கொரோனாநோய்த் தடுப்பு ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் வேளாண்மை சார்ந்த தொழில்கள் இடையூறின்றி, தொடர்ந்து நடைபெறும்பொருட்டு தமிழக அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பயிர்களில் நோய்த் தாக்குதல், உரமிடுதல், ரகங்கள் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் விவசாயிகள் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மேற்கண்ட துறைகளோடு இணைந்து, வேளாண் பெருமக்களுக்கு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவி செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் குமார் பரிந்துரையின்பேரில், விஞ்ஞானிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் சாகுபடி பணியில் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.




