Published:Updated:

`டெட்ரா பேக்கில் நீரா பானம்; 6 மாதம் வரை கெடாது!' - திருப்பூரில் ஓர் அசத்தல் முயற்சி

நீரா

``சந்தையில் கிடைக்கும் மற்ற நீராவைப்போல இதை விற்பனை செய்யும் வரை ஐஸ் பாக்ஸில் வைத்திருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. சாதாரணமாக வெயில் படாத இடத்தில் வெளியே கூட இருந்தாலும் ஒன்றும் ஆகாது."

`டெட்ரா பேக்கில் நீரா பானம்; 6 மாதம் வரை கெடாது!' - திருப்பூரில் ஓர் அசத்தல் முயற்சி

``சந்தையில் கிடைக்கும் மற்ற நீராவைப்போல இதை விற்பனை செய்யும் வரை ஐஸ் பாக்ஸில் வைத்திருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. சாதாரணமாக வெயில் படாத இடத்தில் வெளியே கூட இருந்தாலும் ஒன்றும் ஆகாது."

Published:Updated:
நீரா

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த `வனம் இந்தியா பவுண்டேஷன்’ இதுவரை 90-க்கும் மேற்பட்ட காடுகளை உருவாக்கியும், 6.5 லட்சம் மரங்களை நட்டும் பராமரித்து வருகிறது. காடுகள் மற்றும் சூழல் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறது. மேலும், 1,200-க்கும் மேற்பட்ட உழவர்களை ஒன்றிணைத்து `உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.

தென்னீரா
தென்னீரா

இந்நிறுவனத்தின் மூலம் நீரா பானத்தை `தென்னீரா’ என்ற பெயரில் `டெட்ரா பேக்'கில் அடைத்து விற்பனையைத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் அறிமுக விழா, பல்லடம் வனாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தென்னீரா பானத்தை வெளியிட, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதைப் பெற்றுக்கொண்டார். முதற்கட்டமாகத் திருப்பூர், கோயம்புத்தூரில் தென்னீரா விற்பனையைத் தொடங்கி, பிறகு தமிழகம் முழுக்கவும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தென்னை மரத்தில் உள்ள பாளையில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஐஸ் பெட்டியை வைத்து நீராவை சேகரிக்கிறார்கள். அதைக் குளிர்பதனக் கிடங்கில் ஒரு குறிப்பிட்ட குளிர் நிலையில் பத்திரப்படுத்தி, கை படாமல் சுத்தமான முறையில் `டெட்ரா பேக்'கில் அடைக்கிறார்கள். இதற்காக இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இறுதியாக CPCRI காசர்கோடு ஆராய்ச்சி நிறுவனம் மூலம் தரம் உறுதி செய்யப்பட்டு, `6 மாதங்கள் வரை இந்தத் தென்னீராவை கெடாமல் வைத்திருக்க முடியும்" எனச் சான்று பெற்றுள்ளனர். இதனால் பல மாதங்கள் தண்ணீர் பாய்ச்சி, நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றி, குறைவான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வதைவிட, தென்னை விவசாயிகளுக்கு மூன்று மடங்கு அதிக வருமானம் கிடைக்கும் என்கிறார்கள்.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்

தென்னீரா மூலம் கிடைக்கும் வருமானத்தால், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ள 1,200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகளும் பெரும் பலனடைவார்கள்.

இதுகுறித்து உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியன் அவர்களிடம் பேசினோம். ``1939-லேயே மகாத்மா காந்தி, `நீரா ஒரு மிகச் சத்துள்ள பானம். இதைச் சாப்பிட்டால் ஏழை எளிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க முடியும்’னு சொல்லியிருக்கார். கமலா சோஹோனி என்ற பெண் விஞ்ஞானி நீரா குறித்து ஆராய்ச்சி செய்து குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியிருக்காங்க. ஆனா, என்ன காரணமோ தெரியல... இந்த இயற்கையான நீரா பானத்தை யாரும் பெருசா கண்டுக்கல. ஆனா, காசர்கோடில் இருக்குற மத்திய விளைபொருள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த நீரா பானம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்துட்டு வந்தாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே நாங்க 2020-ம் ஆண்டு 1,200 உழவர்களை ஒன்றிணைச்சு `உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ தொடங்கினோம். நீராவை சந்தைப்படுத்துவது குறித்து பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்துட்டு வந்தோம். இப்ப, உலகத்திலேயே முதன்முதலா நீரா பானத்தை 6 மாதங்கள் வரை கெடாத அளவுக்கு தயார் செய்து `டெட்ரா பேக்’கிங்கில் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். தென்னை மரத்தில் இருந்து நீராவை 5 டிகிரி வெப்பநிலையில் `ஐஸ்' பெட்டி வெச்சு சேகரிச்சு, அதை `மைனஸ் 20 டிகிரி' அளவுல மத்திய குளிரூட்டும் நிலையத்தில் வைப்போம். பிறகு, `டெட்ரா பேக்கிங்' செய்றோம். இதுக்காகப் பல்லடத்தில 3 கோடி ரூபாய் மதிப்புல ஒரு குளிரூட்டும் நிலையத்தை அமைச்சிருக்கோம்.

ஒரு பாக்டீரியா வளர்வதற்கு காற்றும் வெப்பமும் தேவை. ஆனால், 2 - 3 டிகிரி குளிர்நிலையில், காற்று இல்லாம `டெட்ரா பேக்' மூலம் நாங்க நீராவை 'பேக்கிங்' செய்றதால அது 6 மாசம் வரைக்கும் கெடாம இருக்கும். இதனால நீராவுடைய குணம், மணம், தரம் எதுவுமே மாறாது. சந்தையில கிடைக்குற மற்ற நீராவைப்போல இதை விற்பனை செய்யும் வரை ஐஸ் பெட்டியில வெச்சிருக்கணும்னு அவசியம் இல்ல. சாதாரணமா வெயில் படாத இடத்தில வெளிய இருந்தாலும் ஒண்ணும் ஆகாது. எங்க உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில இருக்க விவசாய பங்குதாரர்களிடம் இருந்துதான் இந்த நீராவை சேகரிக்கிறோம். இதனால அவர்களுக்கு சாதாரணமாகத் தென்னையில் இருந்து கிடைப்பதைவிட 3 மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism