Published:Updated:

தென்னையில் குரும்பை, இளங்காய்கள் உதிர்ந்தால் இதைச் செய்தால் போதும்!

இளங்காய்கள்

குரும்பைப் பருவத்திலிருந்து காய்களின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவத்திலும் நுண்கிருமிகள் பூச்சிகள், எலி, அணில்களால் குரும்பை, இளங்காய்கள் உதிர்தல் காணப்படுகிறது.

தென்னையில் குரும்பை, இளங்காய்கள் உதிர்ந்தால் இதைச் செய்தால் போதும்!

குரும்பைப் பருவத்திலிருந்து காய்களின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவத்திலும் நுண்கிருமிகள் பூச்சிகள், எலி, அணில்களால் குரும்பை, இளங்காய்கள் உதிர்தல் காணப்படுகிறது.

Published:Updated:
இளங்காய்கள்

தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் பலவித பிரச்னைகளில் முக்கியமானதுதான் தென்னை மரத்தின் குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்தல். இதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நுண்கிருமிகள், பூச்சிகள், எலி, அணில்களின் தாக்குதல் ஆகியவற்றாலும் விழும் வாய்ப்புள்ளது. மேலும், மண்ணில் முக்கிய சத்துகள் குறைபாட்டாலும் குரும்பைகள் உதிர்வதுண்டு. இவை தவிர, மண்ணின் அதிக களர் உவர் தன்மையாலும் வடிகால் வசதியின்மையாலும்கூட குரும்பை உதிர்வதுண்டு.

அணில்
அணில்

இது தவிர கடுமையான வறட்சி, மகரந்தச் சேர்க்கை குறைபாடு, ஹார்மோன் குறைவு மற்றும் மரங்களின் பாரம்பர்ய குணம் ஆகியவற்றாலும்கூட தென்னையில் குரும்பைகளும் இளங்காய்களும் உதிர்கின்றன. பொதுவாக, தென்னையில் பாளைகள் வெளிவந்ததிலிருந்து சுமார் 11 - 12 மாதங்களில் தேங்காய்கள் அறுவடைக்குத் தயாராகின்றன. இதற்கிடையில் குரும்பைப் பருவத்திலிருந்து காய்களின் வெவ்வேறு வளர்ச்சிப் பருவத்திலும் நுண்கிருமிகள் பூச்சிகள், எலி, அணில்களால் குரும்பை, இளங்காய்கள் உதிர்தல் காணப்படுகிறது. குரும்பைகள் நீர்வசதி இருந்தாலும் ஓரளவு நீர் உள்ள தோப்பில்கூட உதிர்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளநீர்
இளநீர்

தென்னையைத் தாக்கும் நுண்கிருமிகள் பல. அவற்றுள் கோலிடோடிரைசம், போட்ரியோ டிப்லோடியா மற்றும் போட்ரியோஸ்பேரியா ரோடினா ஆகிய பூஞ்சைகள் சேர்ந்தோ, தனியாகவோ குரும்பைகள், இளங்காய்களைத் தாக்குகின்றன. இதனால் முற்றுவதற்கு முன்பே உதிர்ந்துவிடுகின்றன. இந்த பூஞ்சைகள் குரும்பை, தேங்காய்களில் தேங்காய் வெட்டும்போது ஏற்படும் காயம், செதில்பூச்சிகள், மாவுப்பூச்சிகள் ஆகியவற்றால் ஏற்படும் காயங்களின்மூலம் தேங்காயின் உரிமட்டைப் பகுதியில் நுழைகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் உரிமட்டைப் பகுதியில் கரும்பழுப்பு நிறத்திட்டுக்களைக் காணலாம். இந்தத் திட்டுக்கள் குரும்பை தேங்காய் காம்புப் பகுதியுடன் இணையும் இடத்துக்கு பரவும்போது அந்தப் பகுதி முற்றிலும் அழுகி, கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும். அதனால் குரும்பைகளும், முற்றாத தேங்காய்களும் உதிர்ந்துவிடுகின்றன.

தென்னை விவசாயம்
தென்னை விவசாயம்

கீழே உதிர்ந்த பிறகு, இந்தப் பூஞ்சை தேங்காய், குரும்பைகளின் மேற்பரப்பு முழுவதும் பரவி உரிமட்டையின் முழுப்பகுதியும் அழுகி காய்ந்துவிடுகின்றன. இந்தக் காய்ந்த உரிமட்டைகளின் மேல் கறுப்புநிறத் திட்டுக்கள் பல காணப்படும். அவற்றிலுள்ள பூஞ்சாள வித்துக்கள் காற்றில் பரவி, மரத்திலுள்ள இந்த நல்ல குரும்பைகளையும் இளங்காய்களையும் தாக்க வாய்ப்பிருக் கிறது. மேலும் தஞ்சை வாடல்நோய், பைடாப்தாரா பூஞ்சாளம் ஆகிய நோய்கள் தாக்குதலாலும் தென்னையில் குரும்பைகள், இளங்காய்கள் உதிர்தல் காணப்படும்.

பொதுவாக, தென்னங்குலையில் அரிவாள் போன்றவைகளால் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதன்மூலம் அவைகளால் ஏற்படும் காயங்களைத் தவிர்த்து பூஞ்சைகளின் தாக்குதலை குறைக்கலாம்.

இளங்காய்கள்
இளங்காய்கள்

நோயினால் உதிர்ந்துவிடும் குரும்பை, இளங்காய்களைப் பொறுக்கி எரித்து விடவேண்டும். தஞ்சைவாடல் நோய், பைடாப்தாரா பூஞ்சாளத்தால் ஏற்படும் கதுத்தழுகல் நோய் ஆகியவற்றால் குரும்பைகள் கொட்டும்போது அந்நோய்களைக் கட்டுப்படுத்துவதன்மூலம் குரும்பைகள் உதிர்வதைத் தடுக்கலாம்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்கியும் குரும்பைகள் உதிரலாம். ஆம் செதில்பூச்சி, கண்ணாடி இறக்கைப்பூச்சி, மாவுப்பூச்சிகள் ஆகியவை குரும்பை, இளங்காய்களைத் தாக்கும்போது முக்கியமாக காம்புப் பகுதியின் அருகே தாக்கி சாறை உறிஞ்சுவதன்மூலம் குரும்பை, இளங்காய்கள் உதிர்ந்துவிடுகின்றன.

தென்னை விவசாயம்
தென்னை விவசாயம்

எலி, அணில்கள் இளநீர்க் காய்களைத் தாக்குவதால், தாக்கப்பட்ட காய்கள் மேலும் முற்றாமல் உதிர்ந்துவிடும். நெருக்கமாக நட்ட தோப்புகளில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

எலிக்கேக்குகள் கறுப்பு நிறத்தில் எள்மிட்டாய்போல மெழுகுபூசிய கடின வில்லைகளாக கிடைக்கும். நச்சுக் கூச்சம் ஏற்படாது, திறந்த வெளியிலுள்ள பகுதிகளில் வந்து ரத்தநாளங்கள் வெடித்து எலிகள் இறக்கும். இதர பிராணிகள் அல்லது மனிதர்கள் எவ்வித பாதிப்பும் அடைவதில்லை. தன் உடல் எடைபோல 2 சதவிகித அளவு உண்டால் மட்டுமே இறப்பு நேரும் என்பதால், கால்நடைகள் உண்டாலும் இறப்பதில்லை. இன்றே கவனிப்போம் குரும்பைகளைக் காப்போம்.

- டாக்டர்.பா.இளங்கோவன்,

வேளாண்மை இணை இயக்குநர்,

காஞ்சிபுரம் மாவட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism