Published:Updated:

மானிய விலையில் வீட்டுத்தோட்ட தொகுப்பு; மக்களை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை புது முயற்சி!

மாடித்தோட்டம்
News
மாடித்தோட்டம்

கொரோனாவுக்குப் பிறகு, மக்கள் தங்கள் நலத்தின் மீது அதிக அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், உரமில்லா இயற்கை காய்கறிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், விலைவாசி குறித்த பிரச்னைகளிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தோட்டம் அமைப்பது வெகுவாக அதிகரித்துள்ளது.

செடி வளர்ப்பு, தோட்ட பராமரிப்பு குறித்த ஆர்வம் மக்களிடத்தில் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே காய்கறிகளையும் மூலிகைத் தாவரங்களையும் உற்பத்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை புதிதாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மானிய விலையிலேயே விதை, செடிகள் தொகுப்புகளை இணையதளம் வழியாகப் பெற புதிய முயற்சியை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் https://tn.horticulture.tn.gov.in/kit / என்ற பக்கத்தில் தங்கள் புகைப்படத்தையும், ஆதார் புகைப்படத்தையும், தேவையான காய்கறி தொகுப்புகளையும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தோட்டக்கலைத்துறை சார்பில் விற்பனையகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதுமட்டுமன்றி விற்பனையகங்களை தேடி வரும் மக்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் அதைப் பராமரித்தல் குறித்த விளக்கமும் அளிக்கப்படுகிறது.

கொரோனாவுக்குப் பிறகு, மக்கள் தங்கள் நலத்தின் மீது அதிக அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில் மக்களிடையே உரமில்லா இயற்கை காய்கறிகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், விலைவாசி குறித்த பிரச்னைகளிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இருப்பிடங்களிலேயே தோட்டம் அமைப்பது வெகுவாக அதிகரித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்னையில் மழைக்காரணமாக மக்கள் இப்பிரச்னைகளை அதிகமாகச் சந்தித்து வரும் நிலையில் இதற்காக சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை பூங்காவின் செடிகள் விற்பனை மையமும் தோட்டக்கலைக் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில், பல செடிகள், வீட்டில் வளர்க்கப்படும் அலங்கார அழகு செடிகள், மூலிகைச் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டம் சென்னை வாசிகளுக்கு மட்டுமன்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பலருக்கும் உள்ளது எனத் தோட்டகலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் கடந்த, 2020 - 21-ம் ஆண்டில், கிட்டத்தட்ட 10,000 மாடித்தோட்ட தொகுப்பு விற்பனையானது என்றும், இந்த ஆண்டு மழை வெள்ளம் காரணமாக விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பால், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளனர். இலக்கு படி 2021 - 22-ம் ஆண்டு, 35,000 தொகுப்புகளை விற்பனை செய்ய தோட்டக்கலை அரசு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கான விற்பனையும் நடைப்பெற்று வருகிறது.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

விண்ணப்பிக்கப்படும் பட்டியலில் மக்களின் விருப்பத்துக்கேற்ப மூன்று வகையான பிரிவுகளின் கீழ் தாவரங்களும் செடிகளும் விநியோகிப்படுகின்றன.

மாடித்தோட்ட காய்கறித் தொகுப்பில், 6 வகையான காய்கறி விதைகள், 6 செடி வளர்க்கும் பைகள், 2 கிலோ தென்னை நார் கழிவுக் கட்டிகள் , அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா போன்ற 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகளான ட்ரைகோடெர்மா விரிடி 100 மி.லி இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தான வேப்ப எண்ணெய் மற்றும் மாடித்தோட்ட காய்கறி வளர்ப்புக்கான கையேட்டில் கத்திரி, வெண்டை, தக்காளி, கீரைகள், செடி அவரை, மிளகாய், கொத்தவரை, முருங்கை, சின்ன வெங்காயம், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கன், சாம்பல் பூசணி, பரங்கிக்காய் போன்றவற்றில் ஏதேனும் ஆறு வகையான விதைகள் வழங்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவதாக வழங்கப்படும் ஊட்டச்சத்து மூலிகைத் தொகுப்பில் பப்பாளிக் கன்று, எலுமிச்சைச் செடி, முருங்கைக் கன்று, கறிவேப்பிலைச் செடி, திப்பிலிச் செடி, கற்பூரவல்லிச் செடி, புதினா செடி, சோற்றுக் கற்றாழைச் செடி போன்றவையும், மூன்றாவதாக வழங்கப்படும் காய்கறி விதை தளை திட்டத்தில்

கத்தரி, வெண்டை, தக்காளி, கீரைகள், செடி அவரை, மிளகாய், கொத்தவரை, முருங்கை, சின்னவெங்காயம், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கன், சாம்பல் பூசணி, பரங்கிக்காய் போன்றவற்றில் ஏதேனும் 12 வகையான விதைகளைப் பெறலாம்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

இந்த மாடித்தோட்ட தொகுப்பின் விலையானது 900 ரூபாய். ஆனால், மக்களுக்குப் பயன்படும் வகையில், மானிய விலையில் 225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீதம் 675 ரூபாயை அரசு மானியமாக வழங்கிவிடும். அதேபோல் காய்கறி விதைத் தொகுப்பின் விலையானது 60 ரூபாய். அந்தத் தொகுப்பானது பயனாளிக்கு 15 ரூபாயிலேயே கிடைக்கும். மீதமுள்ள 45 ரூபாய் அரசு மானிய விலையில் சேரும். இதிலும் ஒரு பயனாளி இரண்டு தொகுப்புகள் வரை பெறலாம். மூலிகைத் தொகுப்பின் விலையானது 100 ரூபாய். இந்தத் தொகுப்பு மக்களுக்கு 25 ரூபாய்க்குக் கிடைக்கும்; இதில் அரசு மானியம், 75 ரூபாய். ஒரு பயனாளி இதில் ஒரு தொகுப்பைப் பெறலாம்.