Published:Updated:

விவசாயிகளுக்கு பாரம்பர்ய நெல் விதைகள் இலவசம்; களைகட்டிய ராமநாதபுரம் நெல் திருவிழா!

பாரம்பரிய நெல் திருவிழா

விவசாயத்தில் ரசாயனங்களை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் மண் மற்றும் மனித ஆரோக்கியம் சீர்குலைந்துள்ளது. ஒவ்வொரு விவசாயியையும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய வைக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்

விவசாயிகளுக்கு பாரம்பர்ய நெல் விதைகள் இலவசம்; களைகட்டிய ராமநாதபுரம் நெல் திருவிழா!

விவசாயத்தில் ரசாயனங்களை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் மண் மற்றும் மனித ஆரோக்கியம் சீர்குலைந்துள்ளது. ஒவ்வொரு விவசாயியையும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய வைக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்

Published:Updated:
பாரம்பரிய நெல் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கிரியேட் நமது நெல்லை காப்போம் மற்றும் முகமது சதக் பொறியியல் கல்லூரி‌ இணைந்து 16-வது பாரம்பரிய நெல் திருவிழாவை நடத்தியது. இதில் கலந்து கொண்ட 200 விவசாயிகளுக்கு தூயமல்லி, கறுப்புக் கவுனி, சீரகச் சம்பா, தங்கச் சம்பா, கருங்குறுவை, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா ஆகிய பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டன.

கிரியேட் அமைப்பின் தலைவர் துரைசிங்கம் பேசும்போது, ''உணவுப் பாதுகாப்பிற்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் விவசாயம் பெரும் பங்காற்றி வருகிறது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலன், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நாம் பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பாரம்பரிய நெல் விதைகள்
விவசாயிகளுக்கு வழங்கப்படும் பாரம்பரிய நெல் விதைகள்

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதலில் உள்ள சிக்கல்களை கலைந்து குறைந்தபட்ச ஆதரவு விலையை நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்து அதனை பொது விநியோகத் திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.கன்னல்யா, "விவசாயத்தில் ரசாயனங்களை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் மண் மற்றும் மனித ஆரோக்கியம் சீர்குலைந்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதால், ​​அவை வெவ்வேறு மண் நிலைகள், மண் சார்ந்த தன்மை, வறட்சியை தாங்கும் திறன் மற்றும் மருத்துவத் தன்மையில் அதன் செழுமை ஆகியவற்றை மாற்றியமைக்கிறது'' என பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விழாவின் நிறைவில் நம்மிடம் பேசிய அவர், ''தமிழக முழுவதும் தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி, காவிரி, வைகை என மண்டல வாரியாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள இரண்டு மாவட்டங்களில் இந்த பாரம்பரிய நெல் திருவிழாவை நடத்தி வருகிறோம். தற்போது கடைகோடி மாவட்டமான ராமநாதபுரத்தில், இந்த 16வது நெல் திருவிழா நடத்தி முடித்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை இலவசமாக கொடுத்து வருகிறோம். இந்த மாவட்டத்தில் 200 விவசாயிகள் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு இந்த பாரம்பரிய நெல் விதைகளை வழங்கியுள்ளோம். விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வது குறித்தும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த நெல் திருவிழாவின் நோக்கம். தற்போது கூடுதலாக விவசாயிகள் சாகுபடி செய்யும் விளைபொருட்களை எப்படி மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு விவசாயியையும் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய வைக்க வேண்டும் என்ற இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

கோப்பு படம்
கோப்பு படம்

விழாவில் கலந்து கொண்ட விவசாயி ராமரிடம் பேசினோம்...

''இந்த‌ நெல் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள் இலவசமாக கொடுத்துள்ளனர். ஏற்கனவே சாகுபடி செய்து வரும் நெல் ரகத்திற்கு மாற்றாக இந்த பாரம்பரிய நெல் விதைகளை சாகுபடி செய்தால் மண்ணிற்கு பாதிப்பு ஏற்படாது. உபரி அதிகமாக கிடைக்கும் என கூறியுள்ளனர். நடப்பாண்டு இந்த பாரம்பரிய நெல்லை சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கான ஆலோசனைகளையும் இவர்களிடம் பெற்றுள்ளேன். இந்த பாரம்பரிய நெல் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தினால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என கூறினார்.

விழாவில் விவசாயிகள், நுகர்வோர் சங்க பிரதிநிதிகள், நம்மாழ்வார் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.