Published:Updated:

கொட்டிக்கிடக்கும் நெல் மூட்டைகள்; நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியல்!

நெல் கொள்முதல் நிலையம்

``2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால், இப்பிரச்னைகளுக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால், திமுக-வுக்கு வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் ஏற்றினார்கள்."

கொட்டிக்கிடக்கும் நெல் மூட்டைகள்; நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியல்!

``2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால், இப்பிரச்னைகளுக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால், திமுக-வுக்கு வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் ஏற்றினார்கள்."

Published:Updated:
நெல் கொள்முதல் நிலையம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், இப்பகுதி விவசாயிகள், தங்களது நெல்லை விற்பனைச் செய்ய முடியாமல் மிகுந்த நெருக்கடியில் தவிக்கிறார்கள். இங்குள்ள கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இந்நிலையில், இப்பகுதி விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல்லை, கொள்முதல் நிலைய வளாகத்தில் குவியல் குவியலாக கொட்டி வைத்து, கொள்முதல் செய்வார்கள் என்று கடந்த நான்கைந்து நாள்களாக காத்திருந்தார்கள்.

இந்நிலையில்தான் உடனடியாக நெல் கொள்முதலை தொடங்க வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகள், இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
சாலை மறியல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த அதிமுக ஆட்சியில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பலவிதமான குளறுபடிகளும் முறைகேடுகளும் நிகழ்ந்ததால், விவசாயிகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தார்கள். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால், இப்பிரச்னைகளுக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு திமுக-வுக்கு வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் ஏற்றினார்கள். ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சிகள் கொஞ்சம்கூட மாறவே இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவடையப் போகிறது. ஆனாலும் கூட கொள்முதல் நிலைய குளறுபடிகளால் விவசாயிகள் திண்டாடி தவிப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே வேலங்குடி ஊராட்சியில் உள்ள தென்கரை ஆலந்தூரில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள். மழை பெய்து வருவதால் தங்களது நெல்லை பாதுக்க கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் உடனடியாக நெல் கொள்முதலை திறக்க வலியுறுத்தி இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி திருமாவளவன், ``இந்த கொள்முதல் நிலையத்துல மட்டுமே 10,000 நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்குது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு உடனடியாக கொண்டு போயிருந்தால், இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. சேமிப்பு கிடங்குல, சாரம் கட்டி, நெல் மூட்டைகளை அடக்கி வைக்க, சவுக்கு கழி இல்லை. மூடி வைக்க படுதா இல்லைனு காரணம் சொல்றாங்க. இதெல்லாம் ஒரு காரணமா? இதையெல்லாம் முன் கூட்டியே தயார் செஞ்சி வைக்க வேண்டியது அதிகாரிகளோட கடமை. சேமிப்புக் கிடங்குகளுக்கு உரிய நேரத்துல, நெல் மூட்டைகளை கொண்டு போகாததுனால கொள்முதல் நிலையங்கள்ல ஏற்கெனவே விவசாயிகள்கிட்ட கொள்முதல் செஞ்ச நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்குது. இதனால் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லை கொள்முதல் செய்ய மறுக்குறாங்க. மழையை காரணம் காட்டி, நாலஞ்சு நாள்களுக்கு முன்னாடி கொள்முதலை நிறுத்தினாங்க. இதனால் வேலங்குடி, தென்கரை, ஆலத்தூர், வடகார்குடி, தலைவாயிருப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களோட நெல்லை இங்கே கொட்டி வச்சி, கொள்முதலுக்கு காத்துக்கிடக்குறாங்க. மழை வரும்போதெல்லாம், மனசு பதறுது.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

ஆன்லைன்ல முன்கூட்டியே பதிவு பண்ணி, கொள்முதலுக்கு தேதி நிர்ணயம் செய்யப்பட்ட விவசாயிகளுக்கே இந்த நிலைமை. விவசாயிகள் காத்துக்கிடக்க வேண்டியதா இருக்கு. இங்க மட்டுமல்ல, திருவாரூர் மாவட்டத்துல் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களை மூடிட்டாங்க. இதனால் விவசாயிகள் கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க’’ என தெரிவித்தார்.

விவசாயிகளின் ஆதங்கம் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜனை தொலைபேசியில் தொடர்புக் கொள்ள முயன்றோம். மறுமுனையில் பேசியவர், ``சார் மீட்டிங்க்ல இருக்கார். மீட்டிங் முடிஞ்சதுமே அவரே உங்களை தொடர்புக் கொள்வார்’’ என தெரிவித்தார். இதுவரையில் நம்மை தொடர்பு கொள்ளவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism