Published:Updated:

விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்; ஏன் தெரியுமா?

திருப்பதி

12 வகையான உணவுப் பொருள்களை எந்த ஒரு இடைத்தரகர்களின் தலையீடும் இல்லாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரசாயனமில்லாத பிரசாதங்கள் வழங்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்; ஏன் தெரியுமா?

12 வகையான உணவுப் பொருள்களை எந்த ஒரு இடைத்தரகர்களின் தலையீடும் இல்லாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரசாயனமில்லாத பிரசாதங்கள் வழங்கப்படும்.

Published:Updated:
திருப்பதி

இயற்கையான முறையில் விளைவித்த உணவுகளை உண்ணும் போதுதான், மக்களின் ஆரோக்கியம் பெருகும். காலப்போக்கில் இன்ஸ்டன்ட் முறையில் மக்களின் வாழ்க்கையும், உணவு முறையும் மாறியதால், உணவுப் பொருள்களைப் பயிரிடுவதும், உற்பத்தி செய்வதும் என எல்லாம் வேகமாக மாறியது. பெரிய பெரிய ஹோட்டல்களில் இருந்து கோயில்கள் வரை வழங்கப்படும் உணவின் தரம் சரியாக உள்ளதா எனக் கண்டறிய முடிவதில்லை.

திருப்பதி `லட்டு’
திருப்பதி `லட்டு’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், திருப்பதி திருமலை கோயிலில் மக்களுக்கு வழங்கப்படும் உணவானது இயற்கையான முறையில் இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து 12 வகையான உணவுப் பொருள்களை வாங்க முடிவு செய்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாநில விவசாயிகள் ஆணையம் மற்றும் மார்க்ஃபெட் அதிகாரிகள் திருப்பதி தேவஸ்தானத்தில் கலந்தாய்வு செய்தனர். அந்தக் கலந்தாய்வில், மக்களுக்கு பிரசாதம் செய்து வழங்க பயன்படுத்தப்படும் 12 வகையான உணவுப் பொருள்களை தவணை முறையில் பல முறை வாங்கிக் கொள்வதற்கான ஒப்பந்தமானது, ஆந்திர மாநில உழவர் அமைப்பு மற்றும் மார்க்ஃபெட் நிறுவனத்துடனும் முடிவானது.

நிலக்கடலை
நிலக்கடலை

இந்த ஒப்பந்தம் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவிக்கையில், ``மக்களுக்கு பிரசாதம் செய்து வழங்கப்பயன்படுத்தப்படும் 12 வகையான உணவுப் பொருள்களை எந்த ஒரு இடைத்தரகர்களின் தலையீடும் இல்லாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில், மாநில உழவர் அதிகார அமைப்புடன் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. பிறகு, 500 மெட்ரிக் டன் கடலை முதல் தவணையாக கொள்முதலானது. அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட வில்லை என ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின், இப்போது மூன்றாம் தவணையாக நிலக்கடலை, துவரம் பருப்பு, அரிசி, வெல்லம், உளுந்து, நிலக்கடலை, கொத்தமல்லி, தனியா, புளி, பாசிப்பயறு, மிளகு, மஞ்சள் போன்றவை வாங்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரசாயனமில்லாத பிரசாதங்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.