கோவை மாவட்டம், பொள்ளாச்சி தென்னை விவசாயத்துக்கு பெயர் பெற்றது. பொதுவாக தென்னையில் நோய் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத பிரச்னையாகிவிட்டது. அந்த வகையில் சமீப காலமாக தென்னை மரங்களைத் தாக்கும் இலை கருகல் நோய் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து, தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவுக்கு சிறப்பாக கிடைத்தது. இதையடுத்து, சில இடங்களில் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களில் உள்ள இலைகள் பச்சை நிறத்தில் மாறின. ஜனவரி மாதத்துக்கு பிறகு வெயில் அதிகரிக்க தொடங்கியது.

இதன் காரணமாக இலைகள் மீண்டும் மஞ்சள் நிறத்தில் பரவின. சில பகுதிகளில் இப்போதும் இலை கருகல் நோய் தாக்குதல் தீவிரமாக உள்ளது. அரசாங்கம் இதை உடனடியாக தடுத்து நிறுத்தி, காய்ப்புத்திறன் குறைந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், “இலை கருகல் நோய் இளந்தென்னை நாற்றுகள் மற்றும் முதிர்ந்த தென்னையை தீவிரமாக தாக்கும். இது 10-25 சதவிகிதம் மகசூலையும் பாதிக்கும். கோடைக்காலங்களில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதைத் தடுக்க, தென்னை மரங்களில் நோய் முற்றிய அடிமட்டை இலைகளை அகற்றி எரிக்க வேண்டும். பிரச்னைக்கு தகுந்த உரங்களை பரிந்துரை செய்து வருகிறோம். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை கூறி வருகிறோம்” என்றனர்.