Published:Updated:

மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்: `ஆறுகள் தூர்வாரப்படாததே காரணம்!' - கொந்தளிக்கும் விவசாயிகள்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்ய தயாரான விவசாயிகள் தற்போது பயிர்கள் அனைத்தும் மூழ்கியதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாதிப்புக்கு முக்கிய காரணம், இப்பகுதியிலுள்ள பிரதான வடிகால் ஆறுகள் தூர்வாரப்படாமல் இருப்பதுதான் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்து, அறுவடைக்குத்  தயாரான பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தக்கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில்  சீர்காழி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட தாலுகாவில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டர் நிலத்தில் சம்பா விவசாயம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அதிக கனமழையால் மாவட்டத்தில் செம்பதனிருப்பு, நாங்கூர், காத்திருப்பு, சேமங்கலம், பட்டவர்த்தி, வில்லியநல்லூர், மாமாகுடி, திருக்கடையூர், குத்தாலம் உள்ளிட்ட 30-க்கும்  மேற்பட்ட  ஊராட்சிகளில் சுமார் 10,000 ஏக்கர் சம்பா சாகுபடி விளைநிலங்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் தப்பிய பயிர்கள், தற்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் மழை நீரில்  மூழ்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்ய தயாரான விவசாயிகள் தற்போது பயிர்கள் அனைத்தும் மூழ்கியதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாதிப்புக்கு முக்கிய காரணம், இப்பகுதியிலுள்ள பிரதான வடிகால் ஆறுகள் தூர்வாரப்படாமல் இருப்பதுதான் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செம்பதனிருப்பு, நாங்கூர், சேமங்கலம், காத்திருப்பு ஊராட்சிகளில் விவசாயிகள் அதிகாரிகள் கண்டித்து வயலில் இறங்கி இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தற்போது மூழ்கிய பயிர்கள் அழுகிவிட்டதால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.