Published:Updated:

வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!

பண்ணைக்குள் காய்கறி விற்பனையில்... சிவராமன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணைக்குள் காய்கறி விற்பனையில்... சிவராமன்

ஒருங்கிணைந்த பண்ணையம்

வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்

Published:Updated:
பண்ணைக்குள் காய்கறி விற்பனையில்... சிவராமன்
பிரீமியம் ஸ்டோரி
பண்ணைக்குள் காய்கறி விற்பனையில்... சிவராமன்

‘‘கொஞ்சம் நிலம், ரெண்டு மாடுகள், பதினைஞ்சு தென்னை மரங்கள் தர்ற நிம்மதியை வேற எதுவும் தர முடியாது. வியாபாரத்துல கோடிக்கணக்குல பணம் சம்பாதிக்கலாம். ஆனா, மனசுக்கு நிறைவைத் தருவது விவசாயம்தாங்க. அதுலயும் இயற்கை விவசாயம் மூலமா கிடைக்கிற ஆத்ம திருப்தியை வார்த்தையால வர்ணிக்க முடியாது’’ என்கிறார் சிவராமன்.

வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!

திருப்பூர் நகரின் மையத்திலிருக்கிறது ஆண்டிபாளையம். இங்கு ஒரு ஏக்கர் நிலத்தின் விலை 5 கோடி ரூபாய். இவ்வளவு விலை மதிப்புமிக்க இடத்தில் ஐந்து ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர் சிவராமன் குடும்பத்தினர். இவர் கிளாசிக் போலோ ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். ‘வனத்துக்குள் திருப்பூர்’ என்ற பெயரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடவுசெய்து பசுமையாக்கும் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பினர் மரக்கன்றுகளை நடவு செய்வதோடு நின்றுவிடுவதில்லை. தொடர்ந்து அவற்றைக் கண்காணித்து வளர்க்கிறார்கள் இந்த அமைப்பின் தன்னார்வலர்கள். தண்ணீர்ப் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு லாரிகள், டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொடுக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்ணைக்குட்டை
பண்ணைக்குட்டை

இத்தனை பணிகளுக்கிடையில் ‘அறப்பொருள் வேளாணகம்’ என்ற தனது இயற்கை விவசாயப் பண்ணை மூலம் நஞ்சில்லாக் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார் சிவராமன். ஓர் அதிகாலை நேரத்தில் அவரின் பண்ணைக்குச் சென்றோம். வேலிக்குப் பின்னே காற்றுத் தடுப்பாகச் சவுக்கு மரங்கள், வேலியில் முடக்கத்தான், வேலிப்பருத்தி, சீந்தல், சங்கு புஷ்பம், தூதுவளை அவற்றுக்குக் கீழே துத்தி என இயற்கையாக வளர்ந்து நிற்கும் மூலிகைகள் தலையாட்டி நம்மை வரவேற்றன. பண்ணையில் சிவராமனைச் சந்தித்தோம்.

‘‘விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஒரு கட்டத்துல நாங்க வியாபாரத்துக்கு வந்துட்டோம். விவசாயத்துல பெருசா லாபம் இல்லை. ஏதாவது ஒரு செலவு வந்துகிட்டே இருக்கும். அதனால விவசாயத்துல பெருசா ஆர்வம் இல்லாம இருந்தோம். அந்த நிலைமைலதான் `வனத்துக்குள்ள திருப்பூர்’ அமைப்புக்காகப் பல விவசாய நிலங்கள்ல மரக்கன்றுகளை நடவு செஞ்சோம். அப்போ விவசாயிகளோட நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைச்சது. விவசாயம் ஓர் ஆத்மார்த்தமான விஷயம்னு புரிஞ்சது.

வாட்ஸ் அப்பில் காய்கறி விற்பனை! - தொழிலதிபரின் இயற்கை விவசாயம்!

ஏற்கெனவே நாங்க வெச்ச மரங்கள் இயற்கை மீதான பிரமிப்பை, காதலை உருவாக்கியிருந்தன. அது விவசாயத்து மேலயும் திரும்பிச்சு. பல விவசாயிகளிடம் பேசினதுல இயற்கை விவசாயம் பத்தி அதிகமாகத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அதனால நாமும் ஒரு பண்ணையை உருவாக்கலாம்னு இந்தப் பண்ணையை ஆரம்பிச்சோம். ஆடு, மாடு, கோழி, மீன், காய்கறி, மரப் பயிர்கள்னு ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையா உருவாக்கினோம். இதுக்கு `ரேவதி’ங்கறவங்க ஆலோசனை கொடுத்தாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பண்ணைக்குட்டையில் மீன்

இந்த இடத்தை வாங்கும்போதே ஒரு பள்ளம் இருந்துச்சு. அதைச் செலவு செஞ்சு மூடுறதுக்கு பதிலா, பண்ணைக்குட்டையா வெச்சுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதனால அதைக் கொஞ்சம் சரி பண்ணி, ஏழு அடி ஆழத்துல பண்ணைக் குட்டையாக்கினோம். அந்த மண்ணுல தண்ணி அதிகம் தேங்காம இருந்துச்சு. அதனால கீழே பாலித்தீன் ஷீட் போட்டோம். `இனிமே குட்டையில தண்ணி நிக்குமே... இதுல ஏன் மீன் வளர்க்கக் கூடாது?’னு யோசிச்சோம். உடனே கொஞ்சம் திலேப்பியா மீன் குஞ்சுகளை வாங்கிவிட்டோம். இப்போ மீன்கள் நல்லா வளர்ந்திருக்கு. போர்வெல் தண்ணியை இந்தத் தொட்டியிலவிட்டு, அதுல இருந்து எடுத்துப் பாசனம் செய்யறோம்’’ என்றவர் பண்ணைக்கு அருகில் நம்மை அழைத்துச் சென்று மாடுகள் வளர்ப்பு தொடர்பாகப் பேசினார்.

பந்தல் காய்கறிகள்
பந்தல் காய்கறிகள்

‘‘இந்த பண்ணைக்குப் பக்கத்துல இன்னொரு பண்ணை இருக்கு. அங்க 40 மாடுகள் இருக்குது. நாட்டு மாடுகள் 25, சிந்து, கிர் மாதிரி வட மாநில மாடுகள் 15 இருக்குது. அங்கேயிருந்து பண்ணைக்குத் தேவையான எரு, சாணம், கோமியம் எல்லாத்தையும் எடுத்துக்குவோம். இந்தப் பண்ணைக்கு ஒரு காங்கேயம் காளையைக் கொண்டு வந்தோம். குறைஞ்ச செலவுல ஒரு பரண் அமைச்சு, ஆட்டுப் பண்ணை அமைச்சோம். அதுல தலைச்சேரி, கன்னி ஆடுகள்னு 20 இருக்குது. அதுக நடந்து மேயறதுக்காகப் பரணுக்கு முன்னே காலி இடத்தைவிட்டு, வேலி போட்டிருக்கோம். புல், முருங்கை, அகத்தி, வேலி மசால்னு தீவனத்தை அறுத்துட்டு வந்து உள்ளே போட்டுடுவோம். அதைத் தின்னுட்டு சுத்திகிட்டு இருக்கும். மழை, வெயிலுக்கு மட்டும் பரணுக்குள்ள போயிடும். இந்தப் பரணுக்கும் அதிகமா செலவு செய்யலை. பண்ணையில இருக்கிற ஆளுங்களே அமைச்சிட்டாங்க. ஆட்டுக் கொட்டகைக்குப் பக்கத்துலயே கோழிகளுக்கும் ஒரு கொட்டகை அமைச்சிருக்கோம். இப்ப 20 கோழிகள் இருக்குது. இதுவரைக்கும் கோழியில அதிக கவனம் எடுத்துக்கலை. இனிமேதான் அதோட எண்ணிக்கையை அதிகமாக்கணும்’’ என்றவர் தோட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

பண்ணையில் ஆடுகள்
பண்ணையில் ஆடுகள்

‘‘மூணு ஏக்கர்ல காய்கறி வெள்ளாமை செய்யறோம். பந்தல் காய்கறிகளான பீர்க்கன், புடல், பாகற்காய் பண்ணையில இருக்குது. கேரட், பீட்ரூட், நூக்கல், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மாதிரியான மலைக் காய்கறிகளையும் விளையவைக்கிறோம். அதுக்காகப் பசுமை வலைப் பந்தல் அமைச்சிருக்கோம். அது இல்லாம கத்திரிக்காய், தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, வெங்காயம், முள்ளங்கி விளைய வைக்கிறோம். அரைக்கீரை, சிறுகீரை, பாலக் கீரைனு சின்ன இடத்துல விளையவைக்கிறோம்.

இங்கே விளையிற காய்களை வெளியே கொண்டுபோய் விற்பனை செய்றதே இல்லை. 30 லிட்டர் தினமும் விற்பனை செய்றோம். பால் மூலமா மாசம் 1,00,000 ரூபாய் வருமானம் வரும்.

மாடுகளுக்கு நேப்பியர் புல், கோ.எஃப்.எஸ்.29, வேலி மசால்னு பசுந்தீவனத்தை நடவு செஞ்சிருக்கோம். தோட்டத்தைச் சுத்தியும் பல வகையான மரங்களை வெச்சிருக்கோம். இங்கே இயற்கையாகவே இருபதுக்கும் மேற்பட்ட மூலிகைகள் தன்னால வளருது. அது இல்லாம, சின்னதா ஒரு மூலிகைத் தோட்டம் அமைச்சிருக்கோம்’’ என்று பண்ணையைச் சுற்றிக்காட்டி விளக்கியவர், செயல்பாடுகள் பற்றிச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பண்ணைக்குள் காய்கறி விற்பனையில்... சிவராமன்
பண்ணைக்குள் காய்கறி விற்பனையில்... சிவராமன்

பண்ணையில் நேரடி விற்பனை

‘‘ `இது வெறும் பண்ணையாக மட்டும் இருக்கக் கூடாது. இதனால சமுதாயத்துக்கு ஒரு பயன் இருக்கணும்’னு நினைச்சேன். `நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்யணும். அதை நாம பயன்படுத்துவதோடு நண்பர்கள், உள்ளூர் மக்களுக்கும் கொடுக்கணும்னு தோணிச்சு. இங்கே விளையும் காய்களை வெளியே கொண்டுபோய் விற்பனை செய்யறதே இல்லை. விளைஞ்சதை நண்பர்களுக்குக் கொடுத்தோம். அவங்க சாப்பிட்டுப் பார்த்துட்டு, `நல்லா சுவையா இருக்கு’னு சொன்னதோட மத்தவங்களுக்கும் சொல்ல ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல `தேவைப்படுறவங்க பண்ணையிலயே வந்து வாங்கிக்கலாம்’னு சொன்னோம். அப்படி நேர்ல வந்து காய்கறி வாங்கிட்டுப் போன நண்பர் ஒருவர் `பசுமைக் காய்கறிகளைத் தோட்டத்திலேயே வாங்கலாம்.

கண்ணு முன்னாடியே பறிச்சுத் தர்றாங்க’னு உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்கள்ல பதிவு பண்ணிட்டாரு. அதுக்குப் பிறகு காய்கறிகளை வாங்க இங்கேயே மக்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க. `அறப்பொருள் வேளாணகம்’ பேர்ல நாங்க ஒரு வாட்ஸ்அப் குழு ஆரம்பிச்சோம். `விரும்பமுள்ளவங்க சேர்ந்துக்கலாம்’னு லிங்க் கொடுத்தோம். ஒரு மாசத்துலயே 250 பேர் குழுவுல இணைஞ்சிட்டாங்க. இப்போ தினமும் பண்ணையில என்னென்ன காய்கறிகள் இருக்குன்னு குரூப்ல பதிவு செஞ்சிடுவோம். தேவைப்படுறவங்க நேரா வந்து வாங்கிட்டுப் போவாங்க.

மாடுகள்
மாடுகள்

சில நேரங்கள்ல காய்கறிகள் அதிகமா இருந்தா, எங்க தொழிற்சாலை கேன்டீனுக்கு கொடுத்துடுவோம். கத்திரிக்காய் அதிகமா இருந்தா வத்தல் ஆக்கிடுவோம். பச்சை மிளகாகாயைவிட, காய்ஞ்ச மிளகாய்க்குத்தான் வரவேற்பு அதிகமா இருக்குது. அதனால செடியிலயே காயவிட்டு காய்ஞ்ச மிளகாயா பறிச்சுக் கொடுக்குறோம். மோர் மிளகாய் தயார் செய்யறோம். அதெல்லாம் இருக்குன்னு போட்டதுமே வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. முடக்கத்தான், துத்தி, தூதுவளை, பசலை, லெமன் கிராஸ் புல்னு மூலிகைகளையும் கொடுக்கிறோம். அகத்தி இலை, பூ, முருங்கை இலை அதிகம் போகுது’’ என்றவர் பண்ணையின் மேலாளர் பிரபுவை நமக்கு அறிமுகப்படுத்தினார்.

‘‘ `பசுமைக் காய்கறிகளைத் தோட்டத்துலேயே வாங்கலாம். கண்ணு முன்னாடியே பறிச்சுத் தர்றாங்க’னு உள்ளூர் வாட்ஸ்அப் குரூப்கள்ல ஒருத்தர் பதிவு பண்ணிட்டாரு. அதுக்குப் பிறகு, காய்கறிகளை வாங்க மக்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க.’’

பால் மூலம் ரூ.1,00,000... காய்கறிகள் மூலம் ரூ.50,000...

பண்ணையின் காய்கறி விற்பனை மற்றும் வருமானம் பற்றி விளக்கினார் பிரபு. ‘‘பண்ணைக்கான வாட்ஸ்அப் குரூப்ல தினமும் என்னென்ன காய்கறிகள் இருக்குனு பதிவு செஞ்சிடுவோம். தேவையானவங்க வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க.

சில காய்கறிகள்ல வத்தல் மாதிரி மதிப்புக்கூட்டியும் கொடுக்குறோம். இங்கே காய்கறி விற்பனை மூலமா மாதம் 45,000 முதல் 50,000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. அதுல வேலை செய்றவங்க சம்பளம் மாதம் 30,000 ரூபாய் ஆகிடும். மீதிப் பணம் லாபமா நிக்கும். இங்கே இருக்கிற தீவனங்களை மாடுகளுக்குக் கொண்டு போய்ப் போடுறோம். மாடுகள் பகல் நேரத்துல மேய்ச்சலுக்குப் போயிடும்.

பால் விற்பனையும் செய்யறோம். அதையும் தேவையானவங்க வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. நாட்டு மாட்டுப் பாலை லிட்டர் 80 ரூபாய்க்கும், கலப்பின மாட்டுப் பாலை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யறோம். தினமும் கலப்பினப் பால் சராசரியாக 35 லிட்டர், நாட்டு மாட்டுப் பால் சராசரியாக 30 லிட்டர் விற்பனை செய்யறோம். பால் மூலமா மாதம் ஒரு லட்ச ரூபாய் வருமானம் வருது. அதைவெச்சு, பசுமை வலைப் பந்தல் அமைக்கிறது. காய்கறிகளுக்குப் பந்தல் அமைக்கிறதுனு பண்ணையிலேயே செலவு செஞ்சிடுவோம்’’ என்கிறார் உற்சாகம் குறையாத குரலில்.

தொடர்புக்கு, அறப்பொருள் வேளாணகம், செல்போன்: 90475 45566.

வனத்துக்குள் திருப்பூர்!

னியன் நகரமான திருப்பூரை, பசுமை நகரமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது `வெற்றி’ அமைப்பு. அதன் தலைவராக இருக்கும் சிவராமனிடம் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் பற்றிப் பேசினோம். “வெற்றி அமைப்பு, அரசுப் பள்ளிக்குக் கட்டடம் கட்டிக்கொடுத்தது. ஆண்டிப்பாளையம் கண்மாயைத் தூர்வாரி, உள்ளே பறவைகள் தங்குறதுக்காக ரெண்டு தீவுகளை உருவாக்கிக்கொடுத்தது. இந்த நிலையில அப்துல் கலாம் அய்யா மறைவுக்கு திருப்பூரில் ஒரு அஞ்சலிக் கூட்டம் நடத்தினோம். அதுல, ‘` `ஒரு மனிதன் வாழ்நாளில் ஐந்து மரங்களையாவது வைக்க வேண்டும்’ என்று கலாம் அய்யா சொல்வார். அவருக்கு நாம் செலுத்துற அஞ்சலி, ஒரு லட்சம் மரங்களை நடவு செய்யறதுதான்’னு பேசினோம். அதுல உருவானதுதான், `வனத்துக்குள் திருப்பூர் திட்டம்.’

இப்போ மாவட்டம் முழுக்க 8 லட்சம் மரக்கன்றுகளை நடவு செஞ்சிட்டோம். அடுத்த வருஷம் 10 லட்சத்தைக் கடந்திடுவோம். இது மரம் நடும் திட்டம் இல்லை. மரங்களை வளர்க்கும் திட்டம். விவசாய நிலங்கள்லதான் மரம்வெச்சுக் கொடுப்போம். நாங்களே குழியெடுத்து, கன்றுகளை நடவு செஞ்சு கொடுத்திடுவோம். பாசன வசதி இல்லாத நிலங்களுக்கு டிராக்டர் மூலமா நாங்களே தண்ணி கொடுக்கிறோம். இதுல திருப்பூர்ல இருக்கிற தொழிலதிபர்கள் பலரும் இருக்காங்க. அவங்க கொடுக்கும் நன்கொடை மூலமாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் 150 தன்னார்வலர்களாலயும் இது சாத்தியமாகுது. நிலத்தின் உரிமையாளர் இதுக்காகப் பணம் தரத் தேவையில்லை. நிலத்துக்கு வேலி இருக்கணும். தண்ணி ஓரளவுக்காவது இருக்கணும். ரெண்டும் இருந்தாப் போதும்.

நடவு செய்யப் போறவங்களுக்கு அவங்கவங்க வீட்டுலேயே உணவு செஞ்சு கொடுத்தனுப்புவாங்க. அது முடியாதவங்களுக்கு நாங்களே உணவையும் ஏற்பாடு செஞ்சு கொடுத்திடுவோம். எங்க நோக்கம், அவங்க மரங்களை முறையா பராமரிக்கணும் அவ்வளவுதான். இதுவரைக்கும் நாங்க நடவு செஞ்ச மரங்கள் எல்லாமே நல்லபடியா வளர்ந்திருக்கு. திருப்பூர் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் கழிவுகளை (மனிதக் கழிவுகள்) சுத்திகரிப்பு செஞ்சு, அந்தத் தண்ணியை செடிகளுக்குக் கொடுக்கிறோம். இதனால மரங்களும் சிறப்பாக வளருது. இன்னும் சில வருஷங்கள்ல திருப்பூர் பசுமை நகரமாக மாறும்’’ என்கிறார் நம்பிக்கையோடு.

இது பண்ணையல்ல... பயிற்சி மையம்!

றப்பொருள் வேளாணகம் தொடர்பாகப் பேசிய சிவராமன், ‘‘எத்தனை தொழில்கள் இருந்தாலும், நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும் நமக்கு உணவு கொடுப்பது விவசாயம்தான். அதை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கணும். இன்னைக்கு இருக்கிற பரபரப்பான வாழ்க்கையில குழந்தைகளையும் இணைச்சிட்டோம். விவசாயம்னா என்னன்னு தெரியாத தலைமுறையை உருவாக்கிட்டு இருக்கோம். இங்கே பலரும் காய்கறி வாங்க குழந்தைகளோட வருவாங்க.

குழந்தைகளுக்குக் குளத்து மீன்களை வேடிக்கை காட்டுவாங்க. ஆடுகள், மாடுகள் எல்லாத்தையும் குழந்தைகள் ஆர்வமா பார்ப்பாங்க. தோட்டத்துல பயிர்களைக் குழந்தைகள் ஆச்சர்யமாகப் பார்க்குறாங்க. அந்த அளவுக்கு விவசாயம் அவங்களுக்கு அந்நியமாகிப் போச்சு. அது மாறணும். அதுக்கு நம்மாலான முயற்சிகளைச் செய்யலாம்னு ஆரம்பிச்சதுதான் அறப்பொருள் வேளாணகம்.

இது விவசாயம், இயற்கை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் இடமாக இருக்கணும்னு நினைக்கிறேன். இங்கே இப்போ சோதனையும் ஆய்வும்தான் நடந்துகிட்டு இருக்கு. அதுல தெரிஞ்சுக்குற நல்ல விஷயங்களை விவசாயிகளுக்குச் சொல்லப்போறோம். அதுக்காக இங்கே ஒரு பயிற்சி அறை கட்டியிருக்கோம். எல்லா வசதிகளோடவும் இருக்கும் அந்த அறையில விவசாயிகள் வந்து இயற்கை விவசாய நுட்பங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்’’ என்றார்.

வாய்க்காலில் குழாய்ப் பாசனம்!

வாய்க்கால் பாசனம் செய்யும்போது, வாய்க்கால் முழுவதும் நீர் வர வேண்டியிருக்கும். இதனால் தண்ணீர் பயிரை அடைய அதிக நேரம் ஆகும். அத்துடன் ஒருவர் அருகேயிருந்து மடை மாற்றிவிட வேண்டியிருக்கும். இதற்கு மாற்றாக ஒரு முறையை இந்தப் பண்ணையில் பயன்படுத்துகிறார்கள். அது பற்றிப் பேசிய பிரபு, ‘‘பயிர் இருக்கிற வயலுக்குள்ள மட்டும் வாய்க்கால் தண்ணி போனாப் போதும். அதுக்காக ஒரு பி.வி.சி குழாயை அமைச்சு, ஒவ்வொரு வாய்க்கால் முனையிலும் ஒரு சொட்டுநீர்க் குழாய் டேப் இருக்குற மாதிரி அமைச்சுக்கணும்.

பிரபு
பிரபு

இப்படி செஞ்சிட்டா மடைமாத்த ஆள் தேவையில்லை. காய்கறிப் பயிர்களுக்கு பார்கூட எடுக்கத் தேவையில்லை. அஞ்சு கலப்பையில உழவு செஞ்சா கரை உருவாகிடும். அதுல நாற்றுகளை நடவு செஞ்சு, குழாயைத் திறந்துவிட்டா, ஒரே நேரத்துல எல்லா வாய்க்காலுக்கும் பாய்ஞ்சிடும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism