Published:Updated:

57 சென்ட், மாதம் ரூ.50,000... நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் இன்ஜினீயர்!

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

சிறுவிடைக் கோழிகள்தான் தமிழ்நாட்டோட பூர்வீக நாட்டுக்கோழிகள்னு தெரிஞ்சது. அதனால அந்த இனக் கோழிகளை வளர்க்கலாம்னு முடிவுக்கு வந்தேன்

நாட்டுக்கோழி வளர்த்து, நிறைவான வருமானம் பார்த்துவருகிறார் சென்னை, பல்லாவரத்தை அடுத்துள்ள திருமுடிவாக்கத்தைச் சேர்ந்த ஜெஷ்வின் வின்சென்ட். தனது பண்ணையில் கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

"மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். படிச்சு முடிச்சிட்டு நான் செய்யாத வேலை இல்லை. இங்கிலாந்துல படிக்கும்போதே சமையல் வேலை பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் நண்பர்கூட சென்னையில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். எங்க அம்மாவுக்கு மாடித்தோட்டத்துல அதிக ஆர்வம். 'செய்ய வேண்டிய வேலையை விட்டுட்டு செடியைப் பார்த்துக்கிட்டிருக்காங்களே'னு எனக்குக் கோபமா வரும். அப்படி என்னதான் செய்யறாங்கனு அடிக்கடி போய்ப் பார்ப்பேன். விரிவாக படிக்க க்ளிக்செய்க... http://bit.ly/37gTwok

இது சிறுவிடை இல்லைன்னு தெரியும். இப்படிப் பலமுறை ஏமாந்திருக்கேன். சிறுவிடைக் கோழிகளை விற்பனை செய்யச் சுமார் 7 மாதங்கள் ஆகும். அப்போதான் செடிகளை வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சது. எங்க மாடித்தோட்டத்துல விளைஞ்ச காய்கறிகளைச் சாப்பிடுறப்போதான் கடையில வாங்கிச் சாப்பிடும் காய்கறிக்கும், மாடித்தோட்டக் காய்கறிக்கும் அதிக வித்தியாசம் இருக்கறதை உணர முடிஞ்சது.

நண்பருடைய வியாபாரத்துக்காக கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குப் போக வேண்டிய சூழல் வந்துச்சு. அங்கே முள்ளங்கி வாங்கிட்டு வருவேன். அது ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். ஆனா, என் மாடித்தோட்டத்துல விளைஞ்ச முள்ளங்கியை வெச்சிருந்தா காத்துப்போன பலூன் மாதிரி மாறிடும். ரசாயனத்துல விளையுறதாலதான் ஒருவாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷா இருக்குனு புரிஞ்சது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமா உணவு உற்பத்தி பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். நாம சாப்பிடுற உணவு ரசாயனங்களால நிறைஞ்சிருக்குங்கற தகவல் அதிர்ச்சி தந்துச்சு.

57 சென்ட், மாதம் ரூ.50,000... நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் இன்ஜினீயர்!

அதுக்கப்புறம் நானும் மாடித்தோட்டத்துல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். அதிகமாகக் காய்கறிகளை விளையவெச்சேன். வெளியில இருந்து வாங்குற காய்கறிகள் எல்லாத்தையும் நல்லா வெந்நீர்ல கழுவிட்டுப் பயன்படுத்தினோம். கோழி வளர்ப்புல ஆர்வம் வந்துச்சு. மாடியில அஞ்சு கோழிகள், ஒரு சேவல் வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனாலும், இது எனக்குப் போதுமானதாகத் தோணலை. பண்ணை அமைச்சா நல்லா இருக்கும்னு தோணிச்சு. வீட்டுல சொன்னேன். முதல்ல யாரும் ஒத்துக்கலை. அப்புறம் அப்பாவைச் சம்மதிக்கவெச்சு, இங்கே பண்ணை வெச்சேன்" என்று நீண்ட விளக்கத்துடன் முன்கதை சொன்னவர் தொடர்ந்தார்.

"இந்த நிலம் மொத்தமும் 57 சென்ட். ஆரம்பத்துல கருவேல மரங்கள் முளைச்சுக் கிடந்தது. அப்பா அதையெல்லாம் சுத்தம் பண்ணி, பண்ணைவெச்சுக் கொடுத்தார். நானும் பல கோழிப் பண்ணைகளை நேர்ல போய்ப் பார்த்தேன். ஒவ்வொருத்தரோட அனுபவத்தையும் கேட்டேன். அதுல எனக்குத் தேவையான தகவல்களை எடுத்துக்கிட்டேன். தொடர்ந்து தேடல்லயே இருந்தேன்.

சிறுவிடைக் கோழிகள்தான் தமிழ்நாட்டோட பூர்வீக நாட்டுக்கோழிகள்னு தெரிஞ்சது. அதனால அந்த இனக் கோழிகளை வளர்க்கலாம்னு முடிவுக்கு வந்தேன். ஆனா, அதை வியாபாரரீதியா வளர்க்க முடியாதுன்னு பல பேர் சொன்னாங்க. ஆனாலும், நான் சிறுவிடைக் கோழிகள்தான் வளர்க்கணும்னு தீர்மானமா இருந்தேன். ஆரம்பத்துல சின்ன குஞ்சுகளா வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் பெருசாகும்போதுதான் அது சிறுவிடை இல்லைன்னு தெரியும். இப்படிப் பலமுறை ஏமாந்திருக்கேன். இப்படியே ரெண்டு வருஷம் வீணாகிடுச்சு. இப்பத்தான் 100 சிறுவிடை தாய்கோழிகளைச் சேர்த்திருக்கேன்'' என்றார்.

மேலும், "இப்போ பண்ணையில 300 கடக்நாத் கோழிகள், 300 சிறுவிடைக் கோழிகள்னு மொத்தம் 600 கோழிகள் இருக்கு. கோழி, முட்டை, குஞ்சு விற்பனை மூலமா வாரத்துக்கு மொத்தமா 25,010 ரூபாய் வருமானம் கிடைக்குது. மாசத்துக்குக் கணக்குப் போட்டா 1,00,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்குது. இந்த வருமானம் ஒரே மாதிரியா இருக்காது. சில மாசங்கள்ல ஏறும், சில மாசங்கள்ல குறையும். இதுல மின்சாரம், ஆள்கூலி, போக்குவரத்துனு செலவு போக மாசத்துக்கு 50,000 ரூபாய்க்குக் குறையாம லாபம் எடுத்துக்கிட்டு இருக்கேன். ஆனா, இந்த லாபத்துக்கு கொஞ்சம் முதலீடும் பொறுமையும் தேவை. கோழிப்பண்ணை ஆரம்பிச்சவுடனேயே லாபம் பார்த்துட முடியாது" என்றார்.

- கோழிகள் பராமரிப்பு முறை, விற்பனை வாய்ப்பு, சிறுவிடைக் கோழிகள், கோழிகளுக்கு மருத்துவம் உள்பட ஜெஷ்வின் வின்சென்ட் பகிர்வுகளை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க > https://www.vikatan.com/news/agriculture/country-chicken-rearing-yields-stunning-benefits

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

வீடியோ வடிவில்...

https://www.youtube.com/watch?v=MmCVvGPLO8o

அடுத்த கட்டுரைக்கு