Published:Updated:

6 ஆண்டுகளுக்கு முன் உடைக்கப்பட்ட ஏரிக்கரை; தொடர்ந்து வெளியேறும் தண்ணீர்; வேதனையில் விவசாயிகள்!

தொடர்ந்து வெளியேறும் ஏரி தண்ணீர்
News
தொடர்ந்து வெளியேறும் ஏரி தண்ணீர்

``கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. ஆனால் உடைக்கப்பட்ட பகுதிகள் சரி செய்யப்படாமல் இருப்பதால் ஏரியிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. இப்போதைய நிலையே நீடித்தால் இன்னும் 4 நாட்களுக்குள் இரண்டு ஏரிகளும் வற்றிவிடும்."

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ளது மங்களம் மாமண்டூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து நம்மை தொடர்புகொண்டு பேசிய விவசாயி ஒருவர், ``எங்கள் ஊராட்சியில் மொத்தம் 4 ஏரிகள் இருக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாமண்டூர் ஏரி மட்டும் சேதமடைந்து உடையும் நிலையில் இருந்தது. எனவே, ஏரியின் பாதுகாப்பிற்காக அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து முடிவு செய்து ஏரிக்கோடியின் அருகே கரையை உடைத்து நீரை வெளியேற்றினார்கள். ஆனால், உடைக்கப்பட்ட பகுதி இன்று வரை சரி செய்யப்படாமல் இருக்கிறது. இதேபோல கடந்த வருடம் வறட்சி காலத்தின்போது மங்கலம் ஏரியில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. ஏரியின் அருகாமையிலேயே மல்லாட்டை (மணிலா) போட்டிருந்த விவசாயி ஒருவர், கலிங்கல் அருகே ஏரியை உடைத்து, வாய்கால் அமைத்து, தண்ணீர் எடுத்துச் சென்று விவசாயம் செய்திருந்தார். ஆனால் அறுவடை முடிந்தபின்னர், உடைத்த இடத்தை அந்த நபர் சரிசெய்யவில்லை. மங்கலம் மற்றும் மாமண்டூர் ஏரிகளில் உடைக்கப்பட்ட பகுதிகள் இன்று வரை சரி செய்யப்படாமல் உள்ளது.

உடைக்கப்பட்ட கரை வழியே வெளியேறும் தண்ணீர்.
உடைக்கப்பட்ட கரை வழியே வெளியேறும் தண்ணீர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. ஆனால் உடைக்கப்பட்ட பகுதிகள் சரி செய்யப்படாமல் இருப்பதால் ஏரியிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேறி வருகிறது. இப்போதைய நிலையே நீடித்தால் இன்னும் 4 நாட்களுக்குள் இரண்டு ஏரிகளும் வற்றிவிடும். தண்ணீரை தேக்கவில்லை எனில் கோடைகாலத்தில் விவசாயிகள் கஷ்டப்பட வேண்டியதுதான். இவ்வளவு மழை பெய்தும் பயனில்லாமல் உள்ளது. அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பாக முறையிட்டால் அலட்சியமாக இருக்கிறார்கள். ஏரிகளில் இருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறுவதற்குள் அரசு அதிகாரிகள் உடைக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்து தரணும்" என்றார் ஆதங்கமாக.

இதுதொடர்பாக விளக்கம் கேட்க வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டோம். ``நான், அந்த ஏரிகளை பலமுறை நேரில் சென்று பார்த்துள்ளேன். இரண்டு ஏரிகளும் உடையும் தருவாயில் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவரான மேத்தா ரமேஷ் ஏரி பணியை எடுத்து செய்தார். பாதி வேலைகளை முடித்து விட்டார், மீதி அப்படியே இருக்கிறது.

தொடர்ந்து வெளியேறும் ஏரி தண்ணீர்
தொடர்ந்து வெளியேறும் ஏரி தண்ணீர்

இந்நிலையில், கரையை கட்டினால் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் நிலை உள்ளது. அதனால், கடந்த 3 வருடத்திற்கு முன் எப்படி இருந்ததோ... அப்படியேதான் உள்ளது. நாங்கள் கரையை கட்டவும் இல்லை, உடைக்கவும் இல்லை. மங்களம் ஏரியில் விவசாயி ஒருவர் உடைத்த பகுதியை மணல் மூட்டை கொண்டு அடைக்கும்படி இன்று கூறியுள்ளேன்" என்றார்.