Election bannerElection banner
Published:Updated:

புதிய பயிர் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை... விருது பெற்ற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சிவகுமார் மற்றும் முரளி அர்த்தனாரி அவர்களுக்கு தமிழ்நாடு முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர்கள் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அறிவியல் நகரத் துணை தலைவர் ராஜேஷ் லக்கானி ஐ ஏ.எஸ் வழங்கினார்.

தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அறிவியல் நகரத்தால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் சிவகுமார் மற்றும் முரளி அர்த்தனாரி அவர்களுக்கு தமிழ்நாடு முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர்கள் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை அறிவியல் நகரத் துணைத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஐ ஏ.எஸ் வழங்கினார்.

சிவகுமார்
சிவகுமார்

பயிர் மற்றும் நுண்ணுயிர்களுக்கு இடையேயான தொடர்பு பற்றிய தொழிற்நுட்பத்துக்கு காப்புரிமை பெற்றதற்காகவும் 105-கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்ததற்காக பேராசிரியர் சிவகுமாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இவர் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகம், ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பகுதி நேர கௌரவ இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

மேலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டத்துக்காக ரூ.906 இலட்சத்தை பல்வேறு வேளாண் ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளார்.

முரளி அர்த்தனாரி
முரளி அர்த்தனாரி
வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!

விருது பெற்ற மற்றொரு பேராசிரியரான முரளி அர்த்தனாரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதின் மக்கள் தொடர்பு அலுவலகராக உள்ளார். இவர் பயிர்களில் களை வேளாண்மை தொழில்நுட்பங்களை சிறந்த வகையில் உருவாக்கியுள்ளார். மேலும் 55-கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் நெல், மக்காச்சோளம், சூரிய காந்தி மற்றும் பருத்தியில் ஒருங்கிணைந்த களை வேளாண்மை தொழில்நட்பங்களை உருவாக்கியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு