Published:Updated:

மகிழ்ச்சி கொடுக்கும் மாடித்தோட்டம்! - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்!

தோட்டத்தில் ஜெயமலர்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் ஜெயமலர்

வீட்டுத்தோட்டம்

மகிழ்ச்சி கொடுக்கும் மாடித்தோட்டம்! - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்!

வீட்டுத்தோட்டம்

Published:Updated:
தோட்டத்தில் ஜெயமலர்
பிரீமியம் ஸ்டோரி
தோட்டத்தில் ஜெயமலர்

“இந்தச் செடிகள் என் குழந்தைகள் மாதிரி. செடிகளைப் பராமரிக்காம என்னால ஒருநாள்கூட இருக்க முடியாது. மண்ணைச் செழுமைபடுத்துறதுல ஆரம்பிச்சு, காய்கறிப் பறிப்பு வரை எல்லா வேலைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்யறேன்” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் ஜெயமலர். சென்னை அன்னனூரில் வசிக்கும் மாடித்தோட்ட விவசாயியான ஜெயமலர், தன் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து, காய்கறி உற்பத்தி செய்து வருகிறார். வெயிலற்ற ஒரு காலை வேளையில் ஜெயமலரைச் சந்தித்தோம்.

மகிழ்ச்சி கொடுக்கும் மாடித்தோட்டம்! - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்!

“எங்களுக்குச் சொந்த ஊரு ராஜபாளையம். நான் பிறந்தது விவசாயக் குடும்பம். விவசாய வேலைகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தோம். திருமணம் முடிஞ்சதும் சென்னைவாசியாகிட்டேன். விவசாயம் பண்ற அளவுக்கு இங்கே இடம் இல்லை. அதனால விவசாயத்துக்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகிடுச்சு. ஆனா விவசாயம் பண்ணணும்கிற ஆசை மனசுக்குள்ள இருந்துகிட்டே இருந்துச்சு. அப்போதான் பண்ணைத் தொழில்நுட்பம் தொடர்பான படிப்பு பற்றித் தெரியவந்தது. அதுல மாடித்தோட்டம் அமைக்கிறது பற்றித் தெரிஞ்சுக்கலாம்னு சொன்னாங்க. உடனே அதுல சேர்ந்துட்டேன். பண்ணைத் தொழில்நுட்பத்தில் இளநிலை, முதுநிலை படிச்சு முடிச்சேன். நான் கத்துக்கிட்டதைப் பயன்படுத்தி எங்க வீட்டுல 50 தொட்டிகள்வெச்சு, மாடித்தோட்டம் அமைச்சேன். ஆரம்பத்துல கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்துச்சு. அப்புறம் அனுபவம் மூலமாகக் கத்துக்கிட்டேன். இப்போ என்கிட்ட 200 தொட்டிகளுக்கு மேல இருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகிழ்ச்சி கொடுக்கும் மாடித்தோட்டம்! - பட்டணத்துப் பெண்ணின் அனுபவம்!

எங்க மாடித்தோட்டத்துல தக்காளி, குறும்புடலை, புளிச்சக்கீரை, கத்திரி, துளசி, இன்சுலின் செடி, மாதுளை, செவ்வாழை, கறிவேப்பிலை, புதினா, வெண்டை, கொத்தவரை, அவரை, தம்பட்டங்காய், கொய்யா, பாகல், பீர்க்கன், தூதுவளை, செம்பருத்தி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், செடி முருங்கை, பஜ்ஜி மிளகாய்னு இப்போ அறுபதுக்கும் மேற்பட்ட செடி வகைகளை வளர்த்துக்கிட்டிருக்கேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவா மாடித்தோட்டம் அமைக்கிறவங்க வீட்டுல பயன்படாம இருக்கம் குடங்கள், வாளிகள் மாதிரியான தேவையில்லாத பொருள்களைவெச்சுதான் விவசாயத்தை ஆரம்பிப்பாங்க. ஆனா நான், சிலிக்கான் சாக்குப் பைகள்ல செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். முதல்முறை விதை விதைச்சப்போ அஞ்சு மாசம் அறுவடைக்குக் காத்திருந்தோம். ஆனா இப்போ மூணு நாளைக்கு ஒரு முறை காய்களை அறுவடை செய்யும் அளவுக்குச் செடிகள் இருக்குது” என்ற ஜெயமலர் காய்கறிகளைப் பறித்துக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.

தோட்டத்தில் ஜெயமலர்
தோட்டத்தில் ஜெயமலர்

‘‘காய்களெல்லாம் எவ்வளவு செழிப்பா வளர்ந்திருக்குனு பாருங்க. நாம ஆசையா பார்த்துப் பார்த்து வளர்த்த செடிகள்ல மொட்டுவிட்டு, பூப்பூத்து, காய் காய்க்கிறதைப் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. அந்த சந்தோஷத்தை இந்தச் செடிகள் எனக்குத் தினமும் கொடுக்குது. தினமும் ஒரு மணி நேரம் செடிகளோடு செலவிடும்போது மனசு அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்குது” என்ற ஜெயமலர், மண்ணை வளப்படுத்துவது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

“என் தோட்டத்துல மண் பயன்பாடு குறைவுதான். 50 சதவிகிதம் தென்னைக் கழிவுகள், 25 சதவிகிதம் உரம், 25 சதவிகிதம் மண் என்ற விகிதத்தில்தான் எல்லாத் தொட்டிகளையும் நிரப்பியிருக்கேன். மாடித்தோட்டத்துல பலரும் தொட்டியில முழுக்க மண்ணைக் கொட்டிவெச்சு செடிகளை வளர்க்கிறாங்க. ஆனா, அப்படிச் செய்யக் கூடாது. தென்னை நார்க் கழிவுலதான் செடிகளை வளர்க்கணும். செடி நல்லா வளர்வதற்காகக் குழித்தட்டுகள்ல விதையைப் போட்டு, செடி துளிர்க்க ஆரம்பிச்ச பிறகு குழித்தட்டுகள்ல இருந்து நாற்றை எடுத்து சிலிகான் பைகள்ல நட்டு வளர்க்க ஆரம்பிப்பேன். மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம், பஞ்சகவ்யா, மண்புழு உரம் போன்றவற்றைத்தான் இடுபொருளாகப் பயன்படுத்துறேன். வாரம் ஒரு முறை இடுபொருள்கள் கொடுப்பேன். பூச்சித் தாக்குதலைத் தடுக்க வேப்ப எண்ணெய், தேமோர்க் கரைசல் தெளிப்பேன். பஞ்சகவ்யா, தென்னங்கழிவுகள் எல்லாத்தையும் நானே தயார் பண்றேன். தயார் பண்ண முடியாதவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.

தினமும் காலையில 7 மணிக்குள்ள எல்லா செடிகளுக்கும் தண்ணி கொடுத்துடுவேன். சிலர் மாடித்தோட்டம்வெச்சா வீடு சேதமாகிடுதுனு சொல்றாங்க. அதுக்கு முக்கியக் காரணம் நிறைய தண்ணி ஊத்துறதுதான். எல்லாச் செடிகளுக்கும் தொட்டி நிறைய தண்ணீர் ஊத்தணும்னு அவசியம் இல்லை.

சின்ன செடிகளுக்கு கால் லிட்டரும், வளர்ந்த செடிகளுக்கு ஒரு லிட்டர் வரைக்கும் தண்ணி தேவைப்படும். மழை நேரத்துல செடிகளுக்கு இன்னும் குறைஞ்ச அளவு தண்ணீரே போதுமானது. நாங்க சிலிக்கான் பைகள் பயன்படுத்துறதால தண்ணி வெளியே வர்றதில்லை. செடிகளுக்கு தண்ணி ஊத்துறது மாதிரியே பழுத்த இலைகள், பூச்சி பாதித்த இலைகளை அப்புறப்படுத்திடணும். இதைத் தொடர்ந்து செஞ்சுட்டு வந்தாலே செடிகள் செழுமையாக இருக்கும்’’ என்றவர் நிறைவாக,

‘‘இப்போ எங்க வீட்டுக்குத் தேவையான எல்லாக் காய்கறிகளையும் எங்க தோட்டத்திலிருந்தே எடுத்து பயன்படுத்துறோம். நஞ்சில்லாத காய்கறிகள்... அதுவும் நாங்களே விளையவெச்ச காய்கறிகளை உணவுல பயன்படுத்தும்போது கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது” என்று சொல்லும்போதே அவர் கண்களில் ஆனந்தம் மின்னுகிறது.