Published:Updated:

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்!

நாட்டுக்கோழிகளுடன் தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழிகளுடன் தங்கமணி

கால்நடை

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்!

கால்நடை

Published:Updated:
நாட்டுக்கோழிகளுடன் தங்கமணி
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழிகளுடன் தங்கமணி

கால்நடை வளர்ப்பில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கொடுக்கக்கூடியது, நாட்டுக்கோழி வளர்ப்பு. கொட்டகையில் அடைத்துத் தீவனம் இட்டு வளர்க்காமல், நாட்டுக்கோழிகளை அவற்றின் இயல்புபடி மேய்ச்சலுக்கு விட்டு வளர்த்தால் ஆரோக்கியமாக வளர்வதோடு, நல்ல விலையும் கிடைக்கும். அந்த வகையில் புறக்கடைக் கோழி வளர்ப்புமுறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி.

ஒரு காலைவேளையில் கோழிக்கொட்டகையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த தங்கமணியைச் சந்தித்தோம். “நான் பொறந்த ஊரு சூலூர் பக்கமுள்ள அருகம்பாளையம். அப்பா ஒரு முன்னோடி இயற்கை விவசாயி. ஆடு, மாடு, கோழினு கால்நடை வளர்ப்பிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. அதனால, எனக்கும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் வந்திடுச்சு. நான் கல்யாணம் பண்ணி இந்த ஊருக்கு (அரசூர்) வந்தேன். என் கணவர் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். இந்த ஊர், கோயம்புத்தூர் நகரத்துக்கு ரொம்பப் பக்கத்தில இருக்கிறதால ஏகப்பட்ட தொழிற்சாலைகள் வந்திடுச்சு. நிறைய பேர் நிலத்தை வித்துப்புட்டு வேற வேலைக்குப் போயிட்டாங்க. ஆனா, என் கணவர் வீட்டில் நிலத்தை அப்படியே வெச்சிருக்காங்க. என் வீட்டுக்காரர் வேன் வெச்சு ஓட்டிக்கிட்டு இருக்கார்.

நாட்டுக்கோழிகளுடன் தங்கமணி
நாட்டுக்கோழிகளுடன் தங்கமணி

மொத்தம் 7 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல கொஞ்ச நிலத்தில் மானாவாரியா விவசாயம் செய்றோம். மீதி நிலத்தில் மாடுகளுக்குத் தீவனம் போட்டிருக்கோம். இந்தக் கறவை மாடுகள் கொடுக்கிற பாலை அக்கம்பக்கம் இருக்கிறவங்களுக்கே விற்பனை செஞ்சிடுவோம். ஒருமுறை எங்கப்பா வீட்டுக்குப் போனப்போ, ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிச்சிட்டு இருந்தேன். அதுல, சரவணம்பட்டியில் இருக்கிற ‘கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய’த்துல கோழிவளர்ப்புப் பயிற்சி பத்தித் தெரிஞ்சுக் கிட்டேன். அப்பாகிட்ட சொன்னப்போ, பயிற்சியில் கலந்துக்கச் சொன்னார். வீட்டுக்காரர்கிட்ட அனுமதி வாங்கிப் பயிற்சியில் கலந்துக்கிட்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்க, கோழிகளுக்கான தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை, பராமரிப்பு, விற்பனைன்னு எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தார், டாக்டர் சிவக்குமார். அதெல்லாத்தையும் கவனமாகக் கேட்டுக்கிட்டு வந்தேன். அப்புறம் எங்க அப்பா, வீட்டில் வளர்த்திட்டு இருந்த 10 நாட்டுக்கோழிகளையும் 2 கட்டுச்சேவல்களையும் எனக்குக் கொடுத்தார். அதை வாங்கிட்டு இங்க வந்து வளர்க்க ஆரம்பிச்சேன்.

‘‘கோழிகளை 6 மாசம் வரைக்கும் வளர்த்து உயிர் எடைக்குக் கிலோ 300 ரூபாய்னு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கோம்.’’

கோழிகளுக்காக 40 சென்ட் நிலத்தை ஒதுக்கி நைலான் வலையைக் கட்டிவிட்டிருக்கேன். அதுக்குள்ளதான் கோழிகள் மேயுது. ராத்திரியில் கோழிகள் ஒதுங்குகிறதுக்காகச் சின்ன குடிசையும் போட்டிருக்கேன்” என்ற தங்கமணி கொட்டகையைக் காட்டியபடி பேச்சைத் தொடர்ந்தார்.

“மண்ணுல இருக்கிற புழு, பூச்சிகளைக் கோழிகள் கொத்திச் சாப்பிட்டுக்கும். அங்கங்க மண் பானைகள்ல தண்ணி வெச்சுடுவேன். தேவைப்படுறப்போ கோழிகள் குடிச்சிக்கும். காலையிலயும் சாயங்காலமும் கம்பு, சோளம்னு ஏதாவதொரு தானியத்தை இரைச்சு விட்டுடுவேன். கறையான்களைச் சாப்பிட்டா கோழிகளுக்குப் புரதச்சத்து அதிகம் கிடைச்சு வளர்ச்சி நல்லா இருக்கும்னு சொல்வாங்க. அதனால, சணல் சாக்குகளைக் கிழிச்சு தண்ணியில முக்கி மண்பானைக்குள் போட்டு, அங்கங்க கவுத்தி வெப்பேன். ரெண்டு நாளுக்குள்ள பானை முழுக்கக் கறையான் ஏறிடும். பானையைக் கொட்டி விட்டோம்னோ நாட்டுக் கோழிகள் புகுந்து விளையாடிடும்” என்ற தங்கமணி நிறைவாக,

“ஆரம்பத்தில் வாங்கிட்டு வந்த கோழிகள்ல இருந்து முட்டை எடுத்து அடைவெச்சுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கி விற்பனையை ஆரம்பிச்சோம்.

கோழிகளை 6 மாசம் வரைக்கும் வளர்த்து உயிர் எடைக்குக் கிலோ 300 ரூபாய்னு விற்பனை செஞ்சிக்கிட்டு இருக்கோம். சேவல்களை ஒரு வருஷம்வரை வளர்த்து ஒரு உருப்படியை 1,500 ரூபாய்ல இருந்து 2,000 ரூபாய் வரை விற்பனை செய்றோம்.

அடைக்குப் போக மிச்சம் இருக்கிற முட்டை களையும் 1 முட்டை 15 ரூபாய்னு விற்பனை செய்றோம். இங்க தாய்க்கோழிகளை அதிகரிச்சு, தினமும் 50 முட்டைகள்வரை விற்பனை செய்யணும்னு ஆசை இருக்கு. கோழிகள் பெருகினா, இன்குபேட்டர் வாங்கலாம்னு யோசனையில் இருக்கோம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, தங்கமணி, செல்போன்: 98429 29515