஆனா இதை சாப்பிடுறதில்லை. எதுக்கும் பயனில்லாமல் அழிச்சிடுது. இதனால நூற்றுக்கணக்கான நாற்றுகள் நாசமாயிடுச்சி, விவசாயிகளுக்கு நிறைய பொருளாதார இழப்பு. நாங்க எச்சரிக்கை செஞ்சப்ப, திருவாரூர் மாவட்ட நிர்வாகம், வனத்துறை மூலமா இதுல கவனம் செலுத்தி, ஆரம்பத்திலேயே காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தியிருந்தால், விவசாயிகளுக்கு இந்தளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது. இப்ப ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கம் தான் பொறுப்பேத்துக்கணும். உரிய இழப்பீடு தரணும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகிமாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிங்காரவேல், ‘’நாற்றுகளை மட்டுமல்ல, நல்லா விளைஞ்சி அறுவடைக்கு தயாராக இருக்குற நெற்பயிர்களையும் கூட காட்டுப் பன்றிகள் துவம்சம் செஞ்சிக்கிட்டு இருக்கு. இதே நிலைமை நீடிச்சுதுனா, இந்த வருசம் எங்க பகுதிகள்ல நெல் சாகுபடியே இல்லாமல் போயிடும். நான் இரண்டு ஏக்கர்ல நெல் பயிர் பண்ணியிருந்தேன். அருமையா விளைஞ்சிருந்துச்சு. காட்டுப்பன்றிகள் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால், இந்த இரண்டு ஏக்கர்ல 66 மூட்டைக்கு மேல மகசூல் கிடைச்சிருக்கும். ஆனால் இப்ப எனக்கு 30 மூட்டை கூட மகசூல் கிடைக்கல. எனக்கு மிகப்பெரிய இழப்பு.

விவசாயி சிங்காரவேல்
விவசாயி சிங்காரவேல்

இந்த பகுதி விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்தோட கவனத்துக்கு கொண்டு போயி தொடர்ச்சியா வலியுறுத்தினதால, இப்ப தான் வனத்துறையினர் வந்தாங்க. ஆனா அவங்களாலயும் காட்டுப் பன்றிகள் பிடிக்க முடியலை. பகல் நேரங்கள்ல வரப்புகள்ல மண்ணை குடைஞ்சி உள்ளாரப் போயி, அடைஞ்சிடுது. முட்புதர்களுக்குள்ளேயும் போயி தங்கிடுது. சுட்டுப்புடிக்கவும் முடியாது... சட்ட ரீதியான தடை இருக்குறதா, வனத்துறை அதிகாரிகள் சொல்றாங்க. காட்டுப் பன்றிகளோட உயிருக்கு விவசாயிகளால ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு வனத்துறை அதிகாரிகள் சொல்றாங்க. எங்களோட வாழ்வாதாரத்தை நாங்க எப்படித்தான் காப்பாத்திக்குறது?’’ என மிகுந்த வேதனைப்பட்டார்.

நெல் வயலில் மட்டுமல்லாமல் பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களையும் காட்டுப் பன்றிகள் அழித்துள்ளன. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக மனித உருவ பொம்மை வைத்தல், மின் விளக்கை விடிய விடிய எரிய விடுதல், காவல் பணி போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். ஆனால் என்ன செய்தாலும் காட்டுப்பன்றிகளின் அட்டாகாசத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை எனப் புலம்புகிறார்கள்.

Wild Pig (Representational Image)
Wild Pig (Representational Image)
Pixabay

பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ள வெட்டாற்றில் மண்டிக்கிடக்கும் புதர்கள் தான் காட்டுப் பன்றிகளின் வாழ்விடங்களாக உள்ளன என இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். விவசாயிகள் பிரச்னையை தீர்க்க வேண்டியது அரசின் கடமை. இதை அதிகாரிகள் உணர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism