Published:Updated:

4,000 ரூபாயில் எளிய கதிரடிக்கும் கருவி!

கருவியுடன் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
கருவியுடன் ஜெயக்குமார்

கருவி

4,000 ரூபாயில் எளிய கதிரடிக்கும் கருவி!

கருவி

Published:Updated:
கருவியுடன் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
கருவியுடன் ஜெயக்குமார்
சுற்றுச்சூழல் மீதுள்ள அக்கறை, இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் போன்ற காரணங்களால் விவசாயத்தின் பக்கம் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். செங்கல்பட்டு அருகிலுள்ள மறைமலை நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். நெற்பயிர்களைப் பிரதானமாகப் பயிரிட்டு லாபம் பார்த்துவருகிறார். ஆனால், நெற்பயிர் அறுவடையின்போது செலவு அதிகமாவதால் இயந்திர அறுவடைக்கு முயன்றிருக்கிறார். அதிலும் நெல் கலப்படமாகிப் போகவே, இறுதியாக நெல்மணிகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றைத் தானே வடிவமைத்திருக்கிறார் ஜெயக்குமார். அது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

மோட்டாருடன் இணைக்கப்பட்ட டிரம்
மோட்டாருடன் இணைக்கப்பட்ட டிரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எனக்கு மொத்தம் ஆறு ஏக்கர் நிலம் இருக்கு. அதில் நாலு ஏக்கர்ல மரப் பயிர்கள் இருக்கு. மீதம் இருக்கிற நிலத்துல நெல்லும் நிலக்கடலையும்தான் பிரதானமான பயிர்கள். நெல் அறுவடை இப்போதான் முடிஞ்சுது. பாரம்பர்யமான விவசாயக் குடும்பம்கிறதால விவசாய வேலைகள் எல்லாம் அத்துப்படி. ஆனா, தனியார் கம்பெனியில வேலை கிடைச்ச பிறகு விவசாயத்துல கொஞ்சம் இடைவெளி ஆகிடுச்சு. சூழலும் அப்போ சரியில்லை. அஞ்சு வருஷத்துக்கு முன்னால வேலையை விட்டுட்டு விவசாயத்தைப் பார்ப்போம்னு இறங்கிட்டேன். இப்போ நான் முழுநேர விவசாயி. கம்பெனியில வேலை பார்க்குறப்போ இருந்தே பசுமை விகடன் படிப்பேன். அதனால விவசாயத்துக்கு வரும்போதே நான் இயற்கைவழி விவசாயம்தான்னு முடிவு செஞ்சுட்டு வந்தேன்.

இப்போ முழுக்க இயற்கை விவசாய முறையிலதான் விவசாயம் செய்யறேன். நெற்பயிருக்கு மட்டும் அதிகமான ஆள்கள் தேவைப்படுறாங்க. நடவுக்குக் கூட ஆட்களை வெச்சோ, இயந்திரம் மூலமாவோ நடவு செஞ்சுக்கலாம். ஆனா, அறுவடைக்குக் கண்டிப்பா ஆட்கள் மூலமாத்தான் அறுத்துக் கதிரடிக்கணும். பல ரக நெற்பயிர்களை ஒரே இயந்திரம் அறுவடை செய்யறதால இயந்திரத்துக்குள்ள இருக்குற நெல், நம்ம நெல்லோட கலந்திடும். இது தவிர, நெல் ரெண்டா உடையறது, முனைகள் உடைந்துபோறதுனு சில பிரச்னைகள் இருக்கு. இயந்திரம் மூலமாக நெற்பயிர் அறுவடை செஞ்சா, விதை நெல்லுக்குச் சரிப்பட்டு வராது. அதனாலதான் தேடிப்பிடிச்சு அறுவடைக்கு ஆள் வெச்சுக்குறோம். ஆனா, கதிரடிப்புக் கூலினு தனியா ஒரு தொகை செலவாச்சு. அதனால இதுக்கு ஒரு கருவி கண்டுபிடிச்சா என்னனு தோணிச்சு. அப்படி உருவானதுதான் இந்தக் கருவி” என்றவர், அவரின் கண்டுபிடிப்பான கதிரடிக்கும் கருவியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கருவி தயாரிக்கும் முறையை யூடியூப்ல தேடினேன். அதுல கிடைச்ச ஐடியாவை வெச்சுதான் இந்தக் கருவியை வடிவமைக்க முடிவு பண்ணினேன். அதோடு நம்ம ஊர் சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தும் முறைக்கு ஏற்ற மாதிரி வடிவமைச்சேன். யூடியூப்ல இருந்த கருவி வேற மாதிரி இருந்துச்சு. நான் வடிவமைச்ச கருவிக்கு நடுவுல சுழலும் இரும்பு டிரம் தேவைப்பட்டுச்சு. அதை சென்னையில ஆயில் சப்ளை செய்யுற ஆள்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன். டிரம் சுற்றுவதற்காக மோட்டார் தேவைப்பட்டுச்சு. என் வீட்டு பழைய கிரைண்டரிலிருந்து அதை எடுத்துக்கிட்டேன். இதுபோகக் கொஞ்சம் கம்பிகள் தேவைப்பட்டுச்சு. அதைப் பழைய இரும்புக் கடையிலிருந்து வாங்கி, நானே டிரம்முல மாட்டிட்டேன். இப்போ மோட்டாரை டிரம்முடன் இணைச்சா, டிரம் சுழல ஆரம்பிக்கும். அப்போ சுழலும் டிரம்முல நெற்பயிர்களைவெச்சா நெல் மணிகள் மட்டும் தனியா பிரிஞ்சு வந்துடும். சாதாரணமா ஆட்கள் மூலமா கதிரடிக்கும்போதுகூட நெல் மணிகள் ஒண்ணு, ரெண்டு பயிர்கள்லயே நின்னுக்கும். ஆனா, இந்தக் கருவி மூலமா கதிரடிக்குறப்போ நெல் மணிகள் கதிர்கள்ல இருந்து முழுமையா பிரிஞ்சு வந்துடுது’’ என்றவர் நிறைவாக,

கருவியுடன் ஜெயக்குமார்
கருவியுடன் ஜெயக்குமார்

“ `வெளிநாட்டுல அந்த மெஷின் இருக்கு, இந்த மெஷின் இருக்கு’னு சொல்லிப் பெருமைப்படக் கூடாது. நம்ம நாட்டுல நமக்கு என்ன தேவையோ, விவசாயிகளுக்கு எவ்வளவு குறைவான விலையில கொடுக்க முடியுமோ அப்படித்தான் கொடுக்கணும். நான் தயாரிச்ச இயந்திரத்துக்கு மொத்தமே 4,000 ரூபாய்தான் செலவாகும். இதை இயக்குறப்போ வேலை செய்ய நாலு பேர் இருந்தாலே போதும். கையால நெற்கதிர் அடிக்கிறதைவிட இதுல வேலை சுலபமா முடியுது. இது சிறு, குறு விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும். ஓடுற மோட்டாரை மட்டும் பாக்ஸ் போட்டு மறைச்சிட்டா நவீன இயந்திரமாகிடும்” என்று சொல்லி விடைகொடுத்தார், ஜெயக்குமார்.

தொடர்புக்கு, ஜெயக்குமார், செல்போன்: 86674 53325.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism