வரும் 2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்கான அறிக்கையானது கூடிய விரைவில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்பு, விவசாயிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே, வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க உள்ளதாக தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பது போன்ற கருத்துக்களை பொதுமக்கள் அரசுக்கு தெரிவிக்கலாம்.
உங்கள் கருத்துக்களை, `வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர், வேளாண்மை உழவர் நலத்துறை, தலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை 600 009' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் agrisec@tn.gov.in அல்லது agrips@tn.gov.in என்ற மெயில் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் 93848 76300 என்ற தொலைபேசி எண்ணிலும் , ட்விட்டர் மூலம் தெரிவிப்பதற்கு @agridept_tn, மற்றும் `உழவன் ஆப்'-ல் `பட்ஜெட் கருத்துக்கள்' என்ற சேவையிலும் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.