Published:Updated:

``கிலோ 1 ரூபாய்க்குகூட வாங்க யாரும் முன்வரலை!" - 11 டன் தக்காளியுடன் தவிக்கும் விவசாயி

தக்காளியை தரம் பிரிக்கும் விவசாயி ராமர்

``ஏற்றுமதிக்கு உகந்த பெங்களூர் தக்காளியை முதன் முறையா இயற்கையான முறையில் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு சாகுபடி செஞ்சேன். கூலி ஆட்கள வெச்சு பறிச்சு, ரகம் பிரிக்கப்பட்ட 4 டன் தக்காளி விற்பனைக்கு தயாராய் இருக்குது."

``கிலோ 1 ரூபாய்க்குகூட வாங்க யாரும் முன்வரலை!" - 11 டன் தக்காளியுடன் தவிக்கும் விவசாயி

``ஏற்றுமதிக்கு உகந்த பெங்களூர் தக்காளியை முதன் முறையா இயற்கையான முறையில் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு சாகுபடி செஞ்சேன். கூலி ஆட்கள வெச்சு பறிச்சு, ரகம் பிரிக்கப்பட்ட 4 டன் தக்காளி விற்பனைக்கு தயாராய் இருக்குது."

Published:Updated:
தக்காளியை தரம் பிரிக்கும் விவசாயி ராமர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர், தனது வயலில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் முதன் முறையாக முற்றிலும் இயற்கையான முறையில் பெங்களூர் தக்காளியை சொட்டுநீர் பாசனம் மூலமாக சாகுபடி செய்துள்ளார். எதிர்பார்த்த அளவு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. ஆனால், அதனை கிலோ 1 ரூபாய்க்குக்கூட வாங்க யாரும் முன்வராததால், கடுமையான அதிருப்திக்கு உள்ளாகினார் ராமர். இதுகுறித்து தன் கவலையை கண்ணீர் மல்க ஆடியோ பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவித்து வைக்கப்பட்டுள்ள தக்காளிகள்
குவித்து வைக்கப்பட்டுள்ள தக்காளிகள்

இதுகுறித்து விவசாயி ராமர் நம்மிடம் பேசும்போது, ``ஏற்றுமதிக்கு உகந்த பெங்களூர் தக்காளியை முதன் முறையா இயற்கையான முறையில் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சு சாகுபடி செஞ்சேன். கூலி ஆட்கள வெச்சு பறிச்சு, ரகம் பிரிக்கப்பட்ட 4 டன் தக்காளி விற்பனைக்கு தயாராய் இருக்குது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனா, இந்த தக்காளியை மொத்த சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என யாருமே வாங்குவதற்கு முன்வரலை. கிலோ 1 ரூபாய்க்காவது வாங்கிக்கொள்ளுங்கள் எனக் கூறியும், யாரும் தக்காளியை வாங்க தயாராக இல்லை.

தக்காளியை தரம் பிரிக்கும் விவசாயி ராமர்
தக்காளியை தரம் பிரிக்கும் விவசாயி ராமர்

இதனால பறிச்சு வெச்சிருக்கிற 5 டன் தக்காளி அழுகும் நிலையில இருக்குது. மேலும் 6 டன் தக்காளி பறிக்காமல் செடியிலேயே வீணாகி வருது" என்று வேதனையுடன் தெரிவித்த ராமர், ``இந்த நெருக்கடியான சூழலிலிருந்து தக்காளி விவசாயிகளை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும். தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தக்காளி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள்" என கோரிக்கை வைத்தார்.