Published:Updated:

விருது வாங்கிக் கொடுத்த பாரம்பர்ய நெல் சாகுபடி!

உழவுப் பணியில் ரகுபதி
பிரீமியம் ஸ்டோரி
உழவுப் பணியில் ரகுபதி

மகசூல்

விருது வாங்கிக் கொடுத்த பாரம்பர்ய நெல் சாகுபடி!

மகசூல்

Published:Updated:
உழவுப் பணியில் ரகுபதி
பிரீமியம் ஸ்டோரி
உழவுப் பணியில் ரகுபதி

யற்கை விவசாயம் மீதான ஆர்வம், அதைப் பற்றிய விழிப்புணர்வு பல விவசாயிகளிடம் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் செயல்படுத்தத் தயங்குகிறார்கள். அந்தத் தயக்கத்தை உடைத்தெறிந்து இறங்குபவர்களே வெற்றி பெறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வரிசையில், இயற்கை விவசாயத்தில் துணிந்து இறங்கி, நெல் சாகுபடி செய்துவருகிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி.

தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், சிறுநகர் கிராமத்திலுள்ள ரகுபதியை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். பருவமழையின் உபயத்தால் நிலத்தில் தண்ணீரைத் தேக்கி, உழவுப் பணியிலிருந்த ரகுபதி உற்சாகமாகப் பேசினார். ``எனக்குச் சிறுநகர்தான் சொந்த ஊரு. விவசாயம்தான் தொழில். சொந்தமாக நாலு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 1.25 ஏக்கர்ல மீன் குட்டைகள், கிணறு, தென்னை, தேக்கு, குமிழ் மரங்கள் இருக்கு. மீதியிருக்கும் நிலத்தில நெல் விவசாயம் செய்யறேன். இதோடு ஒரு ஏக்கர் கோயில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயம் செய்யறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருதுக்கான சான்றிதழ்
விருதுக்கான சான்றிதழ்

கடந்த ஏழு வருஷமா பசுமை விகடனைப் படிச்சிட்டு வர்றேன். அது மூலமா இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் அதிகமாகி, அது தொடர்பான பயிற்சி வகுப்புகள்லயும் கலந்துக்குவேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால நெல் ஜெயராமன் நடத்தின நெல் திருவிழாவுல கலந்துகிட்டேன். அப்போதான் பாரம்பர்ய நெல் ரகங்கள் மேல ஆர்வம் வந்தது. இயற்கை விவசாயத்தோடு பாரம்பர்ய நெல் சாகுபடியையும் நாலு வருஷத்துக்கு முன்னால தொடங்கினேன்” என்று இயற்கை விவசாயத்துக்குத் தான் வந்த கதையைச் சொன்னவர் தொடர்ந்தார்.

மண்புழு உரம் தயாரிப்பு
மண்புழு உரம் தயாரிப்பு

“நெல் திருவிழாவுல ரெண்டு கிலோ ஆத்தூர் கிச்சிலிச் சம்பா விதையை வாங்கிட்டு வந்து மூணு வருஷத்துக்கு முன்னாடி பயிரிட்டேன். முதல் வருஷத்துல ஏக்கருக்கு பத்து மூட்டை நெல்தான் கிடைச்சது. இதை நெல்லாக வித்திருந்தா ஏக்கருக்கு 10,000 ரூபாய்தான் கிடைச்சிருக்கும். அதனால மதிப்புக்கூட்டி வித்தேன். அது மூலமா 24,000 ரூபாய் கிடைச்சது. ரெண்டாவது வருஷம் 12 மூட்டை நெல் கிடைச்சது. அதுக்கும் பெரிய செலவு இல்லை. மூணாவது வருஷம் ஜீவாமிர்தக் கரைசலைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். அதனால 15 மூட்டை நெல் கிடைச்சது. இப்படி ஒவ்வொரு வருஷமும் மகசூல் அதிகரிச்சதோடு, மண்ணோட வளமும் கூடிக்கிட்டே போகுது. இந்த வருஷமும் தழைச்சத்துக்காகப் பசுந்தாள் உரமாக ஏக்கருக்கு அஞ்சு கிலோ அவுரி விதைகளை விதைச்சிருக்கோம். அவுரி செழிப்பா, அடர்த்தியா விளைஞ்சிருக்கு. அதனால இந்த முறை இருபது மூட்டை நெல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உழவுப் பணியில் ரகுபதி
உழவுப் பணியில் ரகுபதி

பாரம்பர்ய ரக நெல்லுக்குப் பூச்சி மருந்து, ரசாயன உரம், பராமரிப்புச் செலவு எதுவும் தேவைப்படுறதில்லை. மத்த ரகங்களைவிட ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவுக்கு நல்ல டிமாண்டு இருக்கு. சில பேரு வீட்டைத் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. எனக்கு இந்த வருஷம் மாவட்ட அளவில் சிறந்த நெல் விவசாயிக்கான விருதும் சான்றிதழும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வழங்கியிருக்கு” என்று பூரிப்படைந்தவர் நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

சிப்பம் 1,600 ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன். அது மூலமா 38,400 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஒவ்வொரு வருஷமும் மகசூல் அதிகரிச்சதோடு, மண்ணோட வளமும் கூடிக்கிட்டே போகுது. மாவட்ட அளவில் சிறந்த நெல் விவசாயிக்கான விருதும் சான்றிதழும் வாங்கியிருக்கேன்.

“நெல்லை அப்படியே விக்கிறதைவிட மதிப்புக்கூட்டி விற்றால்தான் அதிக லாபம் கிடைக்கும்கிறதை அனுபவத்துல உணர்ந்திருக்கேன். கடந்த போகத்துல ஏக்கருக்கு 15 மூட்டை நெல் கிடைச்சது. அதை அரிசியாக்கினபோது 600 கிலோ அரிசி கிடைச்சது. அதை 25 கிலோ அரிசி சிப்பமாக்கியதுல 24 சிப்பம் (25 கிலோ) கிடைச்சது. இதைச் சந்தையில 1,800 ரூபாய்க்கு விக்கிறாங்க. நான் 1,600 ரூபாய்க்கு விற்பனை செஞ்சேன். அது மூலமா 38,400 ரூபாய் கிடைச்சது. இதுல 18,050 ரூபாய் செலவு போக 20,350 ரூபாய் லாபம் கிடைச்சது. இந்த லாபம் குறைவுன்னாலும், அடுத்தடுத்த போகங்கள்ல மகசூல் கூடும். பாரம்பர்ய ரகங்கள்ல ஏக்கருக்கு 50,000 ரூபாய் லாபம் சம்பாதிக்கணும்கிற நோக்கத்தோடு உழைச்சிட்டு இருக்கேன்” நம்பிக்கையோடு சொல்கிறார் ரகுபதி.

தொடர்புக்கு, ரகுபதி, செல்போன்: 95433 80998.

விருது வாங்கிக் கொடுத்த  பாரம்பர்ய நெல் சாகுபடி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல் சாகுபடி முறைகள்!

நெல் சாகுபடி குறித்து ரகுபதி சொன்ன தகவல்கள் பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

நாற்றங்கால்

விதைப்புக்கு முன் முட்டைக் கரைசலில் நெல் விதைகளைக் கொட்டி விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன்பு ஊறவைத்த நெல்லில் சூடோமொனஸ், அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும். விதைப்புக்குப் பிறகு மூன்று நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர்விட்டால் போதுமானது. ஒரு ஏக்கருக்கு 8-10 கிலோ விதை தேவைப்படும்.

விருது வாங்கிக் கொடுத்த  பாரம்பர்ய நெல் சாகுபடி!

நடவு முறை

நாற்று வளர்ந்த பிறகு 20-25 நாளில் நடவு செய்துவிட வேண்டும். நாற்றுப் பறிக்கும்போது வேகமாகப் பிடுங்கக் கூடாது. இதனால் வேர்ப்பகுதி அறுந்துவிடும். ஒற்றை நாற்று நடவு முறையில் நீண்டநாள் பயிராக இருந்தால் 25 சென்டிமீட்டரும், குறுகியகாலப் பயிராக இருந்தால் 23 சென்டிமீட்டரும் இடைவெளி விட வேண்டும். ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்யும்போது பயிருக்குக் காற்றோட்டம் அதிகம் கிடைக்கும். நிலத்தில் சேறு அதிகமாகத் தங்குவதால் கைக்களைதான் சிறந்தது. ஒற்று நாற்று முறையில் எலித் தொல்லை இருக்காது. பூச்சித் தாக்குதலும் கட்டுக்குள் இருக்கும். பயிர் நன்றாகக் கிளைத்து வளரும். ஒரு நாற்றுக்குச் சுமார் 40 கிளைகள் வரை கிளைக்கும்.

