Published:Updated:

மொட்டை மாடியில் நெல் சாகுபடி! பாரம்பர்ய ரகங்களை பயிரிடும் பட்டதாரி இளைஞர்..!

மாடியில் மோகன்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மாடியில் மோகன்ராஜ்

முயற்சி

மொட்டை மாடியில் நெல் சாகுபடி! பாரம்பர்ய ரகங்களை பயிரிடும் பட்டதாரி இளைஞர்..!

முயற்சி

Published:Updated:
மாடியில் மோகன்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மாடியில் மோகன்ராஜ்

டித்த இளைஞர்கள் பலரும் விவசாயம் பக்கம் கவனத்தை திருப்பி வருகிறார்கள். அந்த வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான மோகன் ராஜ், தன் வீட்டு மாடியில் ஒற்றை நெல் சாகுபடி முறையில் நான்கு பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

புதுச்சேரி, மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மோகன்ராஜ். தனியார் நிறுவன வேலை பிடிக்காமல் விவசாயம் செய்ய வந்தவர். 800 சதுர அடி கொண்ட தன் வீட்டு மாடியில் ஒரு பைக்கு ஒரு நெல் என்ற விகிதத்தில் கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், சீரகச் சம்பா உள்ளிட்ட நான்கு நெல் ரகங்களைச் சாகுபடி செய்து அசத்தியிருக்கிறார்.

ஒரு காலை வேளையில் மோகன்ராஜைச் சந்தித்தோம். தன்னைப் பற்றியும், தன்னுடைய விவசாய முறைகள் பற்றியும் ஆர்வமாகப் பேசினார்.

மாடியில் மோகன்ராஜ்
மாடியில் மோகன்ராஜ்

‘‘தாத்தா, அப்பா எல்லோருக்குமே விவசாயம்தான் தொழில். சின்ன வயசுல இருந்தே அப்பா கூட நிலத்துக்குப் போவேன். விவசாய வேலையில் அவருக்கு ஒத்தாசையா இருப்பேன். நான் பத்தாவது படிச்சுக்கிட்டிருக்கும்போது அப்பா இறந்துட்டாரு. அதுக்கப்புறம் நிலத்துக்கு வர்ற வேலையாளுங்க கூட சேர்ந்து வேலை பார்ப்பேன். பி.டெக் படிச்சு முடிச்சதும் சென்னையில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். அங்க வேலை நேரம் அதிகமாவும், சம்பளம் குறைவாகவும் இருந்தது. அதனால ஊருக்குப் போயி விவசாயத்தைப் பார்க்கலாம்னு முடிவு பண்ணேன். அப்போ இயற்கை விவசாயம் அப்படிங்கற பேரு மட்டும்தான் தெரியுமே தவிர, வேற எதுவும் தெரியாது. இணையத்துல விவசாயம் சம்பந்தமா தேடிப் பார்த்தப்போ கறுப்பரிசி, சிவப்பரிசி அப்படின்னு நிறைய இருந்தது. நாம் வெள்ளை அரிசியைத்தானே சாப்பிடுறோம். இதென்ன புதுசா கறுப்பரிசி, சிவப்பரிசின்னு தேடி படிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் இயற்கை விவசாயம் பற்றிக் கொஞ்சமா புரிஞ்சுக்கிட்டேன்.

தண்ணீர் பாசனம்
தண்ணீர் பாசனம்

அப்பாவோட நண்பர்கள், என்னோட நண்பர்கள்கிட்ட அதுபற்றிப் பேசினேன். இயற்கை விவசாயம் பற்றி அவங்க சொன்ன விஷயம் எல்லாம் பிரமிப்பா இருந்துச்சு. அதேசமயம் இயற்கையைவிட்டு நாம எவ்வளவோ தூரம் விலகி வந்துட்டோம்னு புரிஞ்சது. அதனால இனி விவசாயம்தான் பண்ணணும்... அதிலும் இயற்கை விவசாயம் தான் பண்ணணும்னு முடிவு பண்ணேன்’’ என்றவர், தன் விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர்ல நண்பரோட அப்பா முருகன் என்கிறவரு இயற்கை விவசாயம் பண்றாரு. அவரைப் பார்க்கப் போனேன். அவர் 20 வருஷமா ‘விதைப்போம்... அறுப்போம்’ முறையில இயற்கை விவசாயம் பண்ணிக்கிட்டிருக்காரு. ஒற்றை நாற்று முறையில 50 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி பண்ணிக்கிட்டிருக் காரு. அதுமட்டுமல்லாம அவர்கிட்ட நான் இயற்கை விவசாயம் பண்ணப் போறேன்னு சொன்னதும் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாரு.

மாடியில் மோகன்ராஜ்
மாடியில் மோகன்ராஜ்

கால் கிலோ விதைநெல் இருந்தாலே போதும் ஒரு ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்ணலாம்னு அவர் சொன்னதை என்னால நம்பவே முடியல. அதுக்கப்புறம் நாத்து விடுறது, நாத்து நடுறதுன்னு எல்லா நுணுக்கத் தையும் அவர் கூடவே இருந்து தெரிஞ்சு கிட்டேன். நிலத்துல வேலையும் கத்துக் கிட்டேன். வீட்டுக்கு வந்து ஒற்றை நெல், ஒற்றை நாற்று விவசாயம் பத்தி அம்மா கிட்டயும், சொந்தக்காரங்ககிட்டயும் சொல்லி, நாமளும் அப்படிப் பண்ணலாம்னு கேட்டேன். ஆனால், அவங்க யாரும் அதை நம்பவும் இல்ல. ஒப்புக்கவும் இல்ல. அதேபோல வெறும் ஒரு நெல்லை வெச்சு எப்படி விவசாயம் பண்ண முடியும்னு கேலி பண்ணாங்க.

‘‘ஒரு பங்கு மண்ணையும், ஒரு பங்கு மட்கிய மாட்டு எருவையும் போட்டு, ஒரு பையில ஒரு நெல் வச்சேன். நான் பயன்படுத்துன பைக்கு (Gro Bag) வெறும் 300 ரூபாய்தான் செலவாச்சு.’’

ஆனா, என்னோட நம்பிக்கையில் நான் உறுதியா இருந்தேன். முருகன் ஐயாவை பார்த்துட்டு வரும்போது எனக்கு கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா பாரம்பர்ய விதைநெல் கொடுத்தாங்க. அதேபோல ‘உழுது உன் மரபு விதைகள் சேகரிப்புக் குழு’ நண்பர் சுந்தர், வாசனை சீரகச் சம்பா, காட்டுயானம் ரெண்டு நெல் ரகங்களைக் கொடுத்தார். இதை எங்க நிலத்துல சாகுபடி செய்யலாம்னு நான் கேட்டப்போ அம்மா ஒப்புக்கல. அதனால அந்த விதைகளை வீணாக்காம பயிர் பண்ணி, அடுத்தப் போகத் துக்காவது எடுத்து வைக்கணும்னு முடிவு பண்ணேன். ஆனா, அதை எங்கே பயிர் செய்றதுனு குழப்பமா இருந்துச்சு. அப்போதான் யூடியூப்ல ஒருத்தர் மொட்டை மாடியில விவசாயம் பண்ணலாம்னு சொன்னதைப் பார்த்தேன். அதன்படி முருகன் ஐயாகிட்ட கத்துக்கிட்ட ஒற்றை நாற்று முறையை நம் வீட்டு மாடியில செஞ்சு, சொந்தக் காரங்ககிட்ட காட்டலாம்னு நினைச்சேன். முதல்ல 30 பைகள்ல ஒரு பங்கு மண்ணையும், ஒரு பங்கு மட்கிய மாட்டு எருவையும் போட்டு, ஒரு பையில ஒரு நெல் வச்சேன். நான் பயன் படுத்துன பைக்கு (Gro Bag) வெறும் 300 ரூபாய்தான் செலவாச்சு’’ என்றவர் மொட்டை மாடிக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கு நெல் வயல் போலக் காட்சி தந்தது மாடி.

மாடியில் மோகன்ராஜ்
மாடியில் மோகன்ராஜ்

‘‘பொதுவா நாற்று நடும்போது, பத்து பதினைந்து நாற்றை எடுத்து அப்படியே கணுவோடு உள்ள வெச்சிடுவாங்க. அப்படிப் பண்ணா வெச்ச நாற்று மட்டும்தான் வெளியே வரும். ஆனால் இந்த ஒற்றை நாற்று முறை அப்படிக் கிடையாது. நாற்றின் வேர் மட்டும்தான் உள்ளே போகணும். அதோட கணு பகுதி மேலதான் இருக்கணும். அப்போதான் பக்கக் கிளைகள் நிறைய வரும். இந்த முறையிலதான் நான் சாகுபடி பண்ணேன். முப்பதே நாள்ல நல்ல வளர்ச்சி இருந்துச்சு. அதுக்கப்புறம் 50 பைகள் போட்டேன். அதுவும் நல்லா வளர்ந்து இருந்துச்சு. தண்ணி பாய்ச்சுறதை பொறுத்தளவு காய்ச்சலும் பாய்ச்சலுமா இருந்தா போதும். பூ வாளியிலதான் பாசனம் செய்யுறேன். தண்ணி அதிகமா இருந்தா, மழைநீர்க் குழாய் வழியே வெளியேறிடும். முருகன் ஐயா, பஞ்சகவ்யா, மீன் அமிலம் எல்லாமே கொடுத்தாங்க. ஆனா, நான் எந்த இடுபொருளையும் பைகள்ல போடவே இல்ல. ஒரு பையில் ஒரு நெல்தான் போட்டேன். ஆனா, இப்ப ஒரு பையில 20 கதிர்கள் வந்திருக்கு. ஒரு நெல்லை எடுத்து எடை போட்டுப் பார்த்தப்போ 5 கிராம் இருந்துச்சு. ஒரு பையில் பத்து கதிர் இருந்தாலும் 50 கிராம் இருக்கும். நான் வைச்சிருக்க 80 பைகள்ல இருந்து 2 கிலோ விதைநெல் கிடைச்சாலும், அதன்மூலம் 8 ஏக்கர்ல பயிர் வைக்க முடியும். ஒற்றை நாற்று முறைக்கு, ஒரு ஏக்கருக்கு கால் கிலோ விதைநெல் இருந்தாலே போதுமானது.

என்னோட சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாரும் இந்தச் சாகுபடியைப் பார்த்துட்டு, அவங்களும் ஒற்றை நாற்று முறையைக் கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ, 30 கிலோ விதைநெல் வாங்கி ரசாயன உரங்களைப் போட்டுச் செய்யுற விவசாயத்தை விட்டுவிட்டு, இந்த ஒற்றை நாற்று முறையில் விதைப்போம் அறுப்போம் முறையில் இயற்கை விவசாயம் பண்ணனும்ங் கிறதுதான் என்னோட ஆசை” என்றார் நம்பிக்கையுடன்.


தொடர்புக்கு, மோகன்ராஜ்,
செல்போன்: 70940 04645.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism