"அதிக நுகர்வு காரணமாக, உலகெங் கிலும் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளது. இந்தியா விலிருந்து பருத்தி ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும்’’ எனத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சந்தை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ‘‘இந்தியாவில் பருத்தி ஏற்றுமதியானது 54 லட்சம் பொதிகளாக இருக்கும் என்றும் இது முந்தைய ஆண்டை விட 8 சதவிகிதம் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்பாலைகள் மற்றும் வர்த்தகர்களிடம் ஜனவரி 31, 2021 வரையுள்ள மொத்த இருப்பு 247.25 லட்சம் பொதிகள் என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பங்களாதேஷ், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிக நுகர்வு காரணமாக, உலகெங்கிலும் பருத்தியின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்தும் இறக்குமதி குறைந்தும் காணப்படுவதால் ஜனவரியிலிருந்து பருத்தி விலை ஏறுமுகமாக உள்ளது. பருத்தி பயிரிடும் முக்கிய மாநிலங்களில் உற்பத்தி மதிப்பீடுகள் மாறாமல் இருந்தாலும், எதிர்பாராத மழையால் பருத்தியின் தரம் குறைந்துள்ளது. இதுவே சமீபத்திய விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

தமிழ்நாட்டில் பருத்தி மாசிப்பட்டம், ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகைப் பட்டம் ஆகிய மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது. தற்போது ஆடிப்பட்ட வரத்து குறைந்து மாசிப்பட்ட விதைப்பு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு பருத்தியின் முக்கிய நுகர்வோராகத் திகழ்கிறது. 2019-20-ம் ஆண்டில் 1.17 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டு 5 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் முக்கிய ரகங்கள் ஆர்.சி.ஹெச், பி.டி பருத்தி, சுரபி மற்றும் டி.சி.ஹெச் ஆகியவை ஆகும். பருத்தி ஆலையா ளர்கள் தங்களது தேவைக்கேற்ப குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா விலிருந்து கொள்முதல் செய்கின்றனர்.

வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், கடந்த 15 ஆண்டுகளாக கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வின்படி தற்போதைய சந்தை நிலவரம் தொடர்ந்தால் நல்ல தரமான பருத்தி விலை மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு ரூ.6,500 முதல் ரூ.6,900 வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரங்கள் தொடர்ந்தால் விலை உயர்வுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், விவசாயிகள் ஜூன் மாதத்தில் பருத்தியை சேமித்து விற்பனை செய்யலாம். மாசிப் பட்டத்தில் சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்னறிவிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் விதைப்பு முடிவை எடுக்கலாம்’’ என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.