நடவு செய்த பத்து நாள்கள் கழித்து ஐந்து நாள்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஐந்து லிட்டர் ஜீவாமிர்தக் கரைசல், ஐந்து லிட்டர் வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் எடுத்து 40 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் தலா 50 மி.லி சூடோமொனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை அடியில் ஓட்டையிடப்பட்ட பிளாஸ்டிக் டிரம்மில் ஊற்றி, வயலின் வாய் மடைப் பகுதியில் வைக்க வேண்டும். ஜீவாமிர்தக் கரைசல் பாசன நீரில் கலந்து வயல் முழுவதும் சீராகப் பரவிவிடும். பாரம்பர்ய நெல் பயிரில் பூச்சித்தாக்குதல் இல்லை. அப்படியிருந்தால் நொச்சி, வேம்பு, புங்கன், ஊமத்தம், நுணா ஆகிய ஐந்து இலைக் கரைசல் தயாரித்துத் தெளிக்கலாம். ஆத்தூர் கிச்சிலிச் சம்பா 140 நாள்களில் அறுவடையாகிவிடும்.

விருது வாங்கிக் கொடுத்த  பாரம்பர்ய நெல் சாகுபடி!

மீன் குட்டைகள்!

“நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் என் பண்ணையில 9 பண்ணைக்குட்டைகள் அமைச்சிருக்கேன். 300 சதுரமீட்டர்கொண்ட குட்டையில் உழுது, அதுல சாணத்தைக் கலந்து, கால்நடைப் பல்கலைக்கழகம் மூலமா இலவசமாகக் கொடுக்கப்பட்டிருந்த 300 மீன் குஞ்சுகளை விட்டேன். ஆறு மாசம் கழிச்சு, ஒரு மீன் கால் கிலோ எடையில 80 கிலோ மீன்கள் கிடைச்சது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு வித்தது மூலமா 12,000 ரூபாய் செலவு இல்லாம லாபம் கிடைச்சது. மீன் குட்டையைச் சுற்றி அகத்தி மரங்கள், கோ-4 தீவனப்புல் வகைகளை வளர்க்கிறேன். மாடுகளுக்குத் தீவனமும் கிடைக்கும். மீன் குட்டைகள் மூலம் நிலத்தடி நீரும் பெருகுது. இப்போ 12 பெட்டிகள்ல தேனீக்கள் வளர்க்க ஆரம்பிச்சிருக்கேன். தேனீ வளர்ப்பு மூலம் தென்னை, மா மரங்கள் வழக்கத்தைவிட அதிக அளவுல காய்க்குது. மகசூலும் கூடுதலாகக் கிடைக்கத் தொடங்கி இருக்குது” என்கிறார் ரகுபதி.

கைகொடுக்கும் மண்புழு உரம்!

ண்புழு உரம் தயாரிப்பு குறித்துப் பேசும் ரகுபதி, “சித்தாமூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில மண்புழு உரம் தயாரிக்கிறதுக்கான பயிற்சி கொடுத்தாங்க. அதுல விரைவாக மட்க வைக்கும்கிறதுக்காக உயர் ரக மண்புழுக்களைக் கொடுத்தாங்க. ஆனா, நான் என் நிலத்துல இருந்த நாட்டு மண்புழுக்களைக்கொண்டே மண்புழு உரம் தயாரிச்சேன். தோப்புகள்ல இருக்கும் சருகுகளைச் சேகரிச்சு குவியலாக்கி, அதுல மண்புழுக்களை விட்டோம்.

அதுக்கே நிலத்தில மண்புழுக்கள் அதிகரிச்சிடுச்சு. தேசிய வேளாண் நிறுவனம் மூலம் மண்புழு தயாரிக்கும் குடிலை இலவசமாகக் கட்டிக் கொடுத்தாங்க. இதுல ஒரு தடவைக்கு 500 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம். அதேபோல அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் வைக்கோலை எரிக்காமல் அங்காங்கே சேகரிச்சு சாணத்தைத் தெளிச்சுவிடுவோம்.

அது மூலமாவும், சீக்கிரத்துல மட்கிவிடும். நிலத்தோட கரிமச்சத்தை அதிகரிக்கிறதுக்கு மண்புழு உரம் ரொம்பவே கைகொடுக்குது. ஏக்கருக்கு 100 கிலோ மண்புழு உரம் கொடுத்துட்டு வந்தாலே போதும், மண் நல்லா வளமாகிடும்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism