Published:Updated:

ரூ.4,000-ல் எளிய கதிரடிக்கும் கருவி! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

கருவியுடன் ஜெயக்குமார்
கருவியுடன் ஜெயக்குமார்

நெற்பயிர்களைப் பிரதானமாகப் பயிரிட்டு லாபம் பார்த்துவருகிறார். ஆனால், நெற்பயிர் அறுவடையின்போது செலவு அதிகமாவதால் இயந்திர அறுவடைக்கு முயன்றிருக்கிறார்.

சுற்றுச்சூழல் மீதுள்ள அக்கறை, இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் போன்ற காரணங்களால் விவசாயத்தின் பக்கம் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். செங்கல்பட்டு அருகிலுள்ள மறைமலை நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார்.

நெற்பயிர்களைப் பிரதானமாகப் பயிரிட்டு லாபம் பார்த்துவருகிறார். ஆனால், நெற்பயிர் அறுவடையின்போது செலவு அதிகமாவதால் இயந்திர அறுவடைக்கு முயன்றிருக்கிறார். அதிலும் நெல் கலப்படமாகிப் போகவே, இறுதியாக நெல்மணிகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றைத் தானே வடிவமைத்திருக்கிறார் ஜெயக்குமார். அது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

ரூ.4,000-ல் எளிய கதிரடிக்கும் கருவி! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

“எனக்கு மொத்தம் ஆறு ஏக்கர் நிலம் இருக்கு. அதில் நாலு ஏக்கர்ல மரப் பயிர்கள் இருக்கு. மீதம் இருக்கிற நிலத்துல நெல்லும் நிலக்கடலையும்தான் பிரதானமான பயிர்கள். நெல் அறுவடை இப்போதான் முடிஞ்சுது. பாரம்பர்யமான விவசாயக் குடும்பம்கிறதால விவசாய வேலைகள் எல்லாம் அத்துப்படி. ஆனா, தனியார் கம்பெனியில வேலை கிடைச்ச பிறகு விவசாயத்துல கொஞ்சம் இடைவெளி ஆகிடுச்சு. சூழலும் அப்போ சரியில்லை.

அஞ்சு வருஷத்துக்கு முன்னால வேலையை விட்டுட்டு விவசாயத்தைப் பார்ப்போம்னு இறங்கிட்டேன். இப்போ நான் முழுநேர விவசாயி. கம்பெனியில வேலை பார்க்குறப்போ இருந்தே பசுமை விகடன் படிப்பேன். அதனால விவசாயத்துக்கு வரும்போதே நான் இயற்கைவழி விவசாயம்தான்னு முடிவு செஞ்சுட்டு வந்தேன்.

இப்போ முழுக்க இயற்கை விவசாய முறையிலதான் விவசாயம் செய்யறேன். நெற்பயிருக்கு மட்டும் அதிகமான ஆள்கள் தேவைப்படுறாங்க. நடவுக்குக் கூட ஆட்களை வெச்சோ, இயந்திரம் மூலமாவோ நடவு செஞ்சுக்கலாம். ஆனா, அறுவடைக்குக் கண்டிப்பா ஆட்கள் மூலமாத்தான் அறுத்துக் கதிரடிக்கணும். பல ரக நெற்பயிர்களை ஒரே இயந்திரம் அறுவடை செய்யறதால இயந்திரத்துக்குள்ள இருக்குற நெல், நம்ம நெல்லோட கலந்திடும்.

இது தவிர, நெல் ரெண்டா உடையறது, முனைகள் உடைந்துபோறதுனு சில பிரச்னைகள் இருக்கு. இயந்திரம் மூலமாக நெற்பயிர் அறுவடை செஞ்சா, விதை நெல்லுக்குச் சரிப்பட்டு வராது. அதனாலதான் தேடிப்பிடிச்சு அறுவடைக்கு ஆள் வெச்சுக்குறோம். ஆனா, கதிரடிப்புக் கூலினு தனியா ஒரு தொகை செலவாச்சு. அதனால இதுக்கு ஒரு கருவி கண்டுபிடிச்சா என்னனு தோணிச்சு.

அப்படி உருவானதுதான் இந்தக் கருவி” என்றவர், அவரின் கண்டுபிடிப்பான கதிரடிக்கும் கருவியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். அதன் முழு விவரத்தை பசுமை விகடன் இதழில் அறிய... > 4,000 ரூபாயில் எளிய கதிரடிக்கும் கருவி! https://bit.ly/2W2SYij

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு