Published:Updated:

குறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள்! - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்!

பெங்களுருவில் உள்ள 
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
பெங்களுருவில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்

இடுபொருள்

குறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள்! - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்!

இடுபொருள்

Published:Updated:
பெங்களுருவில் உள்ள 
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
பிரீமியம் ஸ்டோரி
பெங்களுருவில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்

யற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்யும் பயிர்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைத்து வருகிறது. குறிப்பாக நகரப் பகுதிகளில் இருக்கும் பெரிய அங்காடிகளில் தனி கவனம் பெறுகிறது. இதற்கு வழிகாட்டுவதற்காக இயற்கை இடுபொருளை அரசு நிறுவனங்களே தயாரித்து விற்பனை செய்கின்றன. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சில இயற்கை இடுபொருள் களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிலையத்தின் சமூக அறிவியல் பயிற்சித் துறையின் முதன்மை விஞ்ஞானி முனைவர்.செந்தில்குமார் கூறிய தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

குறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள்! - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்!

நீம் சோப்

எங்கள் மையத்தின் சார்பில் நீம் சோப் என்ற ஒன்றை வெளியிட்டுள்ளோம். இது வேப்பெண்ணெய் மற்றும் புங்கன் எண்ணெயிலிருந்து தயாரிக்கப் பட்டுள்ளது. இதை அனைத்து வகையான காய்கறிப் பயிர்களுக்கும், பழப்பயிர்களுக்கும் இயற்கை இடுபொருளாகப் பயன்படுத்தலாம். ஐ.பி.எம் (ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு அமைப்பு) அறிவுறுத்தியுள்ள முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். செயற்கைப் பூச்சிக்கொல்லிகளுக்கு இணையானது. அனைத்துவிதமான பூச்சிகளையும் இது கட்டுப்படுத்தும். ஒரு ஹெக்டேருக்கு (இரண்டரை ஏக்கர்) 10-15 கிலோ தேவைப்படும். பெயர்தான் சோப்பு என்று இருக்கிறது. இதைப் பவுடர் வடிவில்தான் வழங்கி வருகிறோம். இலைச்சுருட்டுப்புழு, பழ ஈ உள்ளிட்ட பூச்சித் தாக்குதலுக்கு இதைப் பயன்படுத்தலாம். இதன் விலை ஒரு கிலோ 260 ரூபாய்.

குறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள்! - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்!

அர்கா சிட்ரஸ் ஸ்பெஷல்

டி.ஏ.பி, பாஸ்பேட் உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால் மண்ணில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துகள் பெருமளவில் அழிந்துவிட்டன. பெரும்பான்மையான விவசாயிகள் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தைக் கெடுத்துவிட்டார்கள். என்னதான் செயற்கை உரங்களைப் பயன் படுத்தினாலும், மண்ணில் நுண்ணூட்டச் சத்துகள் குறிப்பிட்ட அளவில் இருப்பது அவசியம். தற்போது நுண்ணுயிர் உரங்கள் 3-5 சதவிகிதம்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதை மேலும் அதிகரிக்கும்பொருட்டு, அர்கா சிட்ரஸ் ஸ்பெஷல் என்ற இடுபொருளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

குறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள்! - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்!

இதைப் பயன்படுத்தினால் மண்ணில் உள்ள நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டை உடனடியாகச் சரி செய்யும். உரத்தின் தேவையும் குறையும். பயிர் விரைவில் மகசூலுக்கு வந்துவிடும். காய்களுக்கு நிறமும், நல்ல மகசூலும் கிடைக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயன்படுத்துவது எப்படி?

75 கிராம் சிட்ரஸ் ஸ்பெஷல் பவுடர், ஒரு ஷாம்பு பாக்கெட்(இல்லையென்றால் 30 கிராம் காதி சோப்), 2 எலுமிச்சைப் பழங்களின் சாற்றை 15 லிட்டர் தண்ணீரில் இட்டு, நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு இதை இலைகளின் மீது தெளிக்கலாம். பயிரில் பூ எடுப்பதற்கு முன்பே தெளிப்பது நல்ல பலன் தரும். தொடர்ந்து அறுவடை வரை தெளிக்கலாம். நல்ல வெயில் அடிக்கும் பகல் நேரத்தில் இந்தக் கரைசலைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இளம் காலை, பின் மாலைப் பொழுதுகளில் தெளிக்கலாம். இதன் விலை 2 கிலோ பாக்கெட் 300 ரூபாய்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

அர்கா பனனா ஸ்பெஷல்

ஒரு பயிரின் வேர் நலமாக இருந்தால் மட்டுமே, அந்தப் பயிர் செழிப்பாக வளரும். வேர் நலமாக இருக்க வேண்டுமென்றால், மண்ணில் நுண்ணூட்டச்சத்து அவசியம். அந்த வகையில் அர்கா பனனா ஸ்பெஷல் வாழைச் சாகுபடியில் பயன்படுத்தினால் அதிக மகசூலில், நல்ல தரமான வாழைப் பழங்கள் கிடைக்கும். இந்த இடுபொருளை வாழை நடவு செய்த ஐந்தாவது மாதத்திலிருந்து அறுவடை வரை கொடுக்கலாம். மாதத்துக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். மேலே சொன்ன முறையில் (75 கிராம் அர்கா பனனா ஸ்பெஷல் பவுடர்+ ஒரு ஷாம்ப் பாக்கெட்(இல்லையென்றால் 30 கிராம் காதிசோப்)+ 2 எலுமிச்சைப்பழங்களின் சாறு+15 லிட்டர் தண்ணீர்) கரைசலைத் தயாரித்துத் தெளிக்க வேண்டும். இதன் விலை 2 கிலோ பாக்கெட் 300 ரூபாய்.

குறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள்! - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்!

அர்கா மைக்ரோபியல் கன்சோர்டியம்

விதை நேர்த்திக்காக வெளியிட்டுள்ள நுண்ணுயிர் உரம். நைட்ரஜன், பாஸ்பரஸ், ஜிங்க் சத்துகள் அடங்கியது.

10 முதல் 20 கிராம் அர்கா மைக்ரோபியல் கன்சோர்ட்டியத்தை, 20 மில்லி அரிசி வடித்த வடிகஞ்சியுடன் கலந்து பிசைந்து கலவையாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையோடு 100-200 கிராம் காய்கறி விதைகளைக் கலக்க வேண்டும். விதையைச் சுற்றி கலவை நன்றாகப் படும்படி பிசைந்து, நிழலில் அரை மணி நேரம் உலர்த்தி, 24 மணி நேரத்தில் விதைத்துவிட வேண்டும். இப்படி விதைத்தால் விதைகள் நன்றாக முளைத்து வரும். விதைகள் எதுவும் வீணாகாது. விதைகளைப் பூச்சிகள் தாக்காது. நல்ல மகசூலும் கிடைக்கும். இதைத் தண்ணீரில் கலந்து வேரில் படுமாறும் கொடுத்து வரலாம். ஒரு கிலோ 150 ரூபாய். மேலே சொன்ன இயற்கை இடுபொருள்கள் முறையான சான்றிதழ்கள் பெற்று, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகே விற்பனைக்குக்கொண்டு வரப்படுகின்றன. ஒப்பீட்டளவில் தனியார் நிறுவனங்கள் விற்கும் இயற்கை இடுபொருள்களின் விலையைவிட மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களுருவில் உள்ள 
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
பெங்களுருவில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்

இதை இயற்கை விவசாயிகள்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை, செயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளும் பயன்படுத்தலாம். செயற்கை பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களுக்கு ஈடுசெய்யும் அளவுக்கு வீரியமும் தரமும் கொண்டவை. தேவைப்படும் விவசாயிகள் நிலையத்தை அணுகலாம்.

குறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள்! - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்!
இயற்கை இடுபொருள்கள் மிகக் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி விதைகள், பழமரக்கன்றுகள் இங்கே விற்கப்படுகின்றன.

இதைத்தவிரக் காய்கறி விதைகள், பழமரக்கன்றுகள் இங்கே விற்கப்படுகின்றன. விவசாயிகளுக்குக் காய்கறிகள், பழப்பயிர்கள் சாகுபடி குறித்ததான பயிற்சிகளும் நிலையத் தில் வழங்கப்படுகின்றன. நிலையத்திலேயே விதை ஏ.டி.எம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான காய்கறி விதைகளையும் இந்த ஏ.டி.எம்மிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

20 ரூபாய் செலுத்தி, விதை பேக்கெட்களைப் பெற்றுக்கொள்ளலாம். இயற்கை இடுபொருள்கள் தேவைப்படுவோர் நேரடியாக நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளலாம். அல்லது ICAR Unit-IIHR, BANGLORE PAYABLE AT BANGLORE என்ற பெயருக்குப் பொருளின் விலை, அஞ்சல் செலவையும் சேர்த்து டி.டி எடுத்து அனுப்பலாம்.

அல்லது இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் வங்கிக் கணக்குக்கு (A/c No: 37578009241, IFSCode: SBIN0041187) பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ளலாம். வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு முன் தகவல் தெரிவித்துவிட்டுச் செலுத்தவும். பணம் பெற்ற பிறகு பொருள்கள் அஞ்சல் வழியில் அனுப்பப்பட்டுவிடும்.

தொடர்புக்கு, Director,

ICAR-IIHR/Officer Incharge, ATIC,

Hessarghatta Lake P.O, Bengaluru-560089

Phone No: 080 28446815, 28446010, 23086100, Email: atic.iihr@icar.gov.in

முனைவர் செந்தில்குமார்,

செல்போன்: 96637 96473

இணையதளம்: www.iihr.res.in

எலுமிச்சை, சப்போட்டோ, மாங்காய் அறுவடைக் கருவிகள்!

எலுமிச்சை, சாப்போட்டோ, மாங்காய்களைக் கைகளால் பறித்து அறுவடை செய்ய நீண்ட நேரமாகிறது. அதனால் அறுவடை செய்யப் பிரத்தியேகமான கருவிகள் நிலையத்தின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை அறுவடை செய்யும் கருவிமூலம் ஒரு மணி நேரத்தில் 15-20 கிலோ பழங்களை அறுவடை செய்துவிட முடியும்.

இதன் முனையில் இருக்கும் ஊசி போன்ற அமைப்பு இதற்கு உதவுகிறது. அதே போன்று சப்போட்டோ பழங்களை அறுவடை செய்யும் கருவியைக் கொண்டு ஒரு மணி நேரத்தில் 100 கிலோ அறுவடை செய்யலாம்.

இந்தக் கருவியைக் கொண்டு கொய்யாவையும் அறுவடை செய்யலாம். மாங்காய் அறுவடைக்கு ஹைட்ராலிக் முறையில் பெரிய கருவியும் இருக்கிறது. மனிதர்கள் பயன்படுத்தும் சிறிய கருவியும் இருக்கிறது. இந்தக் கருவிகளின் விலை 350 ரூபாய்.