Published:Updated:

தஞ்சையில் தென்னை மரங்களை வெட்டி அழித்தது ஏன்? பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்...

வெட்டி வீழ்த்தப்பட்ட தென்னை மரங்களுடன் ராமலிங்கம்

திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பந்துருந்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தன்னுடைய தோட்டத்தில் இருந்த 30 ஆண்டுகள் ஆன 143 தென்னை மரங்களை வெட்டி அழித்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழக அளவிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் தென்னை மரங்களை வெட்டி அழித்தது ஏன்? பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்...

திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பந்துருந்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தன்னுடைய தோட்டத்தில் இருந்த 30 ஆண்டுகள் ஆன 143 தென்னை மரங்களை வெட்டி அழித்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழக அளவிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
வெட்டி வீழ்த்தப்பட்ட தென்னை மரங்களுடன் ராமலிங்கம்

தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தென்னை விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்னை விவசாயிகள் சாலைகளில் தேங்காய் உடைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பந்துருந்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தன்னுடைய தோட்டத்தில் இருந்த 30 ஆண்டுகள் ஆன 143 தென்னை மரங்களை வெட்டி அழித்த சம்பவம் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாமல், தமிழக அளவிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், தற்போது தேங்காய்க்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை என்பது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையைத் தரக்கூடியதுதான் என்றாலும் கூட, பல ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்த மரங்களை வெட்ட எப்படி இவருக்கு மனம் வந்தது. இவர் தென்னை மரங்களை வெட்ட, உண்மையாகவே விலை வீழ்ச்சி மட்டும்தான் காரணமா எனப் பலரது மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.

 வெட்டப்பட்ட தென்னை மரங்கள்
வெட்டப்பட்ட தென்னை மரங்கள்

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகளிடம் நாம் பேசியபோது ``ராமலிங்கம் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்க்கையில முன்னேறி வந்தார். கடந்த ரெண்டு வருஷமாவே தேங்காய்க்கு நல்ல விலை இல்லாததுனால, நொந்துபோய் புலம்பிக்கிட்டேதான் இருந்தார். உரிய நேரத்துல தேங்காய் பறிக்க இந்தப் பகுதியில ஆள்களும் கிடைக்குறதில்லை அப்படியே கிடைச்சாலும் நிறைய கூலி கொடுத்தாகணும். பெரும்பாலும் தானாகவே முதிர்ச்சி அடைஞ்சுதான் கீழே விழும்.

இதுமாதிரி விழக்கூடிய காய்களை வியாபாரிகள் விரும்ப மாட்டாங்க. மட்டையை உரிச்சு அடுத்த நாளே காய்கள் வெடிச்சிடும். இதனாலயும் ராமலிங்கம் நிறைய நஷ்டத்தை சந்திச்சுக்கிட்டு இருந்தார். இவரோட வீடும் தோட்டமும் வேற வேற இடத்துல இருக்குறதுனால, கீழ விழக்கூடிய காய்களை இவரோட தோட்டத்து பக்கம் போகக்கூடிய சிலர் பொறுக்கி எடுத்துக்கிட்டு போய்கிட்டு இருந்தாங்க. எல்லாத்துக்கும் மேல இப்ப தேங்காய் விலை ரொம்ப மோசமா வீழ்ச்சி அடைஞ்சதுனால விரக்தி அடைஞ்சிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராமலிங்கம்
ராமலிங்கம்

தென்னை மூலமா இனிமே லாபம் பார்க்க வாய்ப்பே இல்லைனு புலம்பிக்கிட்டே இருந்தார். ஆனா, இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு முடிவெடுத்தது எங்களுக்கே அதிர்ச்சியாதான் இருக்கு. தென்னை மரங்களை வெட்டினாரே ஒழிய, கீழ சாஞ்சு கிடக்குற தென்னையைப் பார்த்து, ரொம்ப வேதனைப்பட்டுக்கிட்டுதான் இருக்கார். இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்த மரங்களை வெட்ட வேண்டியதாயிடுச்சேனு நொந்து போறார்’’ எனத் தெரிவித்தார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாயி ராமலிங்கத்திடம் இதுகுறித்து நாம் கேட்டதும் பாவம், பொங்கித் தீர்த்துவிட்டார். ``30 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு தேங்காய் 5 - 6 ரூபாய்க்கு விலை போச்சு, அப்பெல்லாம் காய்கள் பறிக்க ஒரு மரத்துக்கு ஒரு ரூபாய் வீதம்தான் கூலி கொடுத்தோம். ஆனா, இப்பவும் ஒரு தேங்காய்க்கு 5 - 6 ரூபாய்தான் விலை கிடைக்குது. காய்கள் பறிக்க ஆள்கூலி ஒரு மரத்துக்கு 40 ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கு. இப்படி இருந்தா எப்படி லாபம் கிடைக்கும். என்னோட ரெண்டு ஏக்கர் தோட்டத்துல 143 தென்னை மரங்கள் இருக்கு.

 ராமலிங்கம்
ராமலிங்கம்

60 நாள்களுக்கு ஒரு தடவை இந்த 143 மரங்கள்ல இருந்தும் ஒரு வெட்டுக்கு மொத்தம் 2,500 காய்கள் கிடைக்கும். பெருங்காய்களாக இருந்தா ஒரு காய்க்கு 5 ரூபாய் விலை கிடைக்கும். சைஸ் சின்னதா இருந்தா 2 - 3 ரூபாய்தான் விலை கொடுப்பாங்க. சரசாரியா ஒரு காய்க்கு 4 ரூபாய் வீதம் 2,500 காய்களுக்கு 10,000 ரூபாய் வருமானம் வரும்.

இதுல காய்கள் பறிக்க ஆள்கூலி, டீ, பலகாரம் எல்லாம் சேர்த்து 6,000 ரூபாய் செலவாயிடும். காய்கள் அள்ளுற கூலி, போக்குவரத்து செலவுக்கு 2,000 ரூபாய் போயிடும். ஆக இந்த இரண்டு ஏக்கர் தென்னை மரங்கள்ல இருந்து ஒரு வெட்டுக்கு 2,000 ரூபாய் வீதம் ஒரு வருஷத்துக்கு 6 வெட்டுகள் மூலம் 12,000 ரூபாய்தான் நிகரலாபமா கையில மிஞ்சும். கஜா புயலுக்குப் பிறகு, அடுத்த சில மாசங்கள் மட்டும் ஓரளவுக்கு நல்ல விலை கிடைச்சது. ஆனா, அதுக்குப்புறம் கடந்த ரெண்டு வருஷமாவே லாபகரமான விலை இல்லை.

என்னோட 2 ஏக்கர் தோட்டத்தை வாழைச் சாகுபடிக்கு குத்தகைக்குக் கொடுத்தா, வரக்‌ஷத்துக்கு 70,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல நானே நேரடியா, வாழை, இல்லைனா காய்கறிகள் சாகுபடி செஞ்சா இன்னும் கூடுதலாவே லாபம் கிடைக்கும். இதனால்தான் என்னோட தென்னை மரங்களை அழிச்சிட்டு வேற ஏதாவது பயிர் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். நல்லா வளர்ந்து காய்ப்புக்கு கொடுத்துக்கிட்டு இருக்குற மரங்களை வெட்ட எனக்கே மனசு வரலைதான். ஆனா, எவ்வளவுக்கு நாளைக்குத்தான் லாபம் இல்லாமல் விவசாயம் செய்ய முடியும்’’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.