Published:Updated:

பாரம்பர்யத்தில் அசத்தும் உழவன் சிறுதானிய உணவகம்!

முன்னேற்றம்
பிரீமியம் ஸ்டோரி
முன்னேற்றம்

முன்னேற்றம்

பாரம்பர்யத்தில் அசத்தும் உழவன் சிறுதானிய உணவகம்!

முன்னேற்றம்

Published:Updated:
முன்னேற்றம்
பிரீமியம் ஸ்டோரி
முன்னேற்றம்
சிறுதானியப் பூரி, தூயமல்லி பொங்கல், குள்ளக்கார் தோசை, சாமை இட்லி, நவதானிய சுண்டல், கேழ்வரகு இடியாப்பம், சிவப்பு அரிசி ஆப்பம், காளான் சூப், வரகரிசி கீரை வடை... இதுபோல் இன்னும் பலவிதமான பாரம்பர்ய உணவு வகைகள்... மன்னார்குடி காந்தி சாலையின் வழியாகச் செல்பவர்களைச் சுண்டி இழுக்கிறது.

மன்னை உழவன் சிறுதானிய உணவகம். இதன் முகப்பில் வைக்கப் பட்டுள்ள உணவுப் பட்டியலைப் பார்த்து, பலரும் திகைப்புடன் நின்று கவனிக் கிறார்கள். இங்குள்ள உணவு வகைகள் மட்டுமல்ல, இங்கு இடம்பெற்றுள்ள ஒவ்வோர் அம்சமும் பாரம்பர்யத்தைப் பறைசாற்றுகிறது. சுவரில் ஓவியமாகப் புன்னகைக்கிறார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அவரது கைகளில் உண்மையான ஏர் கலப்பை பொருத்தப்பட்டுள்ளது. ராட்டையுடன் கூடிய கிணறு... வயல் ஓரத்தில் நெல் புடைக்கும் கிராமத்துப் பெண்மணி. கல் உரலில் தானியம் உடைக்கும் மூதாட்டியென இங்கு வரையப்பட்டுள்ள ஓவியங்கள் நம் கண்களைப் பசுமையாக்கு கின்றன.

இயற்கை அங்காடியில் அருண் ரவி
இயற்கை அங்காடியில் அருண் ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீற்றுக் கொட்டகை, தூண்களுடன் கூடிய திண்ணை... இதில் வைக்கப்பட்டுள்ள மண்பானை, செப்புப் பாத்திரம் ஆகியவை பழங்காலக் கிராமச் சூழலுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. மேஜையில் வைக்கப்பட்டுள்ள, உலோகத் தாலான சின்னஞ்சிறு மாட்டு வண்டி பிரமிப்பூட்டுகிறது. இப்படி வயிற்றுக்கும் கண்களுக்கும் பாரம்பர்ய விருந்தளித்துக் கொண்டிருக்கும் இங்கு, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி ரகங்களை மட்டுமே கொண்டு உணவு படைக் கிறார்கள்.

நம்மாழ்வார் ஓவியம்
நம்மாழ்வார் ஓவியம்

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்

இதன் உரிமையாளரும் இளம் விவசாயியுமான அருண்ரவியிடம் பேசினோம். “சிறுதானியங்களையும் பாரம்பர்ய அரிசி வகைகளையும் பெரும்பான்மையான மக்கள்கிட்ட கொண்டு போகணும்கிறதுதான் என்னோட நோக்கம். இதுக்கு இயற்கை அங்காடி மட்டுமே நடத்தினால் சாத்தியப்படாது. மன்னார்குடியில ஏற்கெனவே சிலர் ஆரம்பிச்ச இயற்கை அங்காடிகள், மக்கள் ஆதரவு இல்லாத தால மூடிட்டாங்க. பாரம்பர்ய விளைபொருள்கள் என்னதான் உடலுக்கு ஆரோக்கியமானதுனு தெரிஞ்சாலுமே கூட, இது சுவையா இருக்குமானு மக்களுக்கு ஒரு தயக்கம் இருக்கு. இதை எப்படியெல்லாம் சுவையா சமைக்குறதுனும் அவங்களுக்குத் தெரியலை. விதவிதமான உணவு வகைகளாகவும் அதேசமயம் நம்மோட அன்றாட உணவாகவும் சமைச்சுக் கொடுத்து, மக்கள் சுவை பார்த்துட்டாங்கனா, பாரம்பர்ய விளை பொருள்களை விரும்பி வாங்க ஆரம்பிச்சுடு வாங்கனு நான் நம்பினேன். அதனாலதான் உணவகத்தோடு சேர்த்து இயற்கை அங்காடியைத் தொடங்கினேன். இப்ப ரெண்டுமே வெற்றிகரமாக இயங்கிக்கிட்டு இருக்கு.

உணவருந்தும் வாடிக்கையாளர்கள்
உணவருந்தும் வாடிக்கையாளர்கள்

உதாரணத்துக்குச் சொல்லணும்னா, எங்களோட உணவகத்துக்கு வந்து, சிறுதானியப் புட்டு சாப்பிட்டுப் பார்த்துட்டு, இதை எப்படிச் செய்றதுனு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு, உடனே சிறுதானிய மாவு வாங்கிக்கிட்டு போறாங்க. தூயமல்லி அரிசி சோறு சாப்பிட்டுப் பார்த்துட்டு, ‘நல்லா இருக்கே’னு, அரிசியை நிறைய பேர் விரும்பி வாங்குறாங்க’’ என்றவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எம்.பி.ஏ படிச்சிட்டு, சென்னையில ஒரு பங்குச் சந்தை நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். பசுமை விகடனும் நம்மாழ்வாரும் ஏற்படுத்தின தாக்கத்தால, 2010-ம் வருஷம் சொந்த ஊருக்கே திரும்பி வந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க குடும்பத்துக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கர்ல மட்டும் வீட்டுக்குத் தேவையான பாரம்பர்ய நெல் ரகங்களை இயற்கை முறையில சாகுபடி செய்றோம். மத்த நிலங்கள்ல படிபடியா ரசாயனத்தைக் குறைச்சிக்கிட்டு வர்றோம்.

‘‘மக்கள் சுவை பார்த்துட்டாங்கனா, பாரம்பர்ய விளைபொருள்களை விரும்பி வாங்க ஆரம்பிச்சுடுவாங்கனு நான் நம்பினேன்.’’‘‘மக்கள் சுவை பார்த்துட்டாங்கனா, பாரம்பர்ய விளைபொருள்களை விரும்பி வாங்க ஆரம்பிச்சுடுவாங்கனு நான் நம்பினேன்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒண்ணே முக்கால் வருஷத்துக்கு முன்னாடி இந்த உணவகத்துடன்கூடிய அங்காடியைத் தொடங்கினேன். இது எங்களுக்குச் சொந்தமான இடம். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடைவீதி. வழக்கமான உணவகம் ஆரம்பிச்சாலே கூட்டம் நிரம்பி வழியும். உரக்கடை வைக்கலாம்னு சிலர் ஆலோசனை சொன்னாங்க. வாழ்க்கையில், பணம் மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது. மக்கள் நலன் சார்ந்த, அதேசமயம் லாபகரமான தொழிலாகவும் இருக்கணுங்கற எதிர்பார்ப்போடு, இந்தச் சிறுதானிய உணவகத்தைத் தொடங்கினோம். எங்க குடும்ப நண்பர் பாரதி பிரகாஷூம் இதுல எனக்கு நிறைய ஆலோசனைகளைச் சொன்னார்.

கிராமத்து ஓவியம்
கிராமத்து ஓவியம்

விதவிதமான துவையல்

பாரம்பர்ய அரிசி, சிறுதானியங்கள்னு சொன்னாலே விலை ரொம்ப அதிகமாக இருக்கும்கிற எண்ணத்துனாலயும்கூட நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இதை வாங்குறதில்லை. இந்தக் கருத்தை முறியடிக்கணும்கிறதுனால தான், குறைவான லாபம் கிடைச்சாலே போதும்னு, முடிஞ்சவரைக்கும் குறைவான விலைக்கு விற்பனை செய்றோம். தூயமல்லி அரிசி சாப்பாடு 70 ரூபாய்தான். தூதுவேளை ரசம், கண்டதிப்பிலி ரசம், முடக்கத்தான் ரசம், அன்னாசி ரசம்னு ஒவ்வொரு நாளைக்கும் ஓவ்வொருவிதமான ரசம்... சுண்டை வத்தல் குழம்பு, மணத்தக்காளி வத்தல் குழம்பு, உருண்டை குழம்பு, மோர் குழம்புனு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித மாகக் கொடுக்குறோம். பிரண்டை துவையல், தூதுவேளை துவையல், கருவடகம் துவையல், இஞ்சித் துவையல்னு விதவிதமா கொடுக்குறோம்.

பாரம்பர்யத்தில் அசத்தும் உழவன் சிறுதானிய உணவகம்!

உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய... வெள்ளைச் சர்க்கரை, டால்டா, பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் போன்ற பொருள்களை உபயோகப் படுத்துறதில்லை. அஜினமோட்டோ, உணவு, நிறமூட்டி போன்ற ரசாயனங்களும் பயன் படுத்துறதில்லை. செக்கு நல்லெண்ணெய், கடலெண்ணெய், நாட்டுச் சர்க்கரை மற்றும் பனங்கருப்பட்டிதான் பயன்படுத்துறோம். இதுல சமைக்கக்கூடிய உணவுகள் நல்லா சுவையாதான் இருக்குங்கிறதை உணர்ந்து, நிறைய பேர் தங்களோட வீடுகள்லயே கூட இதைக் கடைப்பிடிக்குறாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடலைக் கறி

மூலிகைத் தேநீர், திரிகடுகம் தேநீர், சிறுதானிய கஞ்சி, மூலிகை சூப், பச்சைப்பயறு பாயசம்... இவற்றையெல்லாம் சில்வர் டம்பளர்ல கொடுக்குறோம்.

பாரம்பர்யத்தில் அசத்தும் உழவன் சிறுதானிய உணவகம்!

கறுப்பு உளுந்து, கருப்பட்டி களி, வரகரிசியில் செஞ்ச நீர் உருண்டை, பிடி கொழுக்கட்டை, பூர்ண கொழுக்கட்டை, தேங்காய்ப் போளி, வடை, கேழ்வரகு இடியாப்பம், கம்பு புட்டு, நவதானிய சுண்டல்... இவற்றையெல்லாம், சருகு தொன்னையிலயும், வாழை இலையிலயும் வெச்சி கொடுக்குறோம்.

காலை, இரவு உணவா, சிறுதானியங்கள்ல செஞ்ச பூரி, சப்பாத்தி, பாரம்பர்ய அரிசியில் செஞ்ச இட்லி, தோசை, ஆப்பம், பொங்கல், கடலைக் கறினு விதவிதமா கொடுக்குறோம். மக்கள் விரும்பி சாப்பிடுறாங்க. நிரந்தர வாடிக்கையாளர்களாக நிறைய பேர் அடிக்கடி வந்துட்டுப் போறாங்க. உணவகத் தோடு சேர்த்து அங்காடி இருக்குறதுனால, சிறுதானியங்கள், பாரம்பர்ய அரிசி, கருப்பட்டி, செக்கு எண்ணெயும் நல்லா விறுவிறுப்பா விற்பனை ஆகுது’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, அருண்ரவி, செல்போன்: 98945 43216.

பயனடையும் விவசாயிகள்!

ண் பானை மற்றும் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீர்தான் இங்கு குடிநீராக வழங்கப்படுகிறது. இது தொடர்பாகப் பேசிய அருண்ரவி, ‘‘எங்க உணவகத்துக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள், தங்களோட வீட்டு விஷேசங்களுக்கும் எங்ககிட்ட ஆர்டர் கொடுக்குறாங்க. விருந்தினர்கள் விரும்பிச் சாப்பிட்டதா சொல்றாங்க. நம்மோட பாரம்பர்ய உணவு வகைகளைக் குறுகிய காலத்துல நிறைய மக்கள்கிட்ட கொண்டு போயி சேர்த்திருக்கோம். அதே போல, இயற்கை விவசாயத்துல பயிர் செய்ற விவசாயிககிட்டதான் விளைபொருள்களை வாங்குறோம். அதனால விவசாயிகளும் பயன் அடையுறாங்க. உணவகத்துக்குப் பின்னாடி இருக்கும் சின்ன இடத்துல கொத்தமல்லி, தண்டுக்கீரை, வெண்டி, கொத்தவரங்காய், பரங்கி, பாகல் போன்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிருக்கேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism