Published:Updated:

விலை முன்னறிவிப்பு : தக்காளி ரூ.18, கத்திரி ரூ. 23 , வெண்டை ரூ. 17...

வெண்டைக்காய்
பிரீமியம் ஸ்டோரி
News
வெண்டைக்காய்

தமிழ்நாட்டில் தக்காளியின் வரத்து ஜூன்-ஜூலை (சித்திரைப் பட்டம் விதைப்பு) மற்றும் அக்டோபர்-நவம்பர் (ஆடிப்பட்டம் விதைப்பு) ஆகிய காலங்களில் வருகிறது.

காய்கறிக்கான விலை முன்னறிவிப்பு வர்த்தக மூலங்களின்படி, இந்த ஆண்டுக் காய்கறி வரத்து அதிகமாக உள்ளது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவை விடுத்துள்ள அறிக்கையில் உணவு விடுதிகள், திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் கொரோனா காரணமாகக் குறைந்து காணப்படுகிறது. தற்போது கோயம்புத்தூர் மொத்த விலை சந்தைக்கு 60 சதவிகிதக் காய்கறிகள் (தக்காளி மற்றும் வெண்டை) கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வருகின்றன. கேரளாவுக்குக் காய்கறிகள் அனுமதிக்கப்பட்டதால் தினமும் சந்தை வரவில் சுமார் 30 சதவிகிதம் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

தமிழ்நாட்டில் தக்காளியின் வரத்து ஜூன்-ஜூலை (சித்திரைப் பட்டம் விதைப்பு) மற்றும் அக்டோபர்-நவம்பர் (ஆடிப்பட்டம் விதைப்பு) ஆகிய காலங்களில் வருகிறது.

தற்போது கோயம்புத்தூர் மொத்த விலை சந்தைக்குத் தக்காளியின் வரத்தானது அதன் சுற்று வட்டார பகுதிகளான செம்மேடு, கிணத்துகடவு, ஆலந்துறை, நாச்சிப்பாளையம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்றன. மானாவாரி அமைப்பில் ஆடிப்பட்டம் கத்திரிப் பயிரின் முக்கியமான பருவமாகும். இக்காலத்தில் தென்மேற்குப் பருவமழை கத்திரி உற்பத்தியை நிர்ணயிக்கிறது. சேலம், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகியவை கத்திரிக்காய் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். வர்த்தக மூலங்களின்படி தற்போதைய வரத்துக் கோயம்புத்தூர், தேனி மற்றும் கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்திலிருந்து வருகிறது.

தக்காளி
தக்காளி

தமிழ்நாட்டில் வெண்டைக்காய் பிப்ரவரி (தைப்பட்டம்) மற்றும் ஜூன் முதல் ஆகஸ்ட் (ஆடிப்பட்டம்) ஆகிய பருவங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், மகுடஞ்சாவடி வட்டாரங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்கள், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டி வட்டாரம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. வர்த்தக மூலங்களின்படி, வெண்டையின் பெரும்பான்மையான வரத்தானது ஓசூர், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் மற்றும் உடுமைலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கோயம்புத்தூர் சந்தைக்கு வருகிறது.

வெண்டைக்காய்
வெண்டைக்காய்

இச்சூழலில், விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஒட்டன்சத்திரம், கோவை மற்றும் திருச்சி சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறுவடையின்போது (ஆகஸ்ட் - செப்டம்பர்) தரமான தக்காளியின் பண்ணை விலை 16 ரூபாய் முதல் 18 ரூபாய் ஆகவும், நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 23 ரூபாய் ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் பண்ணை விலை 15 ரூபாய் முதல் 17 ரூபாய் ஆகவும் இருக்கும். இவ்விலையானது, தென்மேற்குப் பருவமழை பொழிவு பொறுத்து மாறுபடும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்

மேலும் விவரங்களுக்கு:

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத்

தகவல் மையம்,

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்-641003. தொலைபேசி 0422 2431405.

தொழில்நுட்ப விவரங்களுக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர் காய்கறிப் பயிர்கள் துறை,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்-641003.

தொலைபேசி: 0422 6611374.