Published:Updated:

“வியாபாரிகிட்ட 400 ரூபாய்... நேரடி விற்பனையில் 1,200 ரூபாய்!” - இயற்கையில் கலக்கும் ‘காணி’கள்!

காணி அங்காடி
பிரீமியம் ஸ்டோரி
காணி அங்காடி

அங்கீகாரம்

“வியாபாரிகிட்ட 400 ரூபாய்... நேரடி விற்பனையில் 1,200 ரூபாய்!” - இயற்கையில் கலக்கும் ‘காணி’கள்!

அங்கீகாரம்

Published:Updated:
காணி அங்காடி
பிரீமியம் ஸ்டோரி
காணி அங்காடி

லைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், தங்கள் விளைபொருள்களை நேரடியாக விற்பனை செய்வது சாத்தியமில்லாத விஷயம். பெரும்பாலும் இடைத் தரகர்களை நம்பித்தான் இருக்கிறது, இவர்களது பொருளாதாரம். இவர்களிடம் சொற்ப விலைக்கு வாங்கிச் செல்லும் தரகர்கள், அதிக லாபம் அடைந்து வந்தனர்.

இந்த அவலத்தைச் சரி செய்யும் வகையில், காணி பழங்குடியின மக்கள் இயற்கை முறையில் விளைவிக்கும் விளைபொருள் களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருப்பதோடு, அவற்றுக்கு இயற்கை விளைபொருள் சான்றிதழும் பெற்றுத் தந்திருக்கிறது, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். தற்போது பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் இருக்கிறது காணி மக்களின் அங்காடி.

மேற்குத் தொடர்ச்சி மலையில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே சின்ன மயிலாறு, அகத்தியர் காணிக் குடியிருப்பு, சேர்வலாறு, இஞ்சிக்குழி ஆகிய பகுதிகளில் காணி இன மக்கள் வசிக்கிறார்கள். தேன் எடுத்தல், விவசாயம் போன்ற தொழில்களைச் செய்து வருகிறார்கள், இம்மக்கள். இவர்களின் 40 வகையான உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய... வனத்துறை, வேளாண்மைத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து ‘காணி பழங்குடியின வாழ்வியல் அங்காடி’ ஒன்றை உருவாக்கியிருக்கின்றன.

கணேசன்
கணேசன்


இந்த முயற்சியை முன்னெடுத்த வனத்துறை அதிகாரி கணேசனிடம் பேசினோம். “நான் வேளாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றவன். அதனால் இயல்பிலேயே எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் 47 காணி குடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு 289 ஏக்கர் நிலம் கொடுக்கப் பட்டிருக்கிறது. அவர்கள், தேன், பழங்கள் உள்ளிட்ட வனப்பொருள்களைச் சேகரிக் கிறார்கள். வாழை, தினை, கிழங்கு வகைகள், காந்தாரி மிளகாய், நெல்லிக்காய் உள்ளிட்ட வற்றைப் பயிரிடுகிறார்கள்.

பயிற்சிக்குக் கிடைத்த பலன்

2018-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் பணியில் சேர்ந்ததும் காணி மக்களை அழைத்து, அவர்களின் மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பேசினேன். அவர்களுக்கு மின்சாரம், குடிநீர்த் தேவை போன்றவற்றைத் தீர்த்து வைத்தோம். பிறகு, அவர்களின் விவசாயத் தேவை பற்றிப் பேசினோம். அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் நல்லது எனத் தோன்றியதால் கிள்ளிகுளம் விவசாயக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று மண்புழு உரம் தயாரிப்பையும் தேனி வளர்ப்பையும் பார்வையிட வைத்து பயிற்சிகளை அளித்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. இப்போது அவர்களே மண்புழு உரம் தயாரித்து விற்கிறார்கள். தேனி வளர்ப்பிலும் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

காணி அங்காடி
காணி அங்காடி
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி அங்காடி
காணி அங்காடி
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்


கடந்த ஜனவரி மாதம் மதுரையில் நடந்த இரண்டு நாள் விவசாய உற்பத்திப் பொருள் களுக்கான கண்காட்சிக்குக் காணி மக்களின் விளைபொருள்களைக் கொண்டு சென்றோம். நாங்கள் ஆச்சர்யப்படும் வகையில் அரை நாளிலேயே அனைத்துப் பொருள்களும் விற்பனையாகிவிட்டன. வியாபார விசாரணைகளும் நிறைய வந்தன. அதன் பிறகுதான் காணி மக்களின் பொருள்களுக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பு புரிந்தது.

பிறகு, நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மைத் துறையின் உதவியுடன் பாளையங்கோட்டை உழவர் சந்தையில் சனி, ஞாயிற்றுக்கிழமை களில் மட்டும் காணி மக்களின் பொருள்களைச் சந்தைப்படுத்தினோம். அதிலும் முதல் நாளில் ரெண்டு மணி நேரத்தில் அனைத்துப் பொருள்களும் விற்பனையாகி விட்டன. மக்களிடம் கிடைத்த இந்த வரவேற்பு காரணமாகவே காணி மக்களின் 40 விளைபொருள்களுக்கு இயற்கை விவசாயப் பொருள் எனச் சான்று பெற்றோம்” என்றார்.

தற்போது காணி மக்களின் விளைபொருள்கள் அனைத்தும் ‘காணி’ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. தேன், மிளகு, கிராம்பு, பழங்கள், காந்தாரி மிளகாய் போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. மருத்துவக் குணம் மிகுந்த சில மூலிகைகளையும்கூட இவர்கள் விற்பனை செய்கிறார்கள்.

சுரேஷ்
சுரேஷ்

ரசாயனச் சுவடு இல்லாத மிளகு
திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் எஸ்.சுரேஷ், “காணி மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கிடைக்கும் பொருள்களைச் சேகரிக்கிறார்கள். அவர்களின் பொருள்களைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். காணி மக்களின் அதில் ரசாயனத்தின் சுவடு எதுவும் இல்லாததால் 40 வகையான பொருள்களுக்கும் உடனடியாகச் சான்று கிடைத்துவிட்டது. அதனால், மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

காணி அங்காடி
காணி அங்காடி
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்
காணி மக்களின் விளைபொருள்கள்

சுத்தமான தேன்

பொதிகைமலை ஆதிவாசி காணிக்கார சமுதாய முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி, “முன்னாடி ஒரு லிட்டர் தேனை எங்ககிட்ட 300, 400 ரூபாய்க்கு வாங்கிட்டுப் போய் அதிகமான விலைக்கு விற்பனை செய்வாங்க. இப்போ நாங்க, 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்றோம். அதிக தேவை இருக்கு. ஆனா, எங்களால கொஞ்சம்தான் கொடுக்க முடியுது. இதுவரைக்கும் எங்களை ரொம்ப ஏமாத்திட்டாங்க. இபோதுதான் விடிவு கிடைச்சிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,

காணி அங்காடி, செல்போன்: 94431 30569

‘காணி’ பெயரிலேயே விற்பனை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் பேசியபோது, “கொரோனா பேரிடர் காலத்தில் காணி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நான் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிக் குறைகளைக் கேட்டறிந்தேன். பிறகு அவர்களின் பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு வர சரக்கு வாகனம் வாங்கிக் கொடுத்தோம். காணி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வனத்துறை மற்றும் வேளாண்மைத்துறையுடன் இணைந்து இந்த அங்காடியைத் திறந்துள்ளோம். வனச்சூழல் வடிவில் இந்த அங்காடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் பொருள்களுக்கு உள்ளூரில் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது.

விஷ்ணு
விஷ்ணு


இவர்களின் பொருள்களை ‘காணி’ என்ற பெயரிலேயே சந்தைப்படுத்த உள்ளோம். இவர்களின் பொருள்களைச் சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம் விமான நிலையங்களில் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன், அமேசான் போன்ற நிறுவனங் களுடன் இணைந்து உலக அளவில் கொண்டு செல்லவும் முயற்சிகள் நடக்கின்றன. வனத்துறையுடன் சேர்ந்து காணி சமுதாய மாணவ, மாணவிகள் அரசுப் பணிகளில் சேரும் வகையில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். இதுவரை இரு பெண்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வனத்துறையில் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். வருங்காலங்களில் வேலை வாய்ப்பில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.