Published:Updated:

மழையின்றித் தவிக்கும் மானாவாரி விவசாயிகள்; ஒப்பாரி வைத்து கொடும்பாவி எரித்து நூதன வழிபாடு!

தூத்துக்குடியில் பருவ மழை பெய்யாமல் போக்கு காட்டி வருவதால், மழை பெய்ய வேண்டி ஒப்பாரி வைத்தும் கொடும்பாவியை சாலைகளில் இழுத்துச் சென்று ஊருக்கு வெளியே எரித்தும் கிராம மக்கள் நூதன வழிபாடு நடத்தினர்.

மழை பெய்ய வேண்டி பல கிராமங்களில் மழைக்கஞ்சி வழிபாடு, பொங்கல் வழிபாடு, கிராம எல்லையில் ஆடு பலியிடுதல் போன்ற நூதன வழிபாடுகளை மக்கள் செய்வதை நாம் பார்த்திருக் கிறோம். மக்களின் மனதில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையால் கிராமங்களில் மக்கள் இந்த வழிபாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். மழை பெய்வதற்காக அப்படியான ஒரு நம்பிக்கைகளில் ஒன்றுதான் கொடும்பாவி கட்டி இழுத்து ஒப்பாரி வைத்து எரிக்கும் சடங்கு. தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 1,70,000 ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் ஆவணி மாதம் கடைசி வாரத்தில் இருந்து பயிரிட்டனர்.

கொடும்பாவியுடன் கிராம மக்கள்
கொடும்பாவியுடன் கிராம மக்கள்
குமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் சிக்கி பலியான 6 மாத யானைக்குட்டி!

ஆரம்பத்தில் மழைக்கான அறிகுறி தென்பட்டது. அதனால் அடுத்தடுத்த விவசாயப் பணியில் மக்கள் ஈடுபட்டனர். விதைப்பு செய்து ஒரு மாத காலமாக மழை பெய்யாததால் மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் கெட்டுவிட்டன. இதையடுத்து கடந்த 15 நாள்களுக்கு முன் மீண்டும் விதைத்துள்ளனர்.

அதற்குப் பிறகும் மழை பெய்யவில்லை. இதனால், விதைக்க, உரமிட, உழுதல் வகைக்கு என ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவாகியும் நஷ்டம்தான் எனப் புலம்புகிறார்கள் மானாவாரி விவசாயிகள். இந்த நிலையில் எட்டயபுரம் அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தில் மழை பெய்ய வேண்டி கொடும்பாவியை தெருக்களில் இழுத்து தீயிட்டு எரித்தனர். இதுகுறித்து அயன்வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம்.

கொடும்பாவி எரிப்பு
கொடும்பாவி எரிப்பு

``தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயமே பிரதானமாக நடந்துட்டு வருது. மானாவாரி விவசாயத்துக்கு அடிப்படையே மழைதான். மழை பெய்யலேன்னா, இங்க விவசாயம் நடக்காது. பெய்ய வேண்டிய மழை பெய்யலேன்னா மழைக்கஞ்சி காய்ச்சி ஊத்துறது, ஊர் எல்லையில ஆட்டுக்கிடா பலி கொடுக்குறதுன்னு சில சடங்குகளைச் செய்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுபோல ஒண்ணுதான் கொடும்பாவி எரிக்கிறது. யாரோ ஒரு கொடிய பாவி ஊரில் இருப்பதால்தான் மழை பெய்யவில்லை என நினைத்து அந்தப் பாவியை செறுப்பால் அடித்து, இழுத்துச் சென்று ஊருக்கு வெளியே வைத்து எரித்துவிட்டால், மழை பெய்துவிடும் என்பது எங்களின் நம்பிக்கை. சட்டை, பேன்ட் உடைக்குள் வைக்கோலை அடைத்து கொடும்பாவி உருவ பொம்மையைச் செய்வோம். அந்தப் பொம்மையை கொடும்பாவியாகச் சித்திரிப்போம். அந்தக் கொடும்பாவியைச் சுற்றி ஊரிலுள்ள பெண்கள் கூடி, அந்தக் கொடும்பாவி இறந்துபோனதாக நினைத்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.

ஒப்பாரி வைக்கும் பெண்கள்
ஒப்பாரி வைக்கும் பெண்கள்
இதுவரை இல்லாத அளவுக்கு விலைபோன பருத்தி; மகிழ்ச்சியில் விவசாயிகள்; விலையேற என்ன காரணம்?

`பெய்யுற மழை பெய்யலியே... போட்ட விதை முளைக்கலியே... செவழிச்ச துட்டு நட்டமாப் போச்சுதே... வாங்குன கடனை எப்படி நானும் அடைக்கிறது… குடும்பத்தைத்தான் எப்படி நானும் காப்பாத்துறது... கொடும்பாவி உன்னாலத்தான் மழைத்தண்ணி ஒத்த சொட்டு விழலயே... தூத்தல் கூடத் தூரலியே... செத்து நீயும் போனாத்தான் ஊருக்குள்ள மழை பெய்யும்... புல், பூண்டு முளைக்குமய்யா' எனச் சொல்லி பெண்கள் தலையை விரித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். பிறகு, கொடும்பாவியை ஊர்ப் பெரியவர்கள் இழுத்துட்டுப் போயி ஊருக்கு வெளியே எரிப்போம். இப்படிச் செஞ்சா மழை பெய்யும்கிறது எங்களோட நம்பிக்கை. அப்படி பெய்யுற மழைத்தூத்தலை கையில ஏந்தி வாங்கி தலையில தெளிச்சுக்குவோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